Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒரு நொடி. ( பட விமர்சனம்)

படம்: ஒரு நொடி

நடிப்பு: தமன்குமார், எம் எஸ் பாஸ்கர்,  வேலா ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி,, பழ கருப்பையா, தீபா சங்கர், நிகிதா , அருண் கார்த்தி,  விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ், கருப்பு நம்பியார்

தயாரிப்பு:  அழகர் ஜி,  கே.  ஜி. ரத்தீஷ்

இசை: சஞ்சய் மாணிக்கம்

ஒளிப்பதிவு: கே.ஜி. ரத்தீஷ்

இயக்கம்: பி மணிவர்மன்

வெளியீடு: ஜி தனஞ்ஜெயன்

பி ஆர் ஓ: ஸ்ரீ வெங்கடேஷ்

தொட்டால் தொடரும், சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும்  படம் ஒரு நொடி.

 

போலீஸ் நிலையத்துக்கு வரும் ஸ்ரீரஞ்சனி , “என் கணவனை காலையிலிருந்து காணவில்லை அவரை கண்டுபிடித்து கொடுங்கள்” என்று சொல்லி புகாரை வற்புறுத்தி எழுத வைக்கும்போது இது ஏதோ பெரிய கம்ப சூத்திரமாக போகும் வழக்கு என்பதை உணர முடிகிறது.   இந்த ஒரு புகார் ஒரு நொடி படமாக உருவெடுத்திருக்கிறது.

இளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக  வேடம் ஏற்றிருக்கும்  தமன்குமார் ஆர்ப்பாட்டம், அடிதடி, வீண் கூச்சல், வெட்டி பந்தா என்ற எந்த சினிமா தன வேலைகளையும் காட்டாமல் எதார்த்தமான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். அதுவும் நேர்மையான இன்ஸ்பெக்டராக வேடமேற்று கச்சிதமாக  நிறைவு செய்திருக்கிறார்.

“அந்த வட்டிக்காரங்க கிட்ட வீட்டு பத்திரம் போனா திரும்பி வராது”  என்று தன்னிடம் புகார் கூற வரும் ஸ்ரீ ரஞ்சனியிடம் ஏட்டு  சொல்லிக் கொண்டிருக்க, “ஏன் வராது ” என்று கெத்தாக குரல் கொடுத்துக் கொண்டு  வரும் தமன் குமார் யாரையும் எதிர்க்கத் துணிந்த கதாபாத்திரம் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விடுகிறார்.

“உன்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்” என்று மிரட்டும் வேலா ராமமூர்த்தியிடம் கொஞ்சமும் முகத்தில் அச்சத்தை காட்டாமல், ” உண்மையைச் சொல்லாமல் உங்களை விட மாட்டேன்” என்று கண்டிப்புடன் சொல்வதும், “என்னையே ஏமாற்றுகிறாயா உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கொக்கரிக்கும் எம் எல் ஏ பழ கருப்பையாவிடம் அதே துணிச்சலுடன் “உங்களது கர வேட்டிய உருவிடுவேன்” என்ற தொனியில் தமன்குமார் பதில் சொல்வது நறுக்கு தெரிகிறது.

படத்தின் தொடக்கக் காட்சியி லேயே கதையும் ஆரம்பமாகி விடுகிறது. அதனால் தொடக்க காட்சியை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் இல்லாவிட்டால் படத்தை மற்றொரு முறை பார்த்தால் தான் புரியும்.

வேல ராமமூர்த்தியிடம் வாங்கிய கடனை திருப்பித் தருவதற்காக எம் எஸ் பாஸ்கர் பணத்தை கொண்டு செல்லும்போது அவர் காணாமல் போவது கடைசி வரை சஸ்பென் ஸாகவே வைக்கப்படுவது படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக் கிறது.

வழக்கம்போல் தீபா சங்கர் கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுக்கிறார் அவரது கணவராக நடித்திருக்கும் அழகர் ஜி வேடத்தை கச்சிதமாக செய்திருப்பதுடன் படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவு மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் இதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர் காணாமல் போன ஒரு  கதை மட்டுமில்லாமல் இடையில் வேறு சில குட்டிக் கதைகளையும்  சேர்த்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மணிவர்மன். எம் எஸ் பாஸ்கருக்கு என்ன ஆனது என்பதை எளிதில் கணித்து விட முடியாதபடி திறரைக்கதையை முடிச்சு மேல் முடிச்சு போட்டு கொண்டு சென்றிருக்கும் விதம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் கிளைமாக்சின் அந்த  ஒரு நொடிக்காக காத்திருக்க வேண்டித்தான் உள்ளது.

இடையிடையே வரும் பாடல்  இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தை ஞாபகப்படுத்து கிறது.

ஒரு நொடி – மம்முட்டியின் சிபிஐ டைரி குறிப்பு பட பாணியில்  ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

 

 

 

 

 

 

 

Related posts

83- Only 4 days to go

Jai Chandran

சுதீர் பாபு நடிக்கும் புதிய படம் ‘ஹரோம் ஹரா’

Jai Chandran

Mahavatar Universe Announced

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend