Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சுழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2 ( வெப் சீரிஸ் விமர்சனம்)

படம் : சுழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2 (Suzhal – The Vortex Season 2)

நடிப்பு:கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா பிளஸ்சி, சிரிஷா, அபிராமி போஸ், நிகிலா ஷங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி, அஸ்வினி நம்பியார்

தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்

கதை திரைக்கதை: புஷ்கர், காயத்ரி

இசை: சாம் சிஎஸ்

படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின்

ஒளிப்பதிவு: ஆபிரகாம் ஜோசப்

இயக்கம்: பிரம்மா மற்றும் சர்ஜுன் கே. எம்.

பி ஆர் ஓ: யுவராஜ்

ரிலீஸ்: அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் ஓ டி டி தளம்

சுழல் முதல் பாகம் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்கர் காயத்ரி வழங்கிய அந்த சீரிஸ் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் அதாவது சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2 தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினலில் வெளியாகிறது.
முதல் பாகம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே புதிது .
.8 எபிசோட்கள் கொண்ட சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2 கதை என்ன? என்பதை பார்க்கலாம்..

ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராகிறார் வக்கீல் லால். இவர் பொதுநல சிந்தனை கொண்டவர். எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அதை எதிர்த்து வழக்குகள் போட்டு தீர்வு காண துடிப்பவர். இதனால் அவருக்கு நிறைய எதிரிகள் உண்டு. திடீரென்று அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதை விசாரிப்பதற்காக சிறப்பு போலீஸ் அதிகாரியாக கதிர் மற்றும் சரவணன் வருகிறார்கள். லால் கொல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியுடன் சிக்குகிறார் ஒரு பெண். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். ஆனால் அவர்
தன் பெயரைக் கூட சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைகின்றனர். இந்த நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏழு இளம் பெண்கள் தனித்தனியாக ஆஜராகி தாங்கள்தான் வக்கீல் லாலை கொன்றதாக வாக்குமூலம் தருகிறார்கள். இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. உண்மையில் லாலை சுட்டுக் கொன்றது யார்? இந்த எட்டு இளம் பெண்களுக்கும், லாலுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சிகரமான பதில் அளிக்கிறது.

சூழல் முதல் பாகம் எப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்ததோ அதைவிட ஒரு மாறுபட்ட அனுபவத்தை எனர்ஜி குறையாமல் சுழல் இரண்டாம் பாகம் அளித்திருக்கிறது.

சிறப்பு போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்க அவருக்கு கொலை வழக்கில் உதவி செய்யும் மற்றொரு போலீஸ் அதிகாரியாக சரவணன் நடித்திருக்கிறார்.
தன்னைவிட கதிர் ஜூனியர் என்பதால் அவரை மதித்தும் மதிக்காமலும் இருப்பது போல் பேசும் சரவணன் தனது ஈகோவை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

வயதில் இளைஞராக இருந்தாலும் கதிர் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. எதற்கும் பதட்டம் அடையாமல் அவர் வழக்கை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் லாவகம் எட்டாம் எபிசோடு வரை ஆர்வம் குறையாமல் கொண்டு செல்கிறது.

தன்னை சிறுவயது முதல் எடுத்து வளர்த்த வக்கீல் லால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடையும் கதிர் அந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி கொலைகாரனை கண்டுபிடிக்க அவர் காட்டும் ஆர்வமும் ஆனால் எந்த துப்புமே கிடைக்காமல் திணறுவதும் விறுவிறுப்பு.

ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் அடைபட்ட கைதியாக வருகிறார். இவரது கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஐந்து எபிசோடு வரை சைலண்டாகவே செல்கிறது. இவருக்கு இதில் வாய்ப்பு குறைவு போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது ஆறாவது எபிசோடு முதல் ஐஸ்வர்யாவின் நடிப்பு அதகளம் தொடங்குகிறது.

லாலை கொன்றதாக எட்டு இளம்பெண்கள் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்படுவதும் அவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்காணித்து போலீசுக்கு அதாவது தனது காதலர் கதிருக்கு துப்பு கொடுப்பதற்காக செய்யும் சி ஐ டி தனமான வேலைகள் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது.

யார் தான் கொலைகாரன் என்பதை மட்டுமல்ல இதில் வரும் ஒவ்வொரு ட்விஸ்ட் பற்றியும் இங்கு ஓபன் செய்வது எபிசோட்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஆர்வத்தை குறைத்து விடும் என்பதால் எல்லா திருப்பங்களையும் அப்படியே சஸ்பென்சாக இங்கும் விட வேண்டும் என்பதே கதாசிரியர்கள் புஸ்கர் காயத்ரியின் வேண்டுகோளாகும். அதை ஏற்று எல்லா சஸ்பென்ஸ்களையும் எட்டு எபிசோட் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்.

கதையில் வரும் அரக்கன் அதற்கேற்ப சூரசம்காரம், காளி அவதாரங்கள், திருவிழா, பக்தர்கள் காளி வேஷம் போட்டுஆடும் ஆக்ரோச ஆட்டம், அரக்கனின் ஆட்டம் எல்லாம் சிறப்பு காட்சிகளாக இடம் பெற்று கதைக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. பெரிய திரையில் பார்த்தால் பல பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள்..

வால்வாட்சர் பிலிம்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கதை திரைக்கதையை புஷ்கர், காயத்ரி எழுதி உள்ளனர். மேம்போக்காக ஒரு கதையை சொல்லாமல் ஒரு விழிப்புணர்வு கதையாக அவர்கள் எழுதியிருப்பதை கண்டிப்பாக  பாராட்ட வேண்டும்.

சாம் சிஎஸ் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

ஆபிரகாம் ஜோசப் கேமரா ஒவ்வொரு எபிசோடிலும் அந்தந்த மூடுக்கு ஏற்ப டோன்களை மாற்றி புதுப்புது காட்சிகளாக கண்களில் பதிய வைப்பது மனதை விட்டு அகலாது.

ஒட்டுமொத்த எபிசோடடையும் எடிட்டர் ரிச்சர்ட் கெவின் கச்சிதமாக எடிட் செய்து அசத்தியிருக்கிறார்

சுழல் வோர்டெக்ஸ் 2வது சீசனை
பிரம்மா மற்றும் சர்ஜுன் கே. எம். என இரண்டு இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். அவர்கள் இயக்கியிருக்கும் எபிசோடுகள் எந்த விதத்திலும் காட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் சஸ்பென்சை நூல் பிடித்தார் போல் கிளைமாக்ஸ்வரை கொண்டு சென்றிருப்பது புரிதலுடன் தங்களது எபிசோடுகளை அவர்கள் இயக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த புரிதல்தான் சுழல் இரண்டின் வெற்றிக்கு அச்சாரம்.

சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2 – முதல் எபிசோடை  தொடங்கினால் கடைசி எபிசோட்  வரை ஆளை நகர விடாது.

 

Related posts

Actor Mahendran Shares his Experience about Master

Jai Chandran

சோனி மியூசிக் வெளியிடும் “தக்ஸ் ” இசை

Jai Chandran

எம் ஜி ஆர் சிலைக்கு நடிகை லதா மரியாதை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend