Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒத்த ஓட்டு முத்தையா (பட விமர்சனம்)

படம்: ஒத்த ஓட்டு முத்தையா

நடிப்பு: கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு, மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சைதன்யா, டெம்பிள் சிட்டி குமார்,
தரணி, சென்ராயன்,
லேகா ஶ்ரீ, டி கே சீனிவாசன்

தயாரிப்பு: ரவி ராஜா

ஒளிப்பதிவு: எஸ் ஏ காத்தவராயன்

இசை: சித்தார்த் விபின்

இயக்கம்: சாய் ராஜகோபால்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ஒத்த ஒட்டு முத்தையா (கவுண்டமணி) ஒரு மூத்த அரசியல்வாதி. இவருக்கு மூன்று தங்கைகள். மூன்று பேரையும் ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒரே குடும்பத்தில் மூன்று மாப்பிள்ளைகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இதற்கிடையில் அக்காள் தங்கை மூவரும் தங்களுக்கென்று காதலர்களை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் மூவரையும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் என்று நடிக்க வைத்து தனது அண்ணனை திருமணம் செய்து வைக்க சம்மதம் பெற முடிவு செய்கின்றனர். அதன்படி ஒரு நாடகம் நடத்துகிறார்கள். இதற்கிடையில் அரசியல்வாதியான முத்தையா கட்சியில் இருந்து ராஜினாமா செய்து சுயேசையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த விவகாரங்கள் என்னவாகிறது. தங்கைகளுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார? தேர்தலில் வெற்றி பெற்றாரா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

இந்த படத்தில் என்ன இருக்கிறதோ இல்லையோ கவுண்டமணி இருக்கிறார் என்பதுதான் பெரிய விஷயம். திரையில் அவரது காமெடியை ரசித்து பல வருடங்கள் ஆகிவிட்டது சமீபகாலமாக அவர் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதால் அவரது காமெடியை டிவியில் மட்டும் தான் காண முடிகிறது. தற்போது அவரது நக்கலான காமெடியை  திரையில் பார்க்க ஒத்த ஓட்டு முத்தையா படம் ஒரு வாய்ப்பை தந்திருக்கிறது.

பழைய வேகம், உற்சாகம் இல்லாவிட்டாலும் பஞ்ச் காமெடிகள் அடிப்பதில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது போல் வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் டயலாக் பேசி அரங்கை அதிர விடுகிறார்.

கவுண்டமணியன் அரசியல் நய்யாண்டி காமெடிகளும் அடை மழை. அரசியல்வாதியாக வரும் தனது டிரைவர் யோகி பாபுவை நக்கலடித்து பதம் பார்ப்பது கவுண்டமணியால் தான் முடியும். ஏனென்றால் யோகி பாபு எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரை கலாய்த்து கதம் கதம் செய்துவிடுவார் ஆனால் கவுண்டமணியிடம் அது நடக்கவில்லை.

திடீரென்று ரவுடிகளுடன் சண்டை போட கவுண்டமணி கோதாவில் இறங்கியதும் இது என்னடா ஆக்சன் ஹீரோவா ஆகப் போகிறாரா என்று யோசிக்க வேண்டியுள்ளது, நல்ல வேலையாக காட்சியை மாற்றி கவுண்டமணி தங்கையின் காதலர்கள் வந்து சண்டைக்காட்சியை நம்பும்படி முடித்து வைக்கிறார்கள்.

படத்தில் கோலிவுட்டில் இருக்கும் பெரும்பாலான காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பது சிறப்பு அம்சம். இவ்வளவு கூட்டத்தையும் ஒரே படத்தில் பார்ப்பது அரிது.

காதல் காமெடி அரசியல் என்று கூட்டாஞ்சோறு கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜகோபால்.

சித்தாத் விபின் இசை. அமைத்திருக்கிறார்.

ரவி ராஜா தயாரித்துள்ளார்.

ஒத்த ஓட்டு முத்தையா – அரசியல் நய்யாண்டி காமெடி.

 

Related posts

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட முதல் பாடல் ‘மக்காமிஷி

Jai Chandran

பட தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கார் விபத்தில் மரணம்: திரை உலகினர் இரங்கல்..

Jai Chandran

இ பி கோ 306 (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend