Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டோர் (பட விமர்சனம்)

படம்: டோர்

நடிப்பு: பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, நந்தகுமார், க்ரிஷ், பாண்டி ரவி, ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினோ, ரோஷினி, சித்திக், வினோலியா

தயாரிப்பு: நவீன் ராஜன்

இசை: வருண் உன்னி

ஒளிப்பதிவு: கௌதம் ஜி

இயக்கம்: ஜெய் தேவ்

பி ஆர் ஓ: பரணி அழகிரி

கட்டிட கலை நிபுணர் பாவனா. புதிய குடியிருப்பு கட்டுவதற்காக ஒரு இடத்தில் இருக்கும் கோயிலை இடிக்கிறார். அப்போதிலிருந்து ஒரு அமானுஷ்யம் அவரை பின்தொடர்கிறது. பாவனா தந்தை திடீரென்று விபத்தில் இறக்கிறார். தான் தங்கியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறார். இது பற்றி அவர் கண்டறிய முயலும் போது அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. அதற்கு என்ன காரணம்? தன் தந்தை இறப்புக்கு பின்னால் என்ன ரகசியம் இருக்கிறது போன்றவற்றை போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார் பாவனா. அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு  திகிலுடன் பதில் அளிக்கிறது டோர்.

கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய் தேவ்.

பாவனாவை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் இப்படம் மூலம் காண முடிகிறது. மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடவுள் மீது நம்பிக்கை இல்லை, பேய் மீதும் நம்பிக்கை இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் பாவனா வாழ்வில் ஒரு கோவிலும், ஒரு பேயும் எப்படி எல்லாம் அவரை அலைக்கழிக்கிறது என்பது சுவாரஸ்மாக சொல்லப்பட்டிருக்கிறது.

பாவனா தங்கி இருக்கும் வீட்டில் திடீரென்று சத்தம் கேட்பது, உருவம் நடப்பது என்ற காட்சியெல்லாம் பயமுறுத்துகிறது ஆனால் பாவனா மட்டும் எதற்கும் ரியாக்சன் தராமல் எதுவுமே நடக்காது போல் நடித்திருப்பது காட்சியின் பய உணர்வை குறைத்து விடுகிறது.

தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு அவர் போனில் அழைக்கும்போது கூட பேசாத நிலையை எண்ணி பாவனா வருந்தும்போது மனதை வருடுகிறது.

தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யங்கள் பற்றி யாரிடமும் சொல்லாமல் பாவனா மறைத்து வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

தன் கண்ணிற்கு ஒரு பெண் உருவம் தெரிவது பற்றி நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ரா மனிடம் கூற அதுபற்றி அவர் விசாரிக்க தொடங்கும்போதுதான் கதையில் விறுவிறுப்பு கூடுகிறது.

ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, நந்தகுமார், க்ரிஷ், பாண்டி ரவி, ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினோ, ரோஷினி, சித்திக், வினோலியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

நவீன் ராஜன் தயாரித்திருக்கிறார்.

வருண் உன்னி இசை அவ்வப்போது மிரட்டுகிறது. வாய்ப்புக்கள் பல இருந்தும் திடீர் பயமுறுத்தல்கள் இல்லாமல் இசை அமைத்திருப்பது படத்திற்கு பிளஸ்..

கௌதம் ஜி கேமரா  பேயை காட்டினாலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லாதது ஒரு வகையில் ரசிகர்களை ஈர்க்கவே செய்யும்..

இயக்குனர் ஜெய் தேவ் கேரளாவில் ஒரு ஊரில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இக்கதையை இயக்கியதாக கூறினார் கணிக்க முடியாத  அளவுக்கு காட்சிகள் பல்வேறு திருப்பங்களுடன் நீண்டு செல்கிறது.

பல இடங்களில் வசனங்கள் தேவையில்லாத காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கிறது. அதில் கத்தரி வைத்தால் இன்னும் கூட படம் விறுவிறுப்பாக இருக்கும்.

டோர் – அதிக பயமுறுத்தல் இல்லாத பேய் படம்.

 

Related posts

கடைசி காதல் கதை (பட விமர்சனம்)

Jai Chandran

திலீப்குமார் மறைவுக்கு வைஜயந்தி மாலா வீடியோவில் இரங்கல்

Jai Chandran

யஷ்- சஞ்சய் தத் மோதும் ‘கே ஜி எஃப் 2’ டீஸர் ஜனவரி 8ம் தேதி ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend