Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாழை (பட விமர்சனம்)

படம்: வாழை

நடிப்பு: பொன்வேல், ராகுல், கலையரசன், ஜானகி, திவ்யா துரைசாமி, நிகில விமல், பத்மன், ஜெ சதீஷ்குமார்

தயாரிப்பு: திவ்யா, மாரி செல்வராஜ்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

இயக்கம்: மாரி செல்வராஜ்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

காந்தி, காமராஜ், தோனி என வாழ்க்கை சரித்திர படங்கள் பல வந்திருக்கின்றன. ஆனால் அந்த படங்களை வேறு இயக்குனர்கள் தான் இயக்கி இருக்கிறார்கள். வாழை படம் அப்படி அல்ல இயக்குனர் மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையை தானே இயக்கி இருக்கிறார்.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சிவனைந்தன் (பொன் வேல்) பள்ளியில் படித்தாலும் குடும்ப வறுமை கடனை போக்குவதற்காக தாய் அக்கா ஆகியோருடன் தானும் விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கும் வேலை செய்கிறான். அதேபோல்தான் அவனது நண்பன் சேகர் (ராகுல்) நிலையும். பள்ளிக்கு செல்லும் சிவனைந் தனுக்கு பள்ளி டீச்சர் பூங்கொடி மீது ஒருவித ஆசை பிறக்கிறது. அவர் என்ன வேலை சொன்னாலும் செய்கிறான். காதலா? இன கவர்ச்சியா? என்று புரியாத அந்த வயதில் ஒரு மெல்லிய சந்தோஷம் சிவனைந்தனக்கு கிடைக்கிறது. வறுமை என்றாலும் சிறு சிறு சந்தோஷங்களால் சிவனைந்தன், சேகர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக் கின்றனர். இப்படிச் செல்லும் இவர்களது வாழ்க்கையை விதி புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பது மனதை உலுக்கும் கிளைமாக்ஸ் ஆக அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்க்கை கதை என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து தங்கள் இளமைக் காலத்தோடு ஒப்பிட்டு உணர்கின்றனர்.

சிவனைந்தன், சேகர் கதாபாத் திரங்களில் நடித்திருக்கும் பொன்வேல், ராகுல் இருவரும் எப்படித்தான் இயக்குனர் சொன்ன காட்சிகளை புரிந்து கொண்டார் களோ… அந்தந்த பாத்திரங்களாக வே உருமாறி இருக்கி றார்கள்.

வாழைத்தார் சுமக்காமல் இருக்க பொன்வேல், ராகுல் செய்யும் சேட்டைகள், பூங்கொடி டீச்சரின் கர்சிப்பை பொன்வேல் எடுத்து வைத்துக்கொண்டு அதனை முகர்த்து ரசிப்பது, கர்சிப் விஷயம் லீக்கான உடன் “அது என்னுடைய அக்கா கர்ச்சிப் என்று சொல்லி பொய் சத்தியம் செய்வது என இந்த சிறுவர்களின் குறும்பு படத்தின் 70 சதவீதத்துக்கு நிரம்பி இருக்கிறது. பொன்வேல் கதாபாத் திரம்தான் இயக்குனர் மாரி செல்வராஜன் வாழ்க்கைப் பாத்திரம். சிறுவயதில் இயக்குனர் அனுபவித்த இன்பங்களையும் துன்பங்களையும் மீண்டும் ஒருமுறை சினிமா வாயிலாக திரையில் திரையிட்டு அவர் தனது பழைய ஞாபகங்களை புதுப்பித்து கொண்டிருப்பதுடன் ஒரு பாடமாகவும் ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார்.
பொன்வேலின் தாயாக நடித்திருக்கும் ஜானகி அம்மா நிஜ தாயாகவே மாறிவிட்டார்.
பொன்வேலின் அக்கா வேம்புவாக நடித்திருக்கும் திவ்யா மீட்டருக்குள் தனது நடிப்பை வழங்கி இருக்கி றார். ஜானகி அம்மாவும் திவ்யாவும், பொன்வேலும் தலை மீது கிலோ கணக்கில் இருக்கும் வாழைத்தார்களை சுமந்து சேற்றிலும் சகதியிலும் நடந்து சென்று லாரியில் ஏற்றும் காட்சிகள் நம் கால்களை நோக வைக்கிறது.

கலையரசன் தொழிலாளர் களுக்காக நியாயம் கேட்டு போராடும் சிவப்பு சிந்தனைக் காரராக வருகிறார். இவர்களுடன் இன்னும் எண்ணற்ற ஊர் மக்கள் நடித்திருக்கிறார்கள்.
பூங்கொடி டீச்சராக வரும் நிகிலா விமல் சிறுவர்களின் கிரஸ் ஆகிவிடுகிறார்

திவ்யா, மாரி செல்வராஜ் படத்தை தயாரித்திருக்கிறார்கள்

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை ஒரு பலம் அதேபோல்
தேனி ஈஸ்வர் கேமரா மற்றொரு பலம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் இது ஒரு சிறுதுளி தான் இதுபோல் இன்னும் நிறைய நிறைய அவரது வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதெல்லாம் திரைக்கு வருமா என்பது புரியாதபுதிர்.

வாழை-  வாழ்க்கை

Related posts

VelsSignature’s upcoming short film MINDVOICE Teaser On 15th June

Jai Chandran

பழைய பாடல்கள் புதுப்பொலிவுடன் கார்வான் லான்ச் அமேசான் சரிகமா இசை விருந்து

Jai Chandran

விக்ரம்பிரபு, அக்ஷய் நடித்த சிறை பட வெற்றிவிழா – கேடயம் பரிசு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend