Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கெவி (பட விமர்சனம்)

படம்: கெவி

நடிப்பு: ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லைடா, சார்லஸ் வினோத், விவேக் மோகன், ஜீவா, காயத்ரி, உமர் பரூக், காமன்மேன் கணேஷ், ஜெகத்ராமன், அபிமன்யு மீனா

தயாரிப்பு: மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி,  ஜெகன் ஜெய சூர்யா

இசை: பாலசுப்பிரமணியன் ஜி, ராஜா ரவிவர்மா

ஒளிப்பதிவு: ஜெகன் ஜெய சூர்யா

இயக்கம்: தமிழ் தயாளன்

பிஆர்ஓ: ஜான். ஏ

 

கொடைக்கானல் பகுதியில் உள்ள மலை கிராமம் கெவி. காலம்காலமாக அங்கு மக்கள் வாழ்ந்தாலும்  சாலை வசதி, மருத்துவ வசதி கிடையாது இப்படி முக்கிய வசதிகள் எதுவும் அப்பகுதியில் இல்லாததால் மக்கள் கஷ்டத்துக்குள்ளாகிறார்கள். அரசிடம் பல கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்காததால் இருப்பதைக் கொண்டு வாழ்கிறார்கள் . இந்நிலையில் ஆதவனுக்கும் போலீஸ்க்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதை அவமானமாக எடுத்துக் கொண்ட போலீஸ் ஆதவனை கொல்வதற்கு திட்டமிட்டு சுற்றி வளைக்கிறது. இந்நிலையில் ஆதவன் மனைவி ஷீலா நிறைமாத  கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு பிரசவ வலி வரவே மருத்துவ வசதி இல்லாததால் அவரை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள். இதில் அவர் உயிரும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரும் ஊசலாடுகிறது.  இறந்து விடுவார்களே என்ற நிலையில் அவர்களது கதி என்னவானது என்பதற்கு  கிளைமாக்ஸ் நெஞ்சை பதற வவைக்கும் விதமாக பதில் அளிக்கிறது.

ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் தேர்தல் வருகிறது அப்போது கழுதை மீது ஓட்டுப்பெட்டி ஏற்றிச் சென்று மலை கிராம மக்களிடம் வாக்கை பெற்றுக் கொள்கிறார்கள்.. மலை கிராமத்தின் அவல நிலைக்கு மட்டும் தீர்வு கிடைப்பதில்லை இந்த கருவை மையமாக வைத்து தான் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை இயக்கியிருக்கிறார் தமிழ் தயாளன்.

மலைக் கிராமத்தில் வாழும் தம்பதிகளாக ஆதவான், ஷீலா நடித்திருக்கின்றனர். முதலில் சில காட்சிகள் இருவரும் கொஞ்சி மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்சிகள் வருகின்றன.

தன்னை தாக்கி விட்டான் என்பதற்காக ஆதவனை அராஜக போலீஸ் கூட்டம் காட்டுப்பகுதியில் வழிமடக்கி தாக்கு குற்றியுரும் கொலை உயிருமாக்குகிறார்கள். ஆதவனை லட்டியால் கண்மண் தெரியாமல் தாக்கும் போது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலி எடுக்கிறது.

அதேபோல் பிரசவ வலி வந்ததும் ஷீலா கதறும் காட்சிகள் எப்படியாவது இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி விட மாட்டார்களா என்று நெஞ்சு பதறுகிறது.

மற்றபடி கும் இருட்டில் கிராம மக்கள் டோலி கட்டி அதில் ஷீலாவை தூக்கி காட்சிகள் கடும் உழைப்புக்கு இடையே படமாக்கப்பட்டு இருப்பது எவ்வளவு விருது கொடுத்தாலும் போதாது

ஜாக்குலின் லைடா, சார்லஸ் வினோத், விவேக் மோகன், ஜீவா, காயத்ரி, உமர் பரூக், காமன்மேன் கணேஷ், ஜெகத்ராமன், அபிமன்யு மீனா  என நடித்திருக்கும் ஒவ்வொருவரும் உழைப்பைக் கொட்டி இருக்கிறார்கள்.

மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி,  ஜெகன் ஜெய சூர்யா தயாரித்து இருக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியன் ஜி, ராஜா ரவிவர்மா. இசையில் மெலடி தென்றல் வீசினாலும் ஒப்பாரி அழுகை ஓங்கி இருக்கிறது.

ஜெகன் ஜெய சூர்யா கேமரா மலை மூகடுகளில் தாண்டவம் ஆடி இருக்கிறது.

இயக்குனர் தமிழ் தயாளன் மலைவாழ் மக்களின் வாழ்விலை அவரே மலைவாழ் மக்களில் ஒருவராக வாழ்ந்து அவர்களின் கடினமான வாழ்வியலை கடும் போராட்டத்துக்கிடையே படமாக்கி இருப்பது இயக்குனரின் கடின முயற்சி. அதற்கான பாராட்டுகளாக  படம் வெளியான பிறகு விருதுகளாக குவியும்.

கெவி – மலைவாழ் மக்களின் கடின வாழ்க்கை வெளிப்படுத்தும் கண்ணாடி.

 

By ஜெயச்சந்திர் கே.

www.trendingcinemasnow.com

 

 

Related posts

Second Look Poster of “KattamThan Kadamaiyai Seiyum

Jai Chandran

கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

Jai Chandran

RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend