Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரஜினி கேங் (பட விமர்சனம்)

படம்: ரஜினி கேங்

நடிப்பு: ரஜினி கிஷன், துவிகா, முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி

தயாரிப்பு: சி எஸ் பதம்சந்த், சி அரியந்த் ராஜ், ரஜினி கிஷன்

இசை: எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்

ஒளிப்பதிவு: எஸ் எஸ் சதீஷ்குமார்

இயக்கம்: ரமேஷ் பாரதி

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

ஹீரோ ரஜினி கிஷன் அவரது காதலி துவிகா இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். அவர்களை முனீஷ்காந்த் தனது காரில் ஏற்றுக் கொண்டு தப்பிக்க உதவுகிறார். இந்நிலையில் நடுவழியில் திருடன் கல்கி அந்த காரில் ஏறிக் கொள்கிறார்.
இரவு நேரத்தில் பயணிப்பதில் இவர்கள், ஏடாகூடமான இடத்தில் சிக்கி விடுகிறார்கள். இதற்கிடையில் இவர்களை சிலர் வலைபோட்டு தேடுகிறார்கள்.  பரபரப்பில் காதல் ஜோடிக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் அது அத்துடன் முடியவில்லை. அமானுஷ்ய தளத்துக்கு கதையை நுழைக்கிறது. அங்கு நடக்கும் காமெடி கலாட்டா கிளைமாக்ஸை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பது சஸ்பென்ஸ்.

அறிமுக நடிகர் ரஜினி கிஷன் படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஹீரோவுக்கான முகவெட்டும், லேசாக கார்த்தி சாயலும் இருக்கிறது. நடனத்தில் காட்டும் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் பிளஸ். நடிப்பில் இன்னமும் கவனம் செலுத்த வேண்டும். முதல் படம் என்றாலும் கேமரா பயமில்லாமல் நடித்திருப்பது அவரது தன்நம்பிக்கையை உறுதி செய்கிறது.

துவிகா தன்னை ஹீரோயினாக நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சியும் செய்திருக்கிறார். கிக் ஏற்றும் பாடலில் கவர்ச்சி சொட்ட வைக்கிறார்.

ரஜினி கிஷன் கட்டும் தாலியில் பேய் இருக்கிறது என்ற.ஒரு புது ரூட்டை கண்டுபிடித்திருக்கும் இயக்குனர் ரமேஷ் பாரதி அதை வைத்தே படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் ஹாரர் காமெடி களத்தில் கொண்டு சென்று ஒப்பேற்றி விடுகிறார்.

கூல் சுரேஷ் தாய்மாமனாக வந்து லந்து செய்கிறார். முனிஷ்காந்த், கல்கி காமெடி வெடி வெடிக்க முயற்சிக்கிறார்கள்.

எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசை கேட்ட இசைபோல் இருந்தாலும் பாடல்கள் தாளம் போட வைக்கிறது.

ரஜினி கேங் – பொழுது போகும்.

Review By

K Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படப்பிடிப்பு

Jai Chandran

ராஜ்யசபை எம்பி ஆகிறார் கமல்ஹாசன்: முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

Jai Chandran

Rocky is making its way to theatres!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend