Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ப்ரீடம் (பட விமர்சனம்)

படம்: ப்ரீடம்

நடிப்பு: சசிகுமார், லிஜோ மோல், சுதேவ் நாயர், மு ராமசாமி, மணிகண்டன்,
ரமேஷ் கண்ணா, மாளவிகா, விஜய் சத்யா, கம்பட்டி மணிகண்டன்

தயாரிப்பு: பாண்டியன் பரசுராமன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார்

இயக்கம்: சத்ய சிவா

பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

இலங்கை போரால் புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வருகின்றனர். அவர்கள் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். முன்னதாகவே இந்தியா வந்த செல்வி (லிஜோ மோல்), கணவர் மாறன் (சசிகுமார்) வருகைக்காக காத்திருக்கிறார். அவரும் வந்து சேர்கிறார். இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பத்தில் முன்னாள் பிரதமர் கொல்லப்படுகிறார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அகதிகள் முகாமில் இருந்து மாறன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்படுகின்றனர். சில நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று பார்த்தால் வருடக்கணக்கில் அங்கேயே  அதைபட்டு  கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து மாறன் உள்ளிட்ட  கைதிகள் கோட்டையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிக்க முயல்கின்றனர். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பரபரப்பாக பதில் அளிக்கிறது.

1995 கால கட்டத்தில் வேலூர் கோட்டை சிறையில் ஈழ தமிழ் விசாரணை. கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்ற உண்மை கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வரும் சசிகுமார் திடீரென்று போலீஸாரால் சுற்றிவளைத்து  கைது செய்யப்படுவது பகீர் காட்சி. இதையடுத்து சசிகுமார் உள்ளிட்ட விசாரணை கைதிகள் வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்படும் காட்சிகள் தொடங்கி கிளைமாக்ஸ் வரை சிறைக்காட்சிகளே படத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

சிறைக்குள் இவர்கள் எப்படி சுரங்கம்.  தோண்டுவார்கள், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் மண் குவியலை எங்கு கொட்டுவார்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு நியாயமான பதில்களை ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது.

தனது ஈழ மக்களுக்காக போலீஸ் உயர் அதிகாரியிடம் சசிகுமார் நேரடியாக மோதும் காட்சிகள் பரபரப்பு. இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் உண்மைச் சம்பவத்தில் நடந்ததா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சசிகுமாரின் கதாபாத்திரமே இதில் சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான்.


சசிகுமார் மனைவியாக நடித்திருக்கும் லிஜோ மோல் எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். சசிகுமாரும் லிஜோவும் ஈழத் தமிழர்கள் பேசும் அதே வழக்கில் பேசுவதெல்லாம் காட்சிக்கு பலமாக நிற்கிறது. கதாபத்திரங்களை மனதுக்கு நெருக்கமாக கொண்டு சென்று நிறுத்துகிறது.

மாளவிகா ஈழத் தமிழர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக வந்த பிறகு கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

படத்தில் தொடக்க காட்சியில் முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தியை ஒரு அமைப்பைச் சேர்ந்த பெண் வெடிகுண்டு தற்கொலை படையாக மாறி குண்டை வெடிக்கச் செய்து படுகொலை செய்வது ஒரு நொடியில் அனல் பிழம்புபை அரங்கம் முழுவதும் கக்கி அதிர விடுகிறது.

சமீபத்தில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் திரைக்கு வந்தது.. அதிலும் ஈழத் தமிழராக சசிகுமார் நடித்திருந்தார் ஃப்ரீடம் படத்திலும் ஈழத் தமிழராக நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்துக்கும்,  இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் பெரிது. டூரிஸ்ட் பேமிலி காமெடி கலந்த  கமர்சியல் படமாக சொல்லப்பட்டது, ப்ரீடம் படம் சிறையில் ஈழத் தமிழர்கள் பட்ட கொடூர சித்திரவதையும், பொறுமை இழந்து அவர்கள்  ஜெயிலை விட்டு தப்பிக்கும் வித்தியாசமான காட்சிகளையும் கொண்டதாக அமைக்கப் பட்டிருக்கிறது.

பாய்ஸ் மணிகண்டன் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம்பிடிக்க முயன்றிருக்கிறார் .

பாண்டியன் பரமசிவம் படத்தை தயாரித்திருக்கிறார்

ஜிப்ரான் இசையும் பாடலும் பலம்.

ஒளிப்பதிவாளர் என். எஸ். உதயகுமார் தனது கேமரா கண்களால் ஈழத் தமிழர்கள் பட்ட சித்திரவதை,  போலீசிடம் வாங்கிய பிரம்படியை கண் முன் நடக்கும் நிகழ்வு போல் படமாக்கி இருக்கிறார்.

இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில்  உணர்ச்சி பொங்க, சோகத்தின் வகிடுகளை நெற்றிச் சுருக்கத்தை அதிகரிக்கிறது.

ஃப்ரீடம் விசாரணை கைதிகளின்  கிரேட் எஸ்கேப்.

By

K Jayachandhiran

 

Related posts

Hombale Films announces next Venture Mahavatar Parashuraam..

Jai Chandran

சந்திரபாபு – குமாரசாமிக்கு மகள் திருமண அழைப்பு தந்த சரத் – ராதிகா

Jai Chandran

கார்பரேட் கையில் சினிமா: கவிஞர் இயக்குநர் பிரியன் புகார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend