Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘நானி 31’ படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா

நேச்சுரல் ஸ்டார் நானி- திறமை யான இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன் மெண்ட்ஸ் இணைந்து உருவாக்கும் ‘நானி 31’ எனும் படத்தில் பன்முக திறமை மிக்க நடிகரான எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிbறார்.

நேச்சுரல் ஸ்டார் நானியும், ‘அந்தே சுந்தரானிகி’ போன்ற கல்ட் என்டர் டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31’ படத்திற்காக மீண்டும் இணைந்தி ருக்கிறார்கள். இந்த திரைப் படத்தை ‘ஆர் ஆர் ஆர்’ போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த  டிவி வி என்டர் டெயின் மென்ட்ஸ்   சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கி றார்கள்.

‘நானி 31’ தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடு வதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத் தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப். பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியா சமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தற்போது ‘நானி 31’ படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா அசுரத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற் காகவே பெயர் பெற்றவர். அதாவது விவேக் ஆத்ரேயா போன்ற இயக்குநரின் இயக்கத் தில் இவர் நடிக்கவிருப்பதால் வித்தியாசமான நடிகராக இவர் திரையில் தோன்றுவார் என்ற எதிர்பபார்ப்பை ஏற்படுத்தியிருக் கிறது.

‘நானி 31’ இம்மாதம் 23ஆம் தேதியும், பூஜை 24 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய உற்சாகமான அப்டேட்டுகளும் தொடர்ந்து வரவிருக்கிறது.

Related posts

Kaml beginning the third phase of election campaign from today

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Jai Chandran

உள்ளங்கையில் ஒலகம் சுத்துது.. பாடல் படமானது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend