இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம விருதுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு இந்த இவ்விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த மதிப்புமிக்க விருது தமிழ் திரையுலகின் பல நட்சத்திரங்களுக்கு அவர்களின் கலைத்திறனுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ந் தேதி அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப் பட்டது.
நடிகர், சர்வதேச கார் பந்தய வீரர் அஜித் குமார், நடிகை- பரதநாட்டிய கலைஞர் ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. அதற்கானவிழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கி நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார். அஜீத்குமார் பதமாபஷன்விருதுபெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விழாவில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இதுவரை பதம்பூஷன் விருது பெற்ற தமிழ் திரைபயுலக நட்சத்திரங்கள் பிரபலங்கள் நடிகர் திலகம் சிவாஜிக்கு 1984 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2000 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் 2010ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றார். 2014 ஆம் ஆண்டு உலக நாயகன் கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.
கேப்டன் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார
