Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போதை பொருள் வழக்கில் ஶ்ரீகாந்த் சிறையில் அடைப்பு: கிருஷ்ணாவுக்கு போலீஸ் வலை

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ரோஜா கூட்டம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளத்துடன் அவரை வலை வீசி தேடிவருகிறது போலீஸ்.

தமிழ் நடிகர்களின் போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் அழைத்துள்ளது. அது பற்றி விவரம் வருமாறு:

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் ஒருகிணைந்து செயல்படுகின்றனர்.

சென்ற ஜூன் 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கைது செய்து. சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் ரோஜா கூட்டம் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர். இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை.

பின்னர் ஸ்ரீகாந்தின் ரத்தம் சோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீகாந்த் வீட்​டில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் போதைப் பொருள் காலி பாக்​கெட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அவர் கைது செய்​யப்​பட்டு நேற்று முன்​தினம் இரவோடு இரவாக எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர் செய்​யப்​பட்​டார். அப்​போது, அவர் மாஜிஸ்​திரேட்​டிடம், நான் தவறு செய்து விட்​டேன்
எனது மகனை கவனிக்க வேண்​டி​யுள்​ளது. எனவே, எனக்கு ஜாமீன் தரு​மாறு கண்​ணீர் மல்க கோரிக்கை விடுத்​தார். போதைப் பொருள் தடுப்பு நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​யு​மாறு கூறி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்க மாஜிஸ்​திரேட் உத்​தர​விட்​டார். சிறை​யில் முதல் வகுப்பு வழங்​க​வும் அனு​மதி அளித்​தார்.

முன்​ன​தாக நடிகர் ஸ்ரீகாந்த் போலீ​ஸாரிடம் அளித்த வாக்​குமூலம்: கடந்த 2002-ல் ரோஜா கூட்​டம் என்ற படத்​தில் நடித்​தேன். நடிப்​பில் உச்​சத்​தில் இருந்​த​போது சென்​னையைச் சேர்ந்த வந்​தனா என்ற பெண்​ணுடன் 2008-ல் திரு​மணம் நடை​பெற்​றது. தற்​போது 2 பிள்​ளை​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், என்னை வைத்து அதி​முக முன்​னாள் நிர்​வாகி பிர​சாத் ‘தீங்​கிரை’ என்ற படத்தை இயக்​கி​னார். ஒப்​பந்​தப்​படி முழு பணத்​தை​யும் அவர் தரவில்​லை. நாங்​கள் சந்​தித்​த​போதெல்​லாம் அவர் என்னை மது​பான கூடத்​துக்கு அழைத்​துச் செல்​வார். பின்​னர் போதைப் பொருள் கொடுத்​தார். கடன் உட்பட குடும்ப பிரச்​சினை​யால் போதைப் பொருளை அடிக்​கடி பயன்​படுத்த தொடங்​கினேன்.
அதன் பிறகு ஆப்​பிரிக்க போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ஜான், சேலம் சங்​ககிரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் உள்​ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்​கடி நானே நேரடி​யாக​வும், பிற நபர்​கள் மூல​மாக​வும் போதை வஸ்​துவை வாங்​கினேன். நான் மட்​டும் அல்​லாமல் திரைத்​துறை​யில் 10-க்​கும் மேற்​பட்ட முன்​னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்​படுத்தி வரு​கின்​றனர். நான் தவறு செய்​து​விட்​டேன். இவ்​வாறு கண்​ணீர் மல்க வாக்​குமூல​மாக அளித்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்​தச் சூழலில் இந்த விவ​காரத்​தில் நடிகர் கிருஷ்ணா​வின் பெயரும் அடிபட்​டது. தற்​போது அவரது செல்​போன் சுவிட்ச் ஆப் செய்​யப்​பட்​டு, அவரும் தலைமறை​வாக உள்​ளார். அவரும் விரை​வில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருப்பதால் அவருக்கு வலை வீசி இருக்கிறார்கள்.

Related posts

PushpaRaj dominance First & Fastest 1.5M+ liked

Jai Chandran

கமல் இன்று 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை வேட்பு மனு தாக்கல்

Jai Chandran

Annaatthe First Single countdown begins! Releasing Tomorrow 6 PM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend