Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கப்புள் பிரண்ட்லி (பட விமர்சனம்)

படம்: கப்புள் பிரண்ட்லி

நடிப்பு: சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி

தயாரிப்பு: அஜய் குமார் ராஜு

இசை: ஆதித்யா ரவீந்திரன்

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: அஸ்வின் சந்திரசேகர்

பிஆர்ஓ: சதீஷ் குமார் (S2 Media)

இன்டீரியர் துறையில் பெரும் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணுகிறான் சிவா. அதேபோல் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறாள் மித்ரா. இவர்கள் தங்கள் பயணத்தில் நடத்தும் சந்திப்பில் காதலில் கைகோர்க்கின்றனர். இதில் கடும் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது அதிலிருந்து இருவரும் மீண்டார்களா என்பது தான் கிளைமாக்ஸ்.

ஹீரோ சிவாவாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன் ஒரு நடிகராக தெரியாமல் சக நண்பர் போல் தெரிகிறார். தனது பயணத்தில் சந்திக்கும் சவால்களை எதார்த்தமாக எதிர் கொண்டு காட்சிகளில் அவர் தன்னை ஒன்ற வைத்திருப்பது ஒவ்வொரு சீனிலும் தெரிகிறது.
எந்த நடிகரின் சாயலும் தெரியாமல் தனக்கான ஒரு தனி எதார்த்த பாணியை வைத்துக்கொண்டு நடித்திருக்கும் சந்தோஷ் புதிய பட இயக்குனர்களின் தேர்வாக இருப்பார்.

ஹீரோ மட்டும் கதையில் ஜொலித்தால் போதாது ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் அதற்கு சமமான நடிப்பை வழங்கினால்தான் பேலன்ஸ் சரியாக இருக்கும். அந்த நடிப்பு பேலன்ஸை சரியாகவே செய்திருக்கிறார் மித்ராவாக நடித்திருக்கும் மானசா வாரணாசி.

தனது லட்சியத்தில் அவர் கொண்டிருக்கும் உறுதி அதே சமயம் தனது காதல் மீதும் மற்றும் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் பாசம் எல்லாமே சம விகிதத்தில் வெளிப்படுவதால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

லிவிங் டுகெதர் பாணியில் வாழும் சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி இருவரின் வாழ்க்கையில் நடக்கும் அந்த திடீர் திருப்பம் கதையை வேறு திசைக்கு பயணிக்க செய்கிறது.

யோகி பாபு, சுனில் ரெட்டி இருவரும் வழக்கம் போல் உந்து சக்தியாக பயன்பாட்டு இருக்கிறார்கள்.

அழகான இந்த காதல் கதையை அஜய் குமார் ராஜு தயாரித்திருக்கிறார்.

ஆதித்யா ரவீந்திரன் இசையும், தினேஷ் புருஷோத்தமன் கேமராவும் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் ஒரு காதல் கதைக்கு வித்தியாசமான ஒரு திரைக்கதை அமைத்து அதை உணர்ச்சி பெருக்குடன் இயக்கியிருப்பது பாராட்டத்தக்கது. சினிமா தனம், செயற்கைத்தனம் இல்லாமல் காட்சிகளை இயல்பாக படமாக்கி இருப்பது பிளஸ் ஆக அமைகிறது.

கப்புள் பிரண்ட்லி – இளசுகளின் பயணம்.

Review By
K.Jayachandhiran
trending cinemas now com

 

Related posts

அமெரிக்காவில் நடந்த ராம் சரணின் “கேம்சேஞ்சர்” பட விழா

Jai Chandran

Ram Pothineni Shooting For RAPO19 From 12th July

Jai Chandran

“Demonte Colony 2” gets a Grand Golden Touch With BTG Universal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend