Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நரி வேட்டை (பட விமர்சனம்)

படம்: நரிவேட்டை

நடிப்பு: டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சார்மூடு, சேரன், ஆர்யா சலீம்,

தயாரிப்பு: திப்புசான் சியாஸ் ஹாசன்

இசை: ஜாகெஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: விஜய்

இயக்கம்: அனுராக் மனோகர்

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

பெரிய வேலைக்குதான் செல்வேன் என்று முடிவு செய்து கொண்டு வரும் வேலையெல்லாம் விட்டுவிட்டு பொழுதை கழிக்கிறார் டொவினோ தாமஸ். இதனால் அவரை காதலிப்பவரும் பிரிந்து செல்கிறார்
வேறுவழியில்லாமல் தேடி வந்த கான்ஸ்டபில் வேலையில் சேர்கிறார். காட்டுப்பகுதியில் நடக்கும் பழங்குடியினர் நடத்தும் போராட்டத்தை தடுக்க செல்லும் போலீஸ் படையுடன் செல்கிறார் டொவினோ
. அங்கு நடக்கும் கலவரத்தில் டொவினோ குற்றவாளி ஆக்கப்படுகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கதை.

எதார்த்தமான படங்களை எடுப்பதில் பெயர் பெற்ற மலையாள சினிமா மற்றொரு எதார்த்தமான சினிமாவாக நரி வேட்டை படத்தை உருவாக்கி இருக்கிறது.

பெரிய வேலையை எதிர்பார்த்து சிறிய வேலை எதையும் செய்யாமல் நாட்களை கடத்தும் டொவினோ தன் காதல் கையை விட்டு போகிறது என்று தெரிந்தவுடன் போலீஸ் வேலையில் ஓடிச் சென்று சேர்ந்ததும் இந்த கதை காதலுக்காகத்தான் நகரப் போகிறது என்று பார்த்தால் திடீரென்று காட்டுப்பகுதிக்கு கதை நகர்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தில் அரசியல் புகுந்து நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களை நிகழ்த்தி எதிர்பார்க்காத வேறொரு களத்துக்கு கதை நகர்வதெல்லாம் மலையாள படங்களில்தான் நிகழும் என்பதை மற்றொரு முறை நரி வேட்டை படம் நிரூபித்திருக்கிறது.

பிடிக்காத வேலை என்று போலீஸ்காரர் வேலையில் சேரும் டொவினோ தாமஸ் வெறுப்புடன் தனது வேலையில் ஈடுபடுவதும் அதனால் அங்கு வேண்டாத நிகழ்வுகள் நடப்பதெல்லாம் திடீர் திருப்பங்கள்.

அங்குள்ள ஒரு நாயுடன் வம்பு வளர்க்கும் டொவினோ அதனுடன் மல்லு கட்டுவது சினிமாத் தனமாக இல்லாமல் நிஜ சம்பவமாக இயக்குனர் படமாக்கி இருப்பது எந்த நேரத்தில் டொவினோவை பாய்ந்து நாய் கடிக்கும் என்ற பதட்டம் எழுகிறது.

இன்ப அதிர்ச்சியாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நம்மூர் டைரக்டர் சேரன் நடித்திருக்கிறார். திரையில் அவர் முகத்தைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டாலும் நடிப்பில் அவர் என்றுமே சேரன் சேரன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். நெகட்டிவ் ஷேடில் கதாபாத்திரம் இருந்தாலும் வேண்டாம் என்றும் மறக்காமல் அதை ஏற்று நடித்திருப்பது புத்திசாலித்தனம். இனி மலையாள படங்களில் சேரனை நிறைய பார்க்கலாம்.

திப்புசான் சியாஸ் ஹாசன் தயாரித்திருக் கின்றனர்

ஜாகெஸ் பிஜாய் இசை காட்சிகளோடு ஒட்டி நிற்கிறது. விஜய் ஒளிப்பதிவு கதைகேற்ற மூடை செட் செய்திருக்கிறது

அனுராக் மனோகர் இயக்கத்தில் தமிழில் இப்படத்தை பார்த்தாலும் ஒரு நல்ல மலையாள படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.

நரிவேட்டை – போராட்ட களம்.

 

Related posts

மர் மர் (பட விமர்சனம்)

Jai Chandran

karthi’s JaiSulthan Song 14Million Views

Jai Chandran

மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் இயற்கை எய்தினார்!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend