Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டியர் ( பட விமர்சனம்)

படம்: டியர்

நடிப்பு: ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, தலைவாசல் விஜய், ரோகிணி, இளவரசு, கீதா கைலாசம்,  அப்துல் லீ, மகாலட்சுமி சுதர்சனன்

தயாரிப்பு: வருண் திரிபுரநேனி அபிஷேக் ராமி ஷெட்டி

இசை: ஜிவி பிரகாஷ்

ஒளிப்பதிவு: ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி

இயக்கம்: ஆனந்த் ரவிச்சந்திரன்

பிஆர்ஓ : யுவராஜ்

அர்ஜுனுக்கு ( ஜிவி பிரகாஷ்) வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின் றனர். ஆனால் வாழ்வில் செட்டிலா காமல் எப்படி திருமணம் செய்வது என்று அர்ஜுன் யோசிக்கிறான். ஆனாலும் குடும்பத்தினர் தீபாவை ( ஐஸ்வர்யா ராஜேஷ்) பெண் பார்க்க அழைத்து செல்கின்றனர். அவரை அர்ஜுனுக்கும் பிடித்து விடுகிறது. திருமணம் முடிந்த பிறகு பிரச்சனை ஆரம்பிக்கிறது. தீபா தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் கொண்டவராக இருப்பது அர்ஜுனுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் தீபாவை விவாகரத்து செய்ய அர்ஜுன் கோர்ட்டில் வழக்கு தொடுகிறான் அதன் பிறகு பல்வேறு திருப்பங்கள் நிகழ்கின்றன இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு டியர் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

தூங்கும்போது குறட்டை விடுவது என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல சில பெண்களுக்கும் ஒரு குறையாகவே அமைந்துவி டுகிறது. அதை ஒரு கருவாக எடுத்து டியர் கதையை அமைத்தி ருக்கிறார் இயக்குனர்.

ஜீவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிரவில் நடக்கும் வசன பரிமாற்றம் கதையின் திரியை  ஏற்றிவிடு.கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டை சத்தம்  ஜிவி பிரகாஷையும் அலற விட்டு   அரங்கை கலகலப்பில் அதிர விடுகிறது.

ஜிவி பிரகாஷ்,  ஐஸ்வர்யா ராஜேஷ் ஹனிமூன் சென்ற இடத்திலும் இதே கூத்து நடப்பது இவர்களை டைவர்சில்தான் கொண்டு போய் நிறுத்தும் என்று எண்ண வைக்கிறது. அதேபோல் அடுத்த சில காட்சிகளில் இவர்கள் பிரச்சனை கோர்ட்டுக்கு வந்துவிடுகிறது.

வெறும் கோர்ட்  வாதங்களாக காட்சிகளை அமைத்து விடாமல் அதற்கிடையில் ரோகிணி தலைவாசல் விஜய் பிரிந்து வாழும் பிளாஷபேக்கை இணைத்து அதை இன்னொரு கதையாக திரைக்கதையில் இணைத்தி ருப்பது குடும்ப செண்டிமெண்ட்.

சிறுவயதில் தங்களை தவிக்க விட்டுச் சென்ற தலைவாசல் விஜய்யை அப்பா என்று கூட அழைக்க தயங்கும்  ஜிவி பிரகாஷ,  காளி வெங்கட் இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரிடம்  கோபத்தை வெளிப்படுத்துவது   இன்னொரு குடும்ப பிரிவை ஏற்படுத்துமோ என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஜிவி பிரகாஷின் தாயாக வரும் ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாக வரும் கீதா கைலாசம் முதிர்ந்த நடிப்பை வெளியிட்டு பாத்திரத்தோடு ஒன்றியிருக் கிறார்கள்

சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் இப்போது கணவனும் மனைவியும் விவாகரத்து  கேட்டு நிற்பது வாடிக்கையாகிவிட்டது அதையும் மீறி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை டியர்  உணர்த்துவது பல தம்பதிகளை யோசிக்க வைக்கும்.

நட் மக்  புரடக்ஷன், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் வருண் திரிபுரநேனி அபிஷேக் ராமி ஷெட்டி  தயாரித்திருக்கின்றனர்.

பெரிய ஆர்டிஸ்ட் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக நாலு குத்து பாட்டு,  நாலு ஆக்சன் காட்சிகள் என்று கமர்சியல் மசாலாவை அள்ளி வீசாமல் குடும்ப செண்டிமெண்ட் கதையை இயக்கி இருக்கும ஆனந்த் ரவிச்சந்திரன் குடும்ப உணர்வு களை சரிசமமாக பகிர்ந்திருக் கிறார்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப் பதிவு தேவைக்கு ஏற்ப ஒளி பாய்ச்சி  காட்சிகளை பதிவு செய்திருக்கிறது

ஜிவி பிரகாஷ் இசையில் அர்த்தமுள்ள பாடல்கள் காதில் ரீங்காரம் இடுகின்றன.

தீபா – அர்ஜுன் என்ற கதாபாத்திரங்களின் முதல் எழுத்துக்களை இணைத்து டியர் என படத்துக்கு டைட்டில் வைத்திருப்பது. பொருத்தம்

டியர் – கணவன் மனைவி குறிப்பாக புதுமண ஜோடிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால்#31

Jai Chandran

Red Giant Movies to present Prabhas starring Pan-India film ‘Radhe Shyam’

Jai Chandran

சினிமாவில் புதிய அடையாளம் கொடுத்தவர் கே. பி சார்- ரஹமான்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend