Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டீசல் (பட விமர்சனம்)

படம்: டீசல்

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, காளி வெங்கட் , விவேக் பிரசன்னா, சச்சின் கெதக்கெர், ஜாகிர் உசேன், தங்கதுரை, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், மாறன், கே பி ஒய் தீனா, அபூர்வா சிங்

தயாரிப்பு: தேவராஜுலு மார்க்கண்டேயன்

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன், எம் எஸ் பிரபு

இயக்கம்: சண்முகம் முத்துசாமி

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

கதை: 90 கால கட்டங்களுக்கு முன் வடசென்னை பகுதியில் ஆயில் குழாய்கள் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களை அடித்து துரத்திவிட்டு ஆயில் குழாய்களை பதிக்கிறார்கள். கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் மீனவர்கள் மனோகர் (சாய்குமார்) அவரது மகன் வாசு (ஹரிஷ் கல்யாண்) ஆயில் குழாயில் ஓட்டை போட்டு க்ரூட் ஆயிலை திருடி அதிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரித்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதில் இன்னொரு கூட்டமும் தலையிட்டு ஆயில் திருடுகிறது. இந்த போட்டியை பயன்படுத்தி தொழில் அதிபர் கடற்கரை துறைமுகம் அமைக்க சதி திட்டமிடுகிறார். இதன் முடிவு என்வாகிறது என்பதை உண்மை பின்னணியில் கதை விளக்குகிறது.

ஹரிஷ் கல்யாண் முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம். அவரது உடல் மொழி, ஆக்ஷன் வேகம் எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஆனால் ஏனோ முகத்தில் லேசான அச்சம் படர்ந்திருக்கிறது.

இன்ஸ்பெக்டர் வினய் கே ஹரிஷ் இருவருக்கும் இடையே நடக்கும் வாய்த் தகறாறு, அடிதடி எல்லாமே நிஜத்திலேயே பகை இருக்குமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது சுடு எண்ணெய் கடுகாக வெடிக்கிறார்கள்.

ஹரிஷ், அதுல்யா காதல் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நகர்கிறது. பச்சை குத்திக்கிட்டேன்..  ஹிட் அடித்த கானா பாடல்.  மீண்டும் ஒருமுறை தாளம் போட வைக்கிறது.

சாய் குமார், விவேக் பிரசன்னா, சச்சின் கெதக்கெர், ஜாகிர் உசேன், தங்கதுரை, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், மாறன், கே பி ஒய் தீனா, அபூர்வா சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அனன்யாவை வீணடித்திருக்கிறாரகள்

தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்திருக்கிறார்

திபு நினன் தாமஸ் இசை ரகத்துக்கு ஒன்றாக பாடல் தந்திருக்கிறது.

அலை கடலின் மோதலையும் சமாளித்து அழகான காட்சிகளாக கடல் பகுதி காட்சிகளை படமாக்கியிருக்கிறது ரிச்சர்டு எம் நாதன், எம் எஸ் பிரபு ஆகியோரின் கேமரா.

எங்கோ நடக்கும் ஆயில் திருட்டு மக்கள் வாழ்க்கையை எப்படி நேரடியாக பாதிக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனர் சண்முகம் முத்துசாமி திரைக்கதையில் ஆக்ஷனுக்கு தந்த முக்கியத்துவத்தை செண்டிமெண்டுக்கு தராதது ஈடுபாட்டை குறைக்கிறது.
படமும் சிந்துபாத் கதைபோல் நீள்வது கிளைமாக்ஸ் வருவதற்குள் சோர்வை ஏற்படுத்துகிறது. 10 நிமிட கத்திரி வேலை பாக்கியிருக்கிறது.

டீசல் – மீனவ மக்களின் வலியும் போராட்டமும்.

 

Review By
K Jayachandhiran
trndingcinemasnow.com

Related posts

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இளையராஜா கொண்டாட்டம்..

Jai Chandran

Treasurer TFAPA & Chairman of CII T. G. Thyagarajan Sent a Letter To Finance Minister

Jai Chandran

First Look & Motion Poster of Irumban

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend