Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிரதர் (பட விமர்சனம்)

படம்: பிரதர்

நடிப்பு: ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா, வி டிவி கணேஷ்,  பூமிகா சாவ்லா, நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா , பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின், சதீஷ் கிருஷ்ணன்

தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒவளிப்பதிவு: பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின்

இயக்கம்: ராஜேஷ். எம்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் மகன் கார்த்திக் (ஜெயம் ரவி). யார் பேச்சையும் கேட்காமல் தன் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார். நடக்கும் தவறுகளை வெளிப்படையாக பேசுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவரது தந்தைக்கு வேதனையாக அமைகிறது. ஊரிலிருந்து வரும் அக்கா ஆனந்தி (பூமிகா) தம்பி கார்த்திக்கை தன்னுடன் ஊட்டிககு  அழைத்துச் சென்று அவனை ஒரு நல்ல பிள்ளையாக திருப்பித் தருவதாக தந்தைக்கு வாக்கு தந்துவிட்டு கார்த்திகை அழைத்து செல்கிறார். ஊட்டியில் அக்கா வீட்டுக்கு சென்று தங்கும் கார்த்திக் செய்யும் செயல்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பெரிதாக பாதிக்கிறது. ஒரு கட்டத்தில் அது மோதலாக வெடித்து  அவரது அக்காவே அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. சந்தோஷமாக இருந்த குடும்பமும் சிதறிப்போன நிலையில் அந்த  குடும்பத்தினர் எடுக்கும் முடிவு என்ன, கார்த்திக்  கதி என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ரொம்ப டெக்னிக்கலாக இல்லாமல் ஒரு நடுத்தர குடும்பத்திற்கும், உயர் பதவியில் இருந்து  அந்த கௌரவத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து ஒரு குடும்ப படமாக உருவாகி இருக்கிறது பிரதர்.

ஏற்கனவே சந்தோஷ சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற குடும்ப படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு அந்தப் பட்டியலில் இணையும் ஒரு படமாக பிரதர் அமைந்திருக்கிறது.

வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று தந்தை கேட்கும் போது அவரது வாயை அடைத்து விட்டு நான் விளையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் ஜெயம் ரவி முதல் காட்சியிலேயே அவரது கதாபாத்திரம் என்ன என்பதை கோடிட்டு காட்டுகிறார்.

வெட்டியாக  ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியை திருத்துவதாக கூறி பூமிகா அவரை ஊட்டிக்கு அழைத்து செல்வதும் அதன்பிறகு அங்கு  நிகழும் கூத்துக்களும் காட்சிகளை நீயா நானா ரேஞ்சுக்கு  ஜிவ்வென பறக்கிறது.

அக்கா வாங்கி கொடுக்கும் வேலை,  பிரியங்கா மோகன் வாங்கி கொடுக்கும் வேலை, அக்காவின் மாமனார் வாங்கி கொடுக்கும் வேலை எந்த வேலையிலும். நியாய தர்மம் பேசி வேலை வாங்கி கொடுத்தவர்களுக்கு வேட்டுவைக்கும் காட்சிகளில் ஜெயம் ரவி கடுப்பேற்றும் நடிப்பில் மிரள விடுகிறார்.

கடைசியில் தன் அககா பூமிகாவை  அவரது கணவரிடம் சண்டை போட வைத்து அவரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து ஒரு கட்டத்தில் தான் செய்த தவறுகளை உணரும்போது தான்தோன்றித்தனமாக திரியும் பல இளைஞர்களை  அவர்கள் செய்யும் தவறுகளை உணர வைக்கிறார் ஜெயம் ரவி..

பிரியங்கா மோகன் மேக்கப் கலையாமல் நடித்துவிட்டு செல்கிறார். நடன காட்சிகளில் சிட்டாக சிறகடிக்கிறார்

அப்பாவி அம்மாவாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சரண்யா இந்த படத்தில் ஆங்கிலம் பேசு நாகரிக அம்மாவாக நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

படத்தில் வில்லனே இல்லையே என்று பார்த்தால் வில்லனாக  மாறுகிறார். ராவ் ரமேஷ்.  பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின் இருவரும் பள்ளி கலை நிகழ்ச்சியில் தன்  தாய் தந்தை பிரிந்த கதையை சொல்லி நெகிழ வைக்கின்றனர்

இயக்குனர் எம் ராஜேஷ் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலின் விளைவுகளால் குடும்பம் எப்படி சிதறிப் போகிறது என்பதை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார். இது பிரிந்து  கிடக்கும் ஒன்று இரண்டு குடும்பங்களையாவது சேர்த்து வைத்தால் அது படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை  முணுமுணுக்கும்  பாடல்களை தந்துள்ளது.

பிரதர்- அடாவடி தம்பி அக்கா  பாசம்.

 

 

 

Related posts

#Thalaivar173 will be directed by Cibi Chakaravarthi..

Jai Chandran

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் இந்திய படம்

Jai Chandran

– “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் ! நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend