Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் டீஸர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா. 20 வயது ஆகும் இவர் திரையுலகில் அடி எடுத்து வைத்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு  எழுதி இயக்கம் புதிய படமான பீனிக்ஸ் என்ற படம் மூலம் சூர்யா ஆக்சன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஏ கே பிரேவ் மேன் பிக்சர்ஸ் இப்படத்தை அதிக பொருள் செலவில் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.

இதில் விக்னேஷ் வர்ஷா விஸ்வநாத், அபி நட்சத்திர உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் இயக்குனர் அனல் அரசு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்

டீசரை பார்த்த பிறகு விஜய் சேதுபதி கூறும் போது,” இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு எதுவும் நடத்தப்படவில்லை. சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆவார் என்பது கூட எனக்கு முன்பாக தெரியாது . ஒரு நாள் விமானத்தில் அனல் அரசு என்னுடன் வந்தார் அப்போது இருவரும் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் தான் ஒரு கதை வைத்திருப்பதாகவும் அதில் என் மகன் சூர்யா ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டார். அதை நான் எதிர்பார்க்கவில்லை ஆனாலும் இது பற்றி சூர்யாவிடம் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். பின்னர் ஒரு முறை அவர் ஒரு கதையை என்னிடம் கூறினார். கதை சொல்லிவிட்டு அது பற்றி என்னிடம் கருத்து கேட்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் அப்போதுதான் இந்த கதையில் தான் சூர்யா நடிக்க வேண்டும் என்று கேட்டார். கதை பிடித்தது சூர்யாவுக்கு சம்மதம் என்றால் நடிக்கட்டும் என்று கூறினேன். அப்படித்தான் இந்த படம் உருவானது.

சூர்யாவும் நானும் சினிமா பற்றி நிறைய பேசியிருக்கிறோம். சினிமாவில் நிலைத்தை நிற்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்பதை அவனுக்கு நான் உணர்த்தி இருக்கிறேன். அவனும் அதை உணர்ந்திருக்கிறான். அதையும் மீறி  நடிக்க வேண்டுமா என்று கேட்டபோது, நடிக்க விருப்பம் என்றான் “சரி” என்று நானும் அவனது விருப்பத்திற்கு விட்டு விட்டேன். தற்போது டீசர் பார்த்து அகம் மகிழ்ந்தேன். நன்றாக வந்திருக்கிறது. சூர்யாவுக்கு எல்லோருடைய வாழ்த்தும் ஆதரவும் நிச்சயம் தேவை

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

பின்னர் பேசிய அனல் அரசு,” என்ன நடந்தது என்பதை விஜய் சேதுபதி இங்கே முழுவதுமாக கூறிவிட்டார். அதை மேலும் நான் விளக்கி சொல்ல விரும்ப வில்லை. சூர்யா மிக அற்புதமாக பீனிக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அவரது கடுமையான உழைப்பையும் தந்திருக்கிறார் அவரது உழைப்பு அவருக்கு பெயரை பெற்று தரும்’ என்றார்

பின்னர் சூர்யா பேசும் போது “பீனிக்ஸ் டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் நான் என் தந்தைக்கு தரும் பரிசு” என்றார் .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி ஆர் ஓ ரியாஸ் கே அஹமது, பாரஸ் செய்திருந்தனர்.

 

Related posts

Bachelor movie Adiye Lyrical video hits 1M+ Views.

Jai Chandran

Selvi Jayalaitha Life Story ‘Thalaivi\ movie Trailer Launch Today

Jai Chandran

மட்டி படம் 6 மொழிகளில் டிச 10 ல் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend