Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கூசே முனிசாமி வீரப்பன் (ஆவணப் பட சீரிஸ்)

படம்: கூசே முனிசாமி வீரப்பன் (ஆவணப் பட சீரிஸ்)

கதை: சந்தன கடத்தல் வீரப்பன் கதை

நடிப்பு:  மலைவாழ் மக்கள் மற்றும் பலர்

தயாரிப்பு: தீரன் புரடக்க்ஷன்  பிரபாவதி ஆர் வி

இசை: சதீஷ் ரகுநாதன்

ஒளிப்பதிவு: ராஜ் குமார் பி எம்.

இயக்கம்: சரத் ஜோதி

ரிலீஸ்: ஜி5ஒ டி டி தளம்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

சந்தன கடத்தல், வனக் கொள்ளைக்காரன் கூசே  முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது இந்த ஆவணப் பட சீரிஸ்.. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத் துகிறது.

நக்கீரன் கோபால் வீரப்பனை காட்டில்  சந்தித்து எடுத்த பேட்டி அதில் கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த் பற்றி வீரப்பன் அளித்துள்ள.எடிட் செய்யப்படாத பேட்டிகள் என வீரப்பனின் அதிரடி கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் அதிரடி படையினர் வன பகுதி மக்களுக்கு அளித்த துன்புறுத் தல்கள் அவர்களது நேரடி பேட்டிகள் ஆகியவையும் .இடம். பெற்றுள்ளன.

ஆவணப் படம் என்றாலும் ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலும் மலைப் பகுதி மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்லும்போது இவர்களுக்கு இன்னும்.கூட நீதி கிடைக்கவில்லையே ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சதீஷ் ரகுநாதன் இசை அமைக்க

கடினமான காட்சிகளை கண்முன் நிறுத்துகிறார்  ராஜ் குமார் பி எம்.ஒளிப்பதிவாளர்

சரத் ஜோதி சின்மாத்தனம் இல்லாமல் இத் தொடரை இயக்கி இருப்பது தனி கவனத்தை இருக்கிறது.

ஜெயேந்திர ஆஸ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் இதன் ஸ்கிரிப்ட்டை உண்மை பிறழாமல் தயாரித்திருக்கிறார்கள்

ஜி5ஒ டி டி தளம் கூசே முனிசாமி வீரப்பன் ரிலீஸ்.ஆகி உள்ளது.

 

Related posts

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு லைகா சுபாஷ்கரன் ரூ 2 கோடி நிதி

Jai Chandran

Karunakaran, Poornima, Viji On board for kiruthikaudayanithi Movie

Jai Chandran

Yash- Namit Malhotra Produce Global Epic Ramayana

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend