Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் (பட விமர்சனம்)

படம்: மெரி கிறிஸ்துமஸ்

நடிப்பு: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராஜேஷ், ராதிகா,  சண்முக ராஜா , பரி மகேஷ்வரி, அஸ்வினி கால்சேகர் மற்றும் பலர்

தயாரிப்பு: ரமேஷ் தவுராணி , சஞ்சய் ரவுத்ரே, ஜெயா தவுராணி , கேவல் கர்க்

இசை: ப்ரீதம் (பாடல்கள்)

பின்னணி இசை: டேனியல் பி ஜார்ஜ்

ஒளிப்பதிவு: மது நீலகண்டன்

இயக்கம்: ஶ்ரீ ராம் ராகவன்

பி ஆர் ஒ: யுவராஜ்

துபாயில் இருந்து பம்பாய் திரும்பு கிறார் விஜய் சேதுபதி. கிறிஸ் துமஸ் தினமான அன்று ஒரு ஓட்டலுக்கு சென்று அமர்கிறார். அங்கு வரும் ஒருவர் அவசரமாக அவரிடம் “நான் வெளியில் செல்ல இருப்பதால் அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் நான் வரமாட்டேன்”  என்று சொல்லிவிட்டு  கத்ரீனாவை கைகாட்டிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார். அந்த தகவலை கத்ரீனாவிடம்  விஜய் சேதுபதி சொல்ல அதை சைலண்டாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு சரி என்கிறார்.  சிறிது நேரத்தில் விஜய் சேதுபதி தியேட்டருக்கு செல்கிறார். அந்த இடத்திலும் கத்ரீனா மகளுடன் வருகிறார். அப்போது விஜய் சேதுபதிக்கும் கத்ரீனாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. கத்ரீனா  மகள் தூங்கி விடுவதால் அவருக்கு உதவி செய்வதற்காக குழந்தை யை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு  வீடு வரை சென்று விஜய் சேதுபதி  விடுகிறார். வீட்டுக்கு வந்தவருக்கு   ரம் ஊற்றி  கொடுக்கிறார் கத்ரீனா.  இருவரும் இணைந்து ரம் குடிக்கிறார்கள், ஆட்டம் போடுகிறார்கள். பின்னர் இருவரும்  வெளியே சென்று விட்டு திரும்பி வரும்போது  வீடு திறந்துகிடக்கிறது. உள்ளே சென்று கத்ரீனாவின்  கணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக  கிடக்கிறான். அதைக் கண்டு விஜய் சேதுபதி அதிர்கிறார் உடனே போலீசுக்கு தகவல் சொல்ல முயலும்போது “நான் இங்கு இருப்பது போலீசுக்கு தெரிந்தால் உனக்குத்தான் பிரச்னை. ஏனென்றால் ஏற்கனவே நான் என் மனைவியை கொன்று விட்டு ஏழு வருடம் ஜெயிலில் இருந்து விட்டு இப்போதுதான்  வந்திருக்கிறேன்”  என்று சொல்ல கத்ரீனா ஷாக் ஆகி, ” நீ வீட்டை விட்டு வெளியே போ” என்று விஜய் சேதுபதி விரட்டுகிறார். இதே பாணியில் மற்றொருவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் கத்ரீனா. அப்போதும் அதே பாணி யில் கணவன் இறந்து கிடக்க கத்ரீனாவுடன்  வரும் நபர் அதிர்ச்சி அடைகிறார். அவர் போலீசுக்கு தகவல் சொல்கிறார். போலீஸ் வருகிறது . இதற்கிடையில் விஜய் சேதுபதியும் அந்த இடத்தில் இருக்கிறார் மூவரையும் போலீஸ் அள்ளிக் கொண்டு செல்கிறது. அதன்பிறகு நடப்பது என்ன? கத்ரீனாவின் கணவன் தற்கொலை செய்து கொண்டானா ?, கொலை செய்யப்பட்டானா? யார் அவனைக் கொன்றது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு மெரி கிறிஸ்துமஸ் கிளைமாக்ஸ் பதில் அளிக் கிறது

வழக்கமாக விஜய்சேதுபதியை படங்கள் என்றாலே அது ஒரு ஜாலியாக அல்லது ஒரு ஆக்சன் படமாக இருக்கும் ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை இதுவொரு   சஸ்பென்ஸ் திரில்லர். விஜய்சேதுபதி இந்தியில் கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனாலும் தமிழுக்கான காட்சிகளை தமிழிலேயே பேசி படமாக்கி இருப்பது ஸ்பெஷல்.
விஜய் சேதுபதி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பெண்ணாக கேத்தரினா கைஃப் நடித்திருக் கிறார். பாதி படம் வரை இவர்கள் இருவருக்குமான உரையாடல் நட்பு காதல் என்று காட்சிகள் செல்கின் றன
விஜய் சேதுபதி வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் கத்ரீனா கைஃப் திடீரென்று விஜய் சேதுப திக்கு மது குடிக்கிறீர்களா என்று கேட்கும்போது விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஒரு ஷாக் ஏற்படுகிறது.
தனியாக ஒரு பெண்,  வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு மது குடிக்கி றீர்களா என்று கேட்டு சிக் உடை யிலும் நிற்கும்போது வந்த நபருக்கு எப்படி  காம நரம்புகள் துடிக்குமோ அதுபோல்தான் விஜய் சேதுபதிக்கும் காமத்தை தூண்டி விடுவதுபோல் கத்ரீனா கைப்பின் நடவடிக்கைகள் இருக்கின்றன அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் நிலையில் காட்சி மாறி இருவரும் வெளியில் செல்வதும் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும்போது அங்கு கத்ரீனாவின்  கணவர்  ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதும் மற்றொரு பெரிய ஷாக்.

விஜய் சேதுபதியை தன் வீட்டிற்கு அழைத்து வந்தது போலவே மற்றொரு நபரையும் கத்ரீனா தன் வீட்டிற்கு அழைத்து வந்து விஜய் சேதுபதியை எப்படி உபசரித்தாரோ அதேபோல் உபசரித்து அவருக்கும் ஆசையை தூண்டுவதுபோல் பேசும்போது இவர் ஒரு மர்மபெண்  என்பதை வெளிப்படுத்துகிறார். அங்கு விஜய்சேதுபதியும் வந்து நிற்கும்போது காட்சி விறுவிறுப்பை கூட்டுகிறது.
கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசில் கத்ரீனா புகார் தருவதும் ஆனால் போலீஸ் ஏட்டாக வரும் ராதிகா அதை நம்பாமல் விஜய் சேதுபதி மீதும் கத்ரீனா கைப்புடன் வந்த நபர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை துருவி துருவி விசாரிக்கும் போது ஏதோ ஒரு சஸ்பென்சை ராதிகா உடைக்கப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் மூவரும் பேசி வைத்துக் கொண்டது போல் ஒரே பதிலை சொல்வதால் போலீஸ் அவர்களை விடுவிக்கும் நிலையில் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் இன்னொரு டிவிஸ்ட்  தருவது ரசிகர்களை திணறடிக் கிறது.

நிமிடத்துக்கு நிமிடம் திருப்பம் என்று சொல்வார்களே அதை மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கிளை மாக்ஸ் காட்சியில்  இயக்குனர் அமைத்திருப்பது விறுவிறுப்பு..

தமிழில் 40 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த புதிய பறவை படத்தை ஞாபகப்படுத்துவது போல் ஒரு சில காட்சிகள் இருக்கின்றன ஆனால் புதிய பறவை படத்தின் புதிய வெர்ஷன் வந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்படம் திரையில் ஓட்டிக் காட்டி இருக் கிறது.
விஜய் சேதுபதிக்கு இந்த படம் இந்தியில்  கைகொடுக்கும் என்று நம்பலாம்.. இந்திக்கு சென்று விட்டோம் என்பதால் அவர் தனது பாணியை  மாற்றிக் கொள்ளாமல் இயல்பான  நடிப்பை வெளியிட்டு வழக்கம் போல்  கவர்கிறார்.
இது மொழி மாற்ற படம் என்றாலும் இந்தி நடிகை கத்ரீனா கைஃப் முதன் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். தான் கவர்ச்சி ஹீரோயின் மட்டுமல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகை என  நிரூபிக்கிறார்.

அப்பாவிபோல்  விஜய் சேதுபதியிடம் கத்ரீனா  பேசுவதும் அதே பாணியில் தன் வீட்டிற்கு அழைத்து வரும் மற்றொரு நபரிடம் பேசுவதும் தன்னால் சைலன்ட் வில்லியாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் கத்ரீனா.

கொலை வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் ஏட்டாக ராதிகா நடித்திருக் கிறார். சீனுக்கு சீன் சந்தேகப்பட்டு விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் ஆகியோரிடம் சந்தேகக்கண் ணுடன் கேள்வி கேட்பது ஏதோ ஒரு குழு அவருக்கு கிடைத்திருக் கிறது. ஆனால் அதை அவரால் உடனடியாக கண்டறிய முடிய வில்லை என்பதை தனது நடிப்பின் மூலம் மென்மையாக வெளிப். படுத்தி இருக்கிறார்.

சண்முகராஜா போன்றவர்களும் நடித்திருப்பதால் இதை ஒரு தமிழ் படம்போல உணர முடிகிறது.
படத்தில் எல்லா காட்சிகளும் சரிதான் ஆனால் ஒரே குடியிருப்பில் இரண்டு வீடு என்று இயக்குனர் கதை விடுவதுதான் புரியவில்லை. எப்படியும் லிப்டில் தான் செல்கிறார்கள் இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்பது கூடவா போலீசாலும்,  விஜய் சேதுபதியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மைனஸ்.

ப்ரீதம் (பாடல்கள்), பின்னணி இசை: டேனியல் பி ஜார்ஜ் இரண்டுமே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

மது நீலகண்டன் கேமிரா பழைய பம்பாய்க்கு கூட்டிச் செல்கிறது.

ஶ்ரீ ராம் ராகவன் ரசிக்கும்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் தந்திருக் கிறார்.

மெரி கிறிஸ்துமஸ் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

 

 

 

Related posts

2 வருடம் பிரேக் எடுத்து படம் இயக்கிய ஜோஜு ஜார்ஜ்

Jai Chandran

பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ டிரெய்லர் சூப்பர் ஹிட்

Jai Chandran

first look poster of BlackbirdAlbum

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend