Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வித் லவ் (With Love) பட விமர்சனம்

படம்: வித் லவ் (With Love)

நடிப்பு: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன் , பருத்திவீரன் சரவணன், ஹரிஷ் குமார் , காவ்யா அனில்
சச்சின் நாச்சியப்பன்
சாச்சனா,, ஆர் ஜே ஆனந்தி,
டிம்பிள் கண்ணா,
சித்தார்த்

தயாரிப்பு:சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான்,

இசை: ஷான் ரோல்ட்

ஒளிப்பதிவு: ஷிரியாஸ் கிருஷ்ணா

இயக்கம்: மதன்

பி ஆர் ஓ: யுவராஜ்

பள்ளியில் படிக்கும் சத்யா (அபிஷன் ஜீவிந்த்) உடன் படிக்கும் முஸ்லிம் பெண் அனிஷா (காவ்யா அனில்) மீது காதல் கொள்கிறார்
ஆனால் காதலை சொல்லத் தயங்குகிறார். காதல் தோல்வியில் இருக்கும் சத்யாவுக்கு திருமணம் செய்ய எண்ணும் அவரது அக்கா நீ” போய் மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) சந்தித்துப் பேசு பிடித்திருந்தால் திருமணம் செய்யலாம் என்கிறார். மோனிஷாவை சந்திக்கிறான் சத்யா. இருவரும் தங்கள் வாழ்வில் வந்துபோன பழைய காதலை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்பிறகு எதிர்பாராத முடிவு எடுக்கின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய
அபிஷன் ஜீவந்த் ஹீரோவாக இப்படத்தில் அறிமுமாகியிருக்கிறார். மேக் அப் செய்து பந்தா காட்டாமல் எதார்த்தமான சக தோழனைப்போல் மனதில் பதிகிறார்.

பள்ளி யூனிபார்ம் போட்டு வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அபிஷன் எதிர் பெஞ்சில் அமர்ந்திருக்கும் காவியாவை, அவர் பார்க்கும்போது பார்வையை திருப்பிக் கொள்வதும் பின்னர் அவரை சைட் அடிப்பதுமாக அபிஷன் செய்யும் சேட்டைகள் ரசிக்க முடிகிறது.
தனது பிறந்த நாளன்று சக மாணவர்களுக்கு காவியா சாக்லேட் கொடுப்பதும் அபிஷன் அருகில் வந்ததும் அவருக்கு சாக்லேட் கொடுப்பதுடன் கைகுலுக்கி வாழ்த்து பெற்றதும், தன்னை மட்டும் கையை பிடித்து வாழ்த்து பெற்றதற்காக பெருமிதப்படும் அபிஷன் அடுத்த நொடியில் தனது நண்பர்களுக்கும் அடுத்தடுத்து காவியா கைகுலுக்குவது கண்டு அபிஷன் முகத்தில் அசடு வழியும்போது அரங்கில் லேசான புன்னகை தவழ்கிறது.

காதல் தோல்வியில் கதறி அழுவதும், நடன காட்சியில் விறுவிறுப்பு காட்டுவதுமாக அபிஷன் தன்னை ஒரு நல்ல நடிகராக நிரூபித்திருக்கிறார்.

காபி ஷாப்பில் அனஸ்வராவை சந்திக்க வரும் அபிஷன் என்ன பேசுவது என்று திகைத்து நிற்பதும் உடனே அனஸ்வரா, “உன்னுடைய பழைய காதலைப் பற்றி சொல்” என்று கேட்டதும் அபிஷன் ஷாக் ஆவதும், பின்னர் அனஸ்வரா தனது பழைய காதலை பற்றி சொல்வதும் ஜென்சி கிட்ஸ்களுக்கு இடையே புரிதலான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

காதலில் தோற்றுவிட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்தது, தாடியை வளர்த்துக்கொண்டு கையில் பாட்டிலும் சிகரெட்டுமாக தேவதாஸ் போல் இளவட்டங்கள் வலம் வந்தது அந்தக் காலம், காதலில் தோற்றாலும் மனதில் உறுதி வைத்துக்கொண்டு அடுத்து என்ன என்று வாழ்க்கையை நோக்கி பயணிப்பதுதான் இன்றைய காதல் புரிதல் என்பதை அபிஷனும், அனஸ்வராவும் எதார்த்தமாக புரிய வைத்திருப்பது பல இளவட்டங்களின் வாழ்க்கையில் மீண்டும் தன்னம்பிக்கையை துளிர்ச் செய்யும்

பழைய காதலியை தேடி அபிஷனும், பழைய காதலனை தேடி அனஸ்வராவும் புறப்பட தொடங்கியதும் இவர்கள் காதல் எங்கு போய் முடியுமோ என்ற படபடப்பு மனதுக்குள் தொற்றிக் கொள்கிறது.

இஸ்லாமிய பெண் அனுஷாவாக நடித்திருக்கும் காவியா கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார்.

பருத்தி வீரன் சரவணன், தேனி முருகன் மேலும் ஹரிஷ் குமார்,
சச்சின் நாச்சியப்பன்,
சாச்சனா, R.J. ஆனந்தி,
டிம்பிள் கண்ணா,
சித்தார்த் ஆகியோரும் கதாபாத்திரத்திற்கு வெளியே வராமல் நடித்து கவர்கிறார்கள்.

சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்,

ஷான் ரோல்ட் இசையில் ஐயோ காதலே பாடல் மனதில் நிற்கிறது.

ஷிரேயாஸ் கிருஷ்ணா கேமரா இளமை விருந்து படைத்திருக்கிறது

புதுமுக இயக்குனர் மதன், 2கே கிட்ஸ் காதலின் உற்சாகத்தை பெரு வெள்ளமாக கரைபுரள செய்திருக்கிறார்.

வித் லவ் – காதல் தோல்வி  கடப்பது வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான நகர்வு என்பதை உணர்த்தும் படைப்பு.

Review By

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

Related posts

Veerame Vaagai Soodum Movie Exclusive Stills

Jai Chandran

Suriya starrer ‘Kanguva’ s second look out now!

Jai Chandran

ஆதரவற்ற குழந்தைகளுடன் அருண் விஜய் பிறந்த நாள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend