கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ராஜேஷ்.
பின்னர் டி வி தொடர்களில் நடித்ததுடன் யூ டியூப்பில் ஜோதிடம், உலக நடப்புகள் பற்றி பேசி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்து வந்த ராஜேஷுக்கு இன்று மே 29
காலையில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் திரையுலகினர் ராஜேஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
வாழ்க்கை வரலாறு:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தவர் ராஜேஷ். பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் நடித்தார். 1974ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித் திரையில் அறிமுகமான முதல் படம் இது. கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
மனைவி ஜோன் சில்வியா கடந்த 2012ம் ஆண்டு இறந்துவிட்டார். ராஜேஷ், ஜோன் தம்பதிக்கு திவ்யா, தீபக் என்ற மகளும், மகனும் உள்ளனர்.
