Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வைரமுத்து மீது கங்கை அமரன் தாக்கு

சென்னையில்  நடந்த படிக்காத பக்கங்கள் பட ஆடியோ விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவரது பேச்சு தற்போது சர்ச்சை ஆகி இருக்கிறது வைரமுத்து பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளரு மான கங்கை அமரன் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது.:

இரண்டு நாட்களாக நான் சரியாக எதுவும் பார்ப்பதில்லை.. வாட்ஸ் அப் எல்லாம்…
இன்று காலை பார்த்த போது எனக்கு ஒரு செய்தி..
மடத்தனமாக உளறி வைத்திருக்கிறார் வைரமுத்து.
டைமண்ட் ஒரே மண்டாக இருக்கிறது. சொல்வதற்கு அசிங்கமாக இருக்கிறது ஏனென்றால்
ஒன்றுமே இல்லாமல் இருந்தவரை அவ்வளவு உயரத்துக்கு ஏற்றி விட்டது அவருடைய (இளையராஜா)பாட்டு தான் என்பது தெரியும். அதுக்காக அவரை பணிந்து போக வேண்டும் என்று சொல்ல நான் வரவில்லை.

இசை என்பது ஒரு நிலம். பூமி…
இந்த பூமியில் மலை இருக்கிறது
அருவி ஓடுது..
நிலம் என்று எடுத்துக் கொண்டால் அதில் 5 கிரவுண்ட் அல்லது 10 கிரவுண்ட் 30 கிரவுண்டு வாங்கி விட்டு நீ தனியாக தோட்டம் போட்டுக் கொள்ளலாம் கொடைக் கானலில் இருப்பது போல்..
வீடு கட்டிக் கொள்ளுங்கள்.. நிலத்தை வீடாக்கிக்க கொள்வது தான். அந்த நிலத்தை பிரித்துக் கொடுப்பதுதான் .. நிலத்தை வீடாக்கிக் கொள்வதுதான் பாட்டு .
அது குடிசையாக இருக்கலாம் அல்லது மீடியம் சைஸ் வீடாக இருக்கலாம் இல்லாவிட்டால் பெரிய பெரிய கட்டிடங்களாக இருக்கலாம். 48 அடுக்கு மாடியாக இருக்கலாம்.

இசை என்ற ஒரு நிலத்தில் பாட்டு என்கிற விதை விழுந்துதான் பாட்டாகிறது.. இல்லாவிட்டால்
கிளாசிக்களில் வெறும் ராகத்தை பாடி மயக்கி விடலாம். அது குளிரான இடத்தில் தென்றல் காற்று அடிப்பது போன்றது.. ரசிக்கக் கூடிய சமாச்சாரம்.. ராகத்தை கேட்பதுதான் கட்டிடமாக தோன்று கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென் றால்
தநதந தந்தன தந்தன தந்தன தானா நா என்றதும் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என்று பாடுவாங்க .. ராகம் என்ற அந்த வார்த்தை வந்த பிறகு கட்டிடமாக தெரிகிறது.. தெரியாமல் இருந்த ஒன்று தெரிவது கட்டிமாகிய பிறகுதான்.

நிலமாக இருக்கக் கூடிய இசையில் எதை போட்டாலும் விளையும் என்ன கட்டிடமும் கட்டலாம்.
குப்பையை கொட்டு
குப்பை. .
கோபுரத்தை கட்டு கோபுரம்
எத்தனை சுரங்கத்தை தோண்டலாம்.
தங்க சுரங்கம்,
நிலசுரங்கம். என எல்லா சுரங்கமும் இருக்கும்..
இந்த பாடல் என்கிற கட்டடத்தை கட்டுற வேலைமட்டும்தான் கவிஞர்களுக்கு. கவிஞர்கள் வெறும் பாட்டு மட்டும்தான் எழுத முடியும்.. மியூசிக் போட முடியுமா?
இவளோ தூரம் பண்ணி யிருக்காரே ஒரு ஆள்.. உன்னுடைய பாடல்களையே அவர் எவ்வளவு தூரம் மேல் கொண்டு வந்து வைத்திருக்கிறார். உங்களுக்குள் என்ன தகறாரோ அது எங்களுக்கு.. உலகத்துக்கு தேவையில்லை..
அது தெரிஞ்சாதான் வாழ்க்கை நடக்கும் என்பது அல்ல. அது அவருடைய விஷயம்.  உங்களுடைய விஷயம்….
ஒரு மாபெரும் கலைஞனை இவ்வளவு சீப்பாக திட்டுவது என்பது..
என்ன ஆச்சு உனக்கு… (வைரமுத்து)

அன்றைக்கு கூட ஒரு விழாவில் பார்த்து கையை கொடுய்யா ஜம்முனு என்று சொல்லி கையை குலுக்கி விட்டுத்தான் வந்தேன்.. எப்படி இருக்கீங்க என்று கேட்டு விட்டுத்தான் வந்தேன்.
எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை ஆனால் அண்ணன் இளையராஜா என்கிற ஒருவரை பற்றி இப்படி பேசியது என்பது மகா மட்டமான ஒரு சமாச்சாரம்.
அவரவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. இப்ப பாடல்களில் பிரபலமாக முடிய வில்லை என்றால் ஒரு பாப்புளரான ஆளை திட்டினால் நமக்கு பா ப்புளாரிட்டி கிடைக்கும் என்பதால் இளைய ராஜா என்ற ஒரு உலக பொக்கி ஷத்தை திட்ற மாதிரி திட்டிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கே ( வைரமுத்து) தெரியும்.. உலகத்தில் ஒன்பதாவது இடத்தில் இருக்கக் கூடிய மாபெரும் இசை அமைப்பாளர் இளையராஜா. கூடிய சீக்கிரத்தில் எட்டு, ஏழு என்கிற இடத்துக்கு வரக்கூடிய வரை வார்த்தைகளால் அசிங்கப் படுத்துவது என்பது மட்டமான செயல். .
நீ கட்டடம் கட்டிட்ட இல்ல .. அவ்வளவுதான் போதும். அதுக்கப்பறம் உனக்கு இடம் கொடுக்கவில்லை.. கொள்ளை யடிச்சு கட்டியது.. தரிசு நிலமெல் லாம் பிடிச்சல்ல… அதெல்லாம் இருக்கு.. அது மாதிரி பல விஷயங்கள் இருக்கு…

இளையராஜா இசை இல்லாமல் என் பாட்டு வராதா என்பதெல்லாம் மடத்தனம் .. டியூன் இல்லாம ஹம் பன்னா நல்லாதான் இருக்கும்.. . தனியா பாடிட்டு போகலாம்.. நல்லாத்தான் இருக்கும். ..
ஊரில் தோப்புக்குள்ள போகிற போது எங்களுக்கெல்லாம் பயமாகத்தான் இருக்கும். அப்போது ஏதோ ஒரு பாட்டை வார்த்தை தெரிகிறதோ இல்லையோ வெறும் ராகத்தை பாடிக் கொண்டே போயிருக்கி றோம்.

தன்னா நாயிதம் தன்னாயிதம் . என்பதைத்தான் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று நீங்கள் எழுதினீர்கள. நிலமாக இருக்கக்கூடிய இசையை குறை சொல்வது என்பது பூமியை குறை சொல்வது போன்றதாகும்.

இளையராஜா என்ற புகழை எந்த காசிலும் கரைக்க முடியாது .. கர்வப்பட்டால் முடியாது.. ரொம்ப நாளைக்கு நிலைக்காது..
பாரதிதாசன், பாரதியார், கண்ணதாசன், வாலி போன்ற யாரும் என் பாட்டை பாத்தியாய்யா எவனாவது எழுதி இருக்கிறானா என்று நீங்கள் சொன்னது போல் சொன்னதே இல்லை.
அப்படி என்றால் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதற்கு ஒரு தளம் உங்களுக்கு தேவைப்படுகிறது தனக்கு பிடிக்காதவர்களை திட்டி தீர்க்க உங்களுக்கு வார்த்தை கிடைக்கிறது. அதை அவர்கள் எடுத்து போடுகிறார்கள் அவங்களுக்கு என்ன அவர்கள் நான் என்ன பேசினாலும் போடு வார்கள்.
இப்போது நான் ஊரில் இல்லை அதனால் வெறும் வார்த்தை வடிவமாக சொல்லிக் கொண்டி ருக்கிறேன் ஆகவே இளையரா ஜாவை திட்டுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதைத்தான் சொல்ல வேண்டும் .

இளையராஜாவுக்கு நீங்கள் போட்ட அந்தி மழை பொழிகிறதே அல்லது இது ஒரு பொன்மாலைப் பொழுது இளையராஜாவின் இசை இல்லாமல் வேறு ஒருவரை இசையமைக்க வைத்து ஹிட் பண்ணி காட்டுங்களேன் பார்க்க லாம்.. பாக்கலாம்..
அப்பதான் தெரியும் உங்களுக்கு இளையராஜாவின் அருமை என்ன என்பது..
ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு துளியிலும்.. ஒரு டிங் என்ற சத்தத்திலும் அர்த்தத்தை சொன்னவர் அவர்.. அவரைப் பற்றி தவறாக கூறுவது மகா மட்டமான செயல்..
உங்களைவிட நான்
பெரிய ஆள் நான். வயசுல ..
ஆகவே பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். அடக்கத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.. நான் இதை சாதித்தேன் அதை சாதித்தேன் என்று கிழிக்காதீர்கள்.. இதெல் லாம் முன்னாள் தெரியாமல் போய்விட்டது பின் பின்னாளில் இப்படி செய்வானோ என்று.. வாலி சார் எல்லாம் பாருங்கள் எவ்வளவு அடக்கமாக இருந்தார் என்று, கண்ணதாசன் எவ்வளவு அடக்கமாக இருந்தார், நீங்க எவ்வளவு அட்டகாசம் செய்கிறீர்கள் என்பதை எங்களால் தாங்க முடியவில்லை .

இளையராஜாவை பற்றி கூறினால் அது நடப்பது வேறு.
வைரமுத்து கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள்..
அடக்கமாக பேசுங்கள் எல்லாவற் றையும் ..
இது பற்றி அண்ணனிடம் சொன்னால் அவர் இதை போடாதே என்று தான் என்னிடம் சொல்வார் அதனால் அவருக்கு தெரியாமல் தான் இதை நான் போடுகிறேன். இளையராஜாவை திட்டுவதுட்டு மிக மிக தவறு .
எங்களைப் போன்றோர் அதாவது உங்களைத் தவிர மற்ற எல்லோரும் எதிர்க்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

ம்ம். ..அப்புறம் நன்றி சொல்ல முடியாது..
நன்றி கெட்டவர்களுக்கு நன்றி சொல்ல முடியாது

இவ்வாறு இசையமைப்பாளர் கங்கை அமரன் வெளியிட்டுள்ள ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

Related posts

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரையுலக பயணம்..

Jai Chandran

ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளில் எடுத்த ரிஸ்க்

Jai Chandran

Dhanush appriciated vishnu vishal acting skill in FIR

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend