Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆத்மீகா (பட விமர்சனம்)

படம்:  ஆத்மீகா

நடிப்பு: ஆனந்த் நாக் , ஜஸ்வர்யா, ஜீவா ரவி, பிர்லா போஸ்,வினிதா , பேபி அக்ஷயா

இசை: சரண்குமார்

ஒளிப்பதிவு: கலைசக்தி

இயக்கம்: தாமோதரன் செல்வகுமார்

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் ஆனந்த் நாக் நடிப்பில் உருவாகியிருக்கிறது ஆத்மீகா. இப்படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார்

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆத்மீகா படம்  மெடிக்கல் மாஃபியாவை குறிவைக்கிறதா என்பதை ஆக்ஷன் மிரட்டலுடன் கூறியிருக் கிறது

விஞ்ஞான மருத்துவம் தவறாக சென்றால் விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக   இருக்கும் என்பதை கண்முன் நிறுத்துகிறது இப்படம்.

திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தில்  ஆனந்த் நாக் , ஜஸ்வர்யா, ஜீவா ரவி, பிர்லா போஸ்,வினிதா , பேபி அக் ஷயா  இன்னும் முக்கிய பிரபலங்கள் சவாலான பாத்திரங்கள் ஏற்று துணிச்சலாக   நடித்துள்ளனர் .

இப்படத்தின் இயக்குனர்  தாமோதரன் செல்வகுமார் ஏற்கெனவே  மூடர் என்ற குறும்படத்தை இயக்கி சிறந்த இயக்குனர்  மற்றும் சிறந்த வசனத்திற்கு என இரண்டு ஆசிய விருதுகள் பெற்றவர்.

கொரோனா வருவதற்கு முன்பே கொரோனாவை பற்றி குறும்பட மாக எடுத்து எச்சரித்து வெளியிட் டதால் அந்த எபெக்ட் ஆத்மீகா படத்திலும் ஏற்படுமா ? ஆத்மீகா படத்தில் உள்ள காட்சிகள் நிஜத்தில்  நடைபெறுமோ என்ற பரபரப்பையும்,  சர்ச்சையையும கிளப்பி கொண்டு இருக்கிறது ஆத்மீகா படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் இப்படி முணுமுணுப்பதுபற்றி  இயக்கு னரிடம் கேட்டால்,”  நாங்கள் உண்மையை தானே கூறுகிறோம்” என்கிறார் .

படத்தின் ஒளிப்பதிவை கலைசக்தி கையாண்டிருக்கிறார் . காட்சி களை சஸ்பென்ஸ் உடையாமல்  படத்தொகுப்பு செய்துள்ளார் ராஜேஷ். காட்சிகளுக்கு த்ரில்லர் எஃபெக்ட் தந்து கவர்கிறார் இசை அமைப்பாளர்  சரண்குமார் .

ஆத்மீகா மெடிகல் மாஃபியாவின் சதிகள் .அம்பலம்

 

Related posts

Naga Chaitanya, Chandoo Mondeti, Bunny Vas Meet Fishermen Families

Jai Chandran

The Film Federation Of India meeting was held in Mumbai

Jai Chandran

நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend