Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒற்றைப் பனை மரம் (பட விமர்சனம்)

ஓம்படம்: ஒற்றைப் பனை மரம்

நடிப்பு: புதியவன் ராசையா, நவ யுகா, அஜாதிகா,  பெருமாள் காசி, நூர்ஜகான்,  மாணிக்கம் ஜெகன்

தயாரிப்பு,: எஸ் தணிகைவேல்

இசை: அஸ்வமித்ரா

ஒளிப்பதிவு: சி ஜே ராஜ்குமார்

இயக்கம்: புதியவன் ராசையா

பிஆர்ஓ: கே குமரேசன்

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு பின்னர். அங்குள்ள தமிழ் மக்கள் வாழ்க்கை என்னவானது, அவர்கள் சோற்றுக்கு வழியில்லாமல்  பட்ட கஷ்டங்கள் போன்றவற்றையும் இன்னும் சில நம்ப முடியாத விஷயங்களையும் கோர்த்து இப்படத்தின் கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர்

போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து அங்குள்ள தமிழ் பெண்கள் இலங்கை ராணுவத்தினரால் சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் அவலப்படுத்தப் பட்டார்கள் என்ற காட்சிகள் லேசாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை உணர்த்தினாலும் கதை செல்லச் செல்ல தமிழர்களின் அவல நிலையை கூறுவதாக சொல்லி சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றுவதற் காக தாய் ஒருத்தி  விபச்சாரி ஆவது போலவும், 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு தமிழ் பேசும் பெண் கள்  கொண்டு வா இரவில் ஜாலியாக இருக்கலாம் என்று கள்ள உறவு கொள்வது போலவும் காட்சிகள் ரசிகர்களை புழுங்க  வைக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நவயுகா நடித்திருக்கிறார். ஏதோ ஒரு புரட்சியை இவர் நடத்தப் போகிறார் என்று கடைசி வரை காத்திருக்க வைத்துவிட்டு ஏமாற்றி விடுகிறார்.

தமிழர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கும் நவ யுகா அந்த நபர் வந்து வீட்டை காலி செய்யச் சொன்னதும் அவரை மிரட்டி விரட்டி வீட்டை ஆட்டையை போடுவது என்பது இப்படி கூடவா தமிழ் பெண்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்புகிறது.

புரட்சி பேசுபவராக வரும் புதியவன் ராசையா கள்ளு கடைகள் அரசியல் பேசியதற்காக இலங்கை ராணுவத்தால் கடத்திச் சென்று நிர்வாணமாக வைத்து சித்திரவதை கூடத்தில்  துன்புறுத்தப்படுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது ஆனால் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரும் புதியவன் ராசையா உடன் இருக்கும் தமிழன் ஒருவராலேயே. கொல்லப்படுவது போல் காட்சி பெரும் அதிர்ச்சி.

இது ஈழத் தமிழர்களின் அவலத்தை கூறும் படமா அல்லது ஈழத் தமிழர்களை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வைக்கும் படமா என்பது தான் புரியவில்லை.

இயக்குனர் புதியவன் ராயாவிடம் பற்றி கேட்டபோது,  நாங்கள் போரில் தோற்ற சமுதாயம். போரில் தோற்ற பிறகு தோற்றவர் களின் நிலைமை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்ற வாழ்க்கையை பதிவு செய்வதற் காகவே இந்த படத்தை இயக்கினேன். இது ஈழத் தமிழர்களே அவமானப்படுத்தும் படம் அல்ல என்றார்.

படம் முழுக்க இலங்கையிலேயே கேமராவை சூழ்நிலை விட்டு ஒளி பதிவு செய்திருக்கிறார் சி ஜே ராஜ்குமார்.

ஒற்றைப் பனைமரம் –  தனிமரம்.

Related posts

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இசை – முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

Critics’ Choice Awards: List of nominations

Jai Chandran

விஜய் சேதுபதி, சம்யுக்தா பான் இந்தியா பட படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend