Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்.எஸ்.பாஸ்கர் கன்னத்தில் ஆவேசமாக அறைந்த ஹரிஸ்

ஐ டி அலுவலகத்தில் பணி புரியும் ஹரிஷ் கல்யாண்  கர்ப்பிணி . மனைவி இந்துஜாவுடன்  வசித்து வருகிறார். அதே வீட்டு வளாகத்தில்  மற்றொரு போர்ஷனில் எம். எஸ். பாஸ்கர் வாழ்ந்து வருகி றார்.  ஹரிஸ் கல்யாண் புதிய கார் ஒன்றை வாங்கி அதை தன் வீட்டு வளாகத் தில் நிறுத்தினார். ஆனால் அந்த இடத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஏற்கனவே  தனது காரை பார்க் செய்வது வழக்கம். தன் காரை நிறுத்தும்.இடத்தில் ஹரிஸ் கார் நிறுத்தி இருந்ததால்   கோபம் அடைந்த பாஸ்கர் ஹரிசை அழைத்து காரை அங்கி ருந்து எடுக்கச் சொல் கிறார். ஆனால் அதற்கு ஹரிஷ் மறுத்துவிட  கோபம் அடைந்த பாஸ்கர்  அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து ஹரிஷ் கார் கண்ணாடி மீது வீசி உடைத்தார். புதிய காரின் கண்ணாடியை உடைத்த பாஸ்கர் மீது கோபம் அடைந்த ஹரிஷ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந் தார. இதில் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார் .

இப்படியொரு பரபரப்பான காட்சி பார்க்கிங் என்ற படத்துக்காக படமாக்கப் பட்டது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.  சாம் சி.எஸ்.     இசை அமைக்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். என்.கே.ராகுல் அரங்கம் அமைக்கிறார். தினேஷ் பாபு, போனிக்ஸ் பிரபு ஸ்டண்ட் அமைக்கின் றனர். யுகபாரதி பாடல் எழுதுகிறார்.ஸ்பாட் நடனப் பயிற்சி அளிக்கிறார். பத்திரிகை தொடர்பு சுரேஷ் சந்திரா.  (D’One), ரேகா. பேஷன் ஸ்டுடி யோஸ் மற்றும் சோல் ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் நடித்தது பற்றி.ஹரிஸ் கல்யாண் கூறும்போது,’ கார், பைக் வைத்திருக்கும் நிறைய பேர் அதை வீட்டில் பார்க்கிங் செய்ய இடமில் லாமல் வீட்டுக்கு வெளி யில்  அல்லது வேறு வீட்டு  எதிரில் நிறுத்துகின்றனர். இதனால் பெரிய சண்டை ஏற்படுகிறது. சில சமயம் கொலையிலும் போய் முடிகிறது. பார்க்கிங் பிரச்னை என்பது ஈகோவை தூண்டும் ஒரு  பெரும் பிரச்சனை. இதுபோன்ற சம்பவங்கள் அன்றாட. நிகழ்வாகவே பல இடங்களில் ஏற்படு கிறது. இதை மையமாக வைத்து குடும்ப பின்னணி யில் ஒரு கதையை இயக் குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் கூறியபோது எனக்கு பிடித்தது. இதுபோன்ற பிரச்னை களை. நான் பள்ளியில் படிக்கும்போதே அனுபவித் திருக்கிறேன் பலரும் இதை அனுlபவித்திருப் பார்கள். இது எல்லோ ருக்கும் கனெக்ட் ஆகும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டுள்ளது. இப்படம் எனக்கு  ஒரு மாறுபட்ட அனுபவம் தந்தது” என்றார்.

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறும் போது,” கண்ணெதிரி லேயே  பார்க்கிங் பிரச்னைகளால் இருவருக்குள் மோதல் ஏற்பட்டதை பார்த்திருக்கி றேன். இந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. இந்த பிரச்னையால் சில இடங்களில் கொலை  கூட நடந்திருக்கிறது.ஹரிஸ் கல்யாண் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படம் கார் சம்மந் தப்பட்ட கதை  என்பதால் 2 புது கார்கள் வாங்கித்தான் பபடப்பிடிப்பில் பயன்படுத்தி  உள்ளேன் ” என்றார்.

 

 

 

கில் கில்

Related posts

வாழ்வியலைச் சொல்லும் படம் ஆல் பாஸ்..

Jai Chandran

அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் தீர்க்கதரிசி

Jai Chandran

The first look & title of VelsSignature’s upcoming short film #4 Tomorrow

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend