Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நானியின் சூர்யா’ஸ் சாட்டர் டே’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

*’நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்  குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத் தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட் டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதிய ன்று திரையரங் குகளில் வெளி யாகிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – திறமை யான இயக்குநர் விவேக் ஆத்ரேயா வுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி இருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’. ‘அன்டே சுந்தரானிகி’ படத்தில் நானி மென்மையான வேடத்தில் தோன்றினாலும், இந்த திரைப் படத்தில் தனித்துவமான சாகசம் நிறைந்த இதுவரை அவர் ஏற்றிராத அதிரடியான கேரக்டரில் நடித்திருக்கிறார். டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகி றார்கள். ‘நேச்சுரல் ஸ்டார்’ நானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் களை தெரிவித்த படக் குழுவினர், இப்படத்தின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர்.

க்ளிம்ப்ஸ்.. எஸ். ஜே. சூர்யாவின் பின்னணி குரலுடன் தொடங்கு கிறது. அவர் நானியின் தனித் தன்மையை ‘சூர்யா’ என்று குறிப்பிடுகிறார். மற்ற மனிதர் களைப் போலவே கதாநாயகனும் கோபப்படுகிறான். ஆனால் அவன் அதை ஒவ்வொரு நாளும் காட்டுவ தில்லை. அவனிடம் உள்ள தனி சிறப்பு என்னவென்றால்… எல்லா சம்பவங்களையும் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு, சனிக்கிழமை களில் தன்னை தொந்தரவு செய்தவர் களை வேட்டையாடத் தொடங்குகிறான். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா நானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்ப துடன் கிளிம்ப்ஸ் நிறைவடை கிறது.

ஆரம்பம் முதலில் விவேக் ஆத்ரேயா தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டு, முதல் தரமான கான்செப்ட்டுகளுடன் படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் முதன் முறையாக முழு நீள கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நானி யின் கதாபாத்திரத்தை அவர் முன் மொழிந்த விதமும், கிளிம்ப்ஸைத் தொகுத்த விதமும்.. பார்வையாளர் களை வெகுவாக ஈர்த்திருக் கின்றன.

நானியின் கதாபாத்திர வடிவமைப்பு புதுமையாக உள்ளது. அவர் முரட்டுத்தனமான.. ஆனால் ஸ்டைலான தோற்றத்துடன் இருக் கிறார். இந்த கிளிம்ப்ஸில் அவருக்கு வசனம் எதுவும் இல்லா விட்டாலும், அவரது திரை தோன்றல் பிரமாதம். நானியின் ஆற்றல் மிகு தோற்றம் அனை வரையும் கவர்கிறது. அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்.. அந்த கதாபாத்திரத்திற்கு பிரத்யேகத் தோற்றத்தைக் கொண்டு வரு கிறது. பின்னர் அஜய் கோஷுடன் அவர் ரிக்ஷா ஓட்டும் காட்சி ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் தொகுப்பும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.‌

முரளி. ஜி யின் ஒளிப்பதிவும், கார்த்திகா ஸ்ரீனிவாசின் படத்தொகுப்பும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்தி இருக்கிறது. பின்னணியில் இடம் பெறும் ‘சமவர்த்தி..’ எனும் பாடல் நானியின் கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்ஸின் உயர்தரமான தயாரிப்பும் இந்த கிளிம்ஸில் காண முடிகிறது. நானியின் அனல் பறக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருப்ப தால்.. பார்வையாளர்களிடத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கி றார்கள் இந்த திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியா கிறது.

Related posts

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் பட படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

அமீகோ காரேஜ் (Amigo Garage)

Jai Chandran

நடிகர் சங்க தேர்தலில் நாசரின் பாண்டவர் அணி வெற்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend