Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டூ்ப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த ப்ரியாமணி: QG டைரக்டர் தகவல்

பிலிமினாட்டி என்டர் டெயின்மென்ட் மற்றும் குருஜோதி பிலிம்ஸ்  இணைந்து தயாரிக்கும் படம் QG     (கொடேஷன் கேங் ). இப்படத்தை கதை, திரைக்கதை  வசனம் எழுதி இயக்கி தயாரிக் கிறார் விவேக் குமார் கண்ணன். மேலும் காயத்ரி சுரேஷ் ஜி.விவேகநந்தா இணைந்து தயாரிக்கின் றனர்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இசை அமைப் பாளர்.டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார் வெங்கட் ரமணன் எடிட்டிங் செய்கிறார். பிரகாஷ் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா  (D’One)

இதில் ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன், பேபி சாரா, அஷ்ரப்,  விஷ்ணு, பிரதீப், அக்ஷயா முக்கிய வேடங் களில் நடிக்கிறார்கள்.

வட சென்னை பின்னணி யில்  இப்படம் உருவாகி இருக்கிறது .

இதுபற்றி இயக்குனர் விவேக்குமார் கண்ணன் கூறியதாவது,:

நான் வட சென்னைக் காரன். மக்கள் பலவிதங் களில் வாழ்கிறார்கள். உழைத்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள.  ஏமாற்றி வாழ்பவர்கள் இருக்கி றார்கள். சிலர் ரவுடியிசம் செய்து வாழ்கிறார்கள்.

இன்னும் ஒரு கூட்டம் கூலிக்கு கொலை செய்து வாழ்கிறது.  இவர்களை கூலிப் படையினர் என்றும் கூறுகிறார்கள். இவர்க ளுக்கென்று தனி உலகம் இருக்கிறது.  கொலை செய்வது போன்ற கொடூர வேலையில்  ஈடுபட்டாலும் தங்கள் செய்வது தவறு என்று கூட அவர்களுக்கு தெரியாது. இதுதான் நம் வாழ்க்கை என்று அவர்கள் வாழ்கிறார்கள் அப்படி யொரு கூட்டத்தின்   வாழ்க்கை எப்படிபட்டது என்பதை  சொல்லும் கதைதான் QG . அதாவது  “கொடேஷன்  கேங் ”

“கொடேஷன்  கேங் ” என்பது கேரளாவில் இருக்கும் ஒரு கூலிப்படை கூட்டம். அதுபற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக் கிறேன் . இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பாதால் அந்த பெயரை  டைட்டிலாக வைத்தேன்.

இதில் பிரியாமணி முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கிறார்.பயங்கரமான ஆக்ஷன் காட்சிகளில். டூப் போடாமல் நடித்திருக் கிறார்.  இந்த கதாபாத் திரத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்ட போது,” நானா இந்த வேடத்திலா”  என்று ஆச்சரியமாக கேட்டார். “உங்களால்.இது முடியும்” என்று சொன்ன பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார்.  ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க பிரியாமணி பயிற்சியும் பெற்றார்.

தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்தி ரமாக நடித்த பேபி சாரா இதில்  இளம் கதாநாயகி யாக நடிக்கிறார்.  போதை மருந்துக்கு அடிமையான பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறார்.

நாட்டில் போதை மருந்துக்கு இளைஞர்கள் பலர் அடிமையாக இருக்கி றார்கள். அவர்கள் எப்படிப் பட்ட சூழலில் இதற்கு அடிமையாகிறார்கள் என்பது பல பெற்றோர் களுக்கு தெரிவதில்லை. அதுபற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதுவதாக சாரா நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

கண்டிப்பாக இது ரவுடியி சத்தின்  ஒரு கருப்பு அத்தியாயத்தை சொல்லும் படமாத்தான் இருக்கும். அதனால் ஆக்ஷன் காட்சிகள்  அதற்கு ஏற்ப அமைக்கப் பட்டிருக்கின்றன .

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், மும்பை, சென் னையில் நடந்துள்ளது.

இவ்வாறு இயக்குனர் விவேக் குமார் கண்ணன் கூறினார்.

 

 

 

Related posts

மறு படத்தொகுப்புடன் டிஜிட்டலில் ரஜினியின் பாபா

Jai Chandran

Dejavu releasing in Kerala today!

Jai Chandran

தமிழ்க் குடிமகன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend