Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யுடன் என்னை ஒப்பிட்டால் எனக்கு மரியாதை இல்லை: ரஜினிகாந்த் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால்,  விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர் இப்படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கு கிறார். இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் “ஏற்கனவே தான் ஜெயிலர் பட விழாவில் பேசிய போது, கழுகு காக்கா என்று கூறிய கதையை விஜய்யையும் என்னையும் ஒப்பிட்டு பேசியதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது தவறு.  விஜய்யை நான் என்னுடன் ஒப்பிட்டு பேசவில்லை விஜய்யுடன் என்னை ஒப்பிட்டால் அது எனக்கு மரியாதை இல்லை அதே போல்  என்னுடன் விஜய்யை  ஒப்பிட்டால் விஜய்க்கு மரியாதை இல்லை” என்று கூறினார்.

இது குறித்து லால் சலாம்  பட விழாவில் ரஜினிகாந்த் கூறிய தாவது:
விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிருக்கும். ஷூட்டிங் பார்த்துட்டிருந்தாங்க. ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. நீங்க சொல்லுங்க, படிச் சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு நீங்க சொல்லுங்க என்றார். அப்ப விஜய்ட்ட நல்லா படிப்பா. அதுக்கப் புறம் ஆக்டர் ஆகலாம்னு சொன் னேன். அதுக்கப்பறம் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். நெக்ஸ்ட் அரசியல்… சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு… எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா… ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு. தயவு செஞ்சு ரெண்டு பேர் ஃபேன்ஸும் ஒப்பிடவேண்டாம். நிப்பாட்டுங்க… இது என்னுடைய அன்பான வேண்டுகோள்… ப்ளீஸ்.. ரொம்ப நன்றி!. இவ்வாறு ரஜின்காந்த் கூறியுள்ளார்.

Related posts

ஒரே ஷாட்டில் உருவான  டிராமா திரைப்படம். 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..

Jai Chandran

Independent music video HeySingari

Jai Chandran

கொரோனா தடுப்பு: முதல்வருடன்  பிரதமர் ஆலோசனை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend