Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

செவ்வாய்கிழமை ( பட விமர்சனம்)

படம்: செவ்வாய்க்கிழமை

நடிப்பு: பாயல் ராஜ்புத், ஶ்ரீதேஜ்,  அஜ்மல் அமீர்,  சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன்

நிர்வாக தயாரிப்பு: சாய்குமார் யாதவள்ளி

இசை: பி. அஜனீஷ் லோகநாத்

ஒளிப்பதிவு: தசரத்  சிவேந்த்ரா

இயக்கம்: அஜய் பூபதி

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

 

கிராமத்தில் சிறுவயதில் நண்பர் களாக இருப்பவர்களில் சிறுவன் குடிசையுடன் எரிந்து விடுகிறான். நண்பனை இழந்த சிறுமி  சைலு (பாயல் ராஜ்புத்) பாட்டியுடன் வளர்ந்து ஆளாகிறாள். அவளுக்கு விநோதமான பிரச்னை எழுகிறது. உடலில் அதிக ஹார்மோன்கள் சுரப்பதால் காமம் என்ற இச்சைக் குள்ளாகிறாள். இதனால் பல ஆண்களுடன் உறவு கொள்கிறாள். இதனால் ஊர்மக்கள் அவளை அடித்து துரத்துகின்றனர். கிணற்றில் விழுந்து  தற்கொலை செய்கிறாள்.  அவளது சாவுக்கு காரணமானவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை சொல்வது யார்?  என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒவ்வொன்றாக பதில் கிடைக்கிறது.

மாறுபட்ட கதை என்பார்களே அப்படிப்பட்ட  வரிசையில் இடம்பிடிக்கும்.படம் செவ்வாய் கிழமை.  தொடக்க காட்சிகளில் இருந்து வரும் டிவிஸ்ட்கள் ஒன்றல்ல இரண்டல்ல எக்கச்சக்கம்.  ஒரு சில டிவிஸ்ட்டை யூகிக்க முடிந்தாலும்  கிளைமாக்ஸ் வரையே சில டிவிஸ்ட்கள் யூகிக்க முடியாதளவுக்கு தொடர்வது உண்மையிலேயே சஸ்பென்ஸ் தான்.

சில ஹீரோயின்கள் எளிதில் ஏற்க மறுக்கும் மாறுபட்ட பாத்திரத்தை துணிச்சலாக பாயல் ராஜ்புத் ஏற்றிருப்பது ஷாக்தான்.

உடலில். அதிக காம சுரப்பிகள் சுரப்பதால் செல்லும் இடத்தில் எல்லாம்  எந்த ஆண் கிடைத்தாலும் அவர்களுடன் உறவு கொண்டு  இச்சையை தீர்ப்பதெல்லாம் இளசுகளை மட்டுமல்ல பெரிசு களையும் சூடேற்றும் காட்சிகள்..

“கோ” பட ஹீரோ அஜ்மல் நீண்ட நாட்களுக்கு.பிறகு இப்படத் தில் ஆங்கில வாத்தியாராக வருகிறார். பாடம் நடத்துகிறாரோ இல்லையோ பாயல் ராஜ்புத்துடன் உருண்டு புரண்டு நன்றாக சல்லாபம் நடத்துகிறார்.

ஜமீன்தாராக வரும்  ஶ்ரீதேஜ் வில்லன் போல் ஆக்ஷன் காட்டினாலும் அவரது பாத்திரம் மனதில் இடம்பிடிக்கிறது.

படத்தில் நடித்திருப்பது பலரும் தெலுங்கு நடிகர்கள் என்பதால் இது மொழி மாற்றுப்படம் என்பது அப்பட்டமாவே தெரிகிறது.

அஜ்னீஸ் லோக்நாத்  இசையும், திகில் சஸ்பென்ஸ் வெளிப்படாமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் தசரத் சிவேந்த்ராவும் படத்துக்கு பக்க பலம்.

அஜய் பூபதி இரண்டு மூன்று படங்களில் வைக்க வேண்டிய சஸ்பென்ஸ் டிவிஸ்ட்களை சலிக்க சலிக்க.ஒரே படத்தில் வைத்து அசத்தி இருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை – கதைக் கரு கள்ள தொடர்பு  என்றாலும்  சஸ்பென்சும்  கிளுகிளுப்பும் தூக்கலோ தூக்கல்.

 

 

 

 

 

Related posts

ரயில் (பட விமர்சனம்)

Jai Chandran

R. Madhavan Unveils Trailer of “GDN”..

Jai Chandran

INSIDIOUS:THE RED DOOR

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend