Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலையாள படத்திற்கு சிவாஜி பேரவை நன்றி

கோரிக்கையை ஏற்று, மலையாளத் திரைப்படத்திற்கு “நடிகர் திலகம்” என்று வைத்த பெயரை மாற்றிய தற்கு நடிகர்திலகம் சிவாஜி பேரவை நன்றி. இதுகுறித்து நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நடிகர்திலகம்” (NadikarThilakam) என்ற பெயரில், ஜீன் பால் லால் இயக்கத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்கப்படுவது அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே,சந்திரசேகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.

நடிகர் திலகம் – இது வெறும் பெயரல்ல…. எங்கள் உயிர் மூச்சு.. இது வெறும் பட்டம் அல்ல, தமிழ் சினிமாவின் உயிரெழுத்து. நடிகர் திலகம் என்ற பட்டம் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து மறைந்த கலை உலகின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரசிகர்கள் அளித்த அடைமொழி. எனவே இந்த டைட்டிலை மாற்றிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

டைட்டில் மாற்றத்திற்கு நன்றி
எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் திலகம் என்ற திரைப்படத் தலைப்பை “நடிகர்“ என்று மாற்றி வைத்ததற்கு உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் சார்பிலும், நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பிலும். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கே. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

Related posts

பெரியார் பிறந்தநாள், கமல்ஹாசன் கருத்து..

Jai Chandran

1 crore+ digital views for PushpaTrailer tease

Jai Chandran

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்துக்காக உருமாற்றம்: பிரபாஸ் ஓபன்டாக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend