படம்: கண்ணீரா
நடிப்பு: கதிரவென்,.சாந்தினி கவுர்,
மாயா கிளம்மி, நந்தகுமார் NKR
தயாரிப்பு: எஸ் ஹரி உத்ரா
இசை: ஹரிமாறன்
ஒளிப்பதிவு: ஏகணேஷ் நாயர்
இயக்கம்: கதிரவன்
பிஆர்ஓ: புவன் செல்வராஜ்
கண்ணீரா டைடைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது , ஆனாலும் இது ஒரு முக்கோண காதல் கதையாகவே உருவாகியிருக்கிறது.
மித்ரன் (கதிரவென்) ஶ்ரீஷாவை ( சாந்தினி கவுர்) காதலிக்கிறார். இவரும் மித்ரனை காதலிக்கிறார். ஆனாலும் இவர்களுக்குள் ஒரு விரிசல் ஏற்படுகிறது . அதற்கு காரணம் ஸ்ரீஷா திருமணத்திற்கு முன்பே வாழ்க்கையில் வசதிவாய்ப்புடன் செட்டிலாக வேண்டும் என்று எண்ணுகிறார். இதனால் மித்ரன் திருமண பேச்சை எடுக்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி ஶ்ரீஷா நழுவுகிறாள். இந்த நிலையில் மித்ரன் அலுவலகத்தில் நீரா (மாயா கிளம்மி) வேலைக்கு சேர்கிறார். ஶ்ரீஷா திருமணத்துக்கு சம்மதிக்காததால் நீரா மீது காதல் கொள்கிறான் மித்ரன். ஆனால் நீராவோ இன்னொருவனை காதலிக்கிறாள். இந்த காதல் விளையாட்டு எப்படி எல்லாம் சென்று முடிகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது கண்ணீரா கிளைமாக்ஸ்.
ஆக்சன் படங்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. இடையே இது போன்ற ரொமான்டிக் கதைகள் வருகிறது. முழுக்க முழுக்க இதை ஒரு காதல் கதையாகவே வடிவமைத்து இயக்கி இருக்கிறார் கதிரவென் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். எழுத்து இயக்கம் நடிப்பு என மூன்று பொறுப்புகளை ஏற்றிருந்தாலும் அதை திறம்பட செய்ய முயற்சித்திருக்கிறார்.
சாந்தினி கவுரை காதலிக்கும் கதிரவென் எப்படியாவது அந்த காதலை நிறைவேற்றி கல்யாண பந்தத்திற்குள் அவரை இழுத்து விட வேண்டும் என்று பாடாத பாடு படுகிறார். ஆனால் சாந்தினி வேறு ஒரு எண்ணத்தில் கல்யாண பேச்சு வரும்போதெல்லாம் கழுவும் மீனில் நழுவும் மீனாக நழுவி சென்று விடுகிறார். ஏற்ற கதாபாத்திரத்தை இயல்பாக செய்திருப்பதுடன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார் சாந்தினி கவுர்.
அதேபோல் நீரா கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் மாயா கிளம்மி தனது கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து நுணுக்கமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.
எங்கே செல்லும் இந்த பாதை என்பது போல் கதிரவென், சாந்தினி கவுர், மாயா ஆகிய மூவரின் காதல் பயணமும் காற்றில் தள்ளாடும் படகாக மாறி இருப்பது, ” இது எங்கு சென்று முடியுமோ ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
மலேசியாவில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் மலேசியாவின் அழகை ரசிக்கும்படியான இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
ஏகணேஷ் நாயர். ஏற்கனவே படங்களில் பார்த்த மலேசியாவின் காட்சிகளை ஒதுக்கிவிட்டு புதிதாக உள்ள இடங்களை காட்டி விழிகளை பளிச்சிட செய்கிறார்.
ஹரிமாறன் இசை காட்சிகளை ஓவர்டேக் செய்யாமல் ஒலிக்கிறது.
திரைக்கதையில் திருப்பங்கள் இருந்தாலும் அதை ஒரு சஸ்பென்ஸ் வெளிப்படுத்தலாக அமைந்திருந்தால் படத்திற்கு வேறு ஒரு கோணம் கிடைத்திருக்கும். ஆனாலும் சில திடீர் டிவிஸ்ட்களை வைத்து ஆடியன்ஸை கவர முயற்சித்திருக்கிறார். இயக்குனர் கதிரவென்.
கண்ணீரா- காதல் கானல் நீரா..

