Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மெட்ராஸ்காரன் (பட விமர்சனம்)

படம்: மெட்ராஸ்காரன் Om

நடிப்பு: ஷான் நிகம், கலையரசன்,, நிகாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன்,  கீதா கைலாசம்

தயாரிப்பு:  பி. ஜெகதீஷ்

இசை:சாம் சி எஸ்.

ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார்

இயக்கம்: வாலி மோகன்தாஸ்

பிஆர்ஓ: சதீஷ் ( AIM)

சென்னையில் வேலை செய்யும் சத்யா ( ஷான் நிகம்) தான் காதலிக்கும் பெண்ணை தன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்து வருகிறார். தன் ஊருக்கு வந்த காதலியை சந்திக்க காரில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதில் ஒரு கர்ப்பிணி பெண் அடிபட்டு விழுகிறார் . அவரது உறவினர்கள் சத்யாவை அடித்து  போலீசில் ஒப்படைக்கின்றனர். கார் மோதியதில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சத்யாவை கொல்ல துணிகின்றனர் அடுத்து நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சத்யா கதாபாத்திரத்தில் ஷான் நிகம்  நடித்திருக்கிறார். பஹத் பாசிலைபோல் தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு மலையாள நடிகர் இவர். தனது வசனங்களையும் மலையாளம் கலந்த தமிழிலேயே பேசுகிறார். அது காட்சிகளுக்கு ஒட்டவில்லை. ஆனால் முகபாவனைகள்,  நடிப்பை பொறுத்தவரை பக்காவாக செய்து பரிதாபங்களை அள்ளிக் கொள்கிறார் ஷான்.

அவசர காதலியாக வருகிறார் நிகாரிகா. காதல் சடுகுடு ரீமிக்ஸ் பாடலுக்கு ஷான் நிகாமுடன் கலக்கல் நடனமாடி கவர்கிறார். ஆனால்  சிறிது நேரத்திற்கு பிறகு காணாமல் போய்விடுகிறார். எங்கு சென்றார்,  என்னவானார் என்பதெல்லாம் கேள்விக்குறி. திருமணம் செய்து கொண்டு போய்விட்டதாக  ஒரே வசனத்தில் அவரது கதையை முடித்து விடுகிறார்கள்.

கலையரசன் நல்லவனா வில்லனா என்று முடிவு செய்ய முடியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.  ஆக்ஷன் காட்சியில் ஷான் நிகாமுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு கதறவிடுகிறார். மனைவி மீது பாசக்காரராக வந்து பெண்கள் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்

தாய் மாமனாக வரும் கருணாஸ் கொஞ்சம்போல்  செண்டிமெண்ட் விஷயத்தை மனசுக்குள்  வீசுகிறார். ஐஸ்வர்யா தத்தா மாறுபட்ட வேடத்தில் தோன்றுகிறார்.

ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் வருகிறார். அது கதைக்கு ஒரு திருப்புமுனை.

ஒரு கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதை எப்படி எல்லாம் குழப்ப முடியுமோ அப்படியெல்லாம் குழப்பி இருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். நிரபராதிக்கு தண்டனை,  குற்றவாளிக்கு அவர்தான் குற்றம் செய்தார் என்பது கூட தெரியாதளவுக்கு ஒரு நியாயத்தை கூறி இருப்பதை ஏற்க முடியவில்லை.

பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சாம் சி எஸ் பின்னணி இசை கை கொடுக்கிறது.

மெட்ராஸ்காரன் ரன் – அப்பாவி.

 

 

 

Related posts

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!

Jai Chandran

Sona Heiden’s ‘SMOKE’ web series First Look

Jai Chandran

KadaisiVivasayi trailer hits 1 Million + views within a day..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend