Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து  அக்டோபர் பத்தாம் தேதிக்கு ரிலீஸ் ஆக  தயாராக உள்ளது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப் பட்டினத்தில் நடந்து வந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சென்ற மாதம் 28ம் தேதி சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்தபோது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்வி  கேட்கப்ப்பட்டது அதற்கு அவர், “நோ கமெண்ட்ஸ்” என்று கூறிவிட்டு சிரித்தபடி காரில் ஏறிச் சென்றார். அப்போது ரஜினி உற்சாகத்துடன் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

விரைவில் வேட்டையன் ரிலீசுகாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்துக்கொண்டி ருக்கும் நிலையில் ரஜினி காந்த்துக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் , லேசான நெஞ்சுவலியால் அவதிப்பட்டார் . உடனடி யாக அவரை சென்னை யில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு அடி வயிறு வீக்கம், லேசான நெஞ்சு மற்றும் முதுகு வலி முதுகுவலி போன்ற பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.. சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.

ரஜினிகாந்துக்கு நெஞ்சுவலி இருப்பதால் அவருக்கு இதய குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதற்காக அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை அவருக்கு அளிக்கப் பட்டது. 70 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இத்தகைய அதிநவீன சிகிச்சை அளிக்கப்படு வதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக் கிறது. ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்ததை அடுத்து அவர் இன்று மாலையே வீடு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் அவர் இரண்டு அல்லது மூன்று  வார காலம் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

மார்ச்22ல் ஜி. வி.பிரகாஷின் “ரெபல்”

Jai Chandran

வசந்தமுல்லை (பட விமர்சனம்)

Jai Chandran

Colors presents the World Television Premiere of Ranga

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend