Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

புது வேதம் (பட விமர்சனம்)

படம்: புதுவேதம்

நடிப்பு: காக்கா முட்டை விக்னேஷ், ரமேஷ்,  இமான் அண்ணாச்சி, சஞ்சனா, பவித்ரா, வருணிகா, சிசர் மனோகர்,

தயாரிப்பு: விட்டல்  மூவிஸ்

இசை: ரபி தேவேந்திரன்

ஒளிப்பதிவு: கே. வி. ராஜன்

இயக்கம்: ராசா விக்ரம்

பி ஆர் ஒ: நெல்லை சுந்தர்ராஜன்

 

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் படைப்பாக புதுவேதம் உருவாகியி ருக்கிறது. அனாதைகளாக குப்பை மேட்டில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள் ஆறு ( விக்னேஷ்), பரட்டை (ரமேஷ்) நண்பர்களாக வளர்கின்றனர். அதே இடத்தில் குப்பை பொறுக்கும் பெண் மீது ஆறு காதல் கொள்கிறான். அவளோ வேறு ஒருவனை காதலித்து ஏமாறுகிறாள். இந்நிலையில் பரட்டையின் தாய் யார் என்று தெரியவர அவன் தாயுடன் ஊருக்கு செல்கிறான். காதலித்து ஏமாந்த பெண் குழந்தை பெற்றெடுக்கிறாள். அதேசமயம் அவளை ஏமாற்றிய வனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பது அறிந்து அவனிடம்.நியாயம் கேட்க அப்பெண்ணையும்.கைக் குழந்தையையும் அழைத்துச் செல்கிறான் ஆறு. அங்கு எதிர்பாராத திருப்பம் நிகழ்கிறது அது என்ன என்பதை கிளை மாக்ஸ் புது. டிவிஸ்ட்டுடன் சொல்கிறது.

நிறைய படங்கள் வருகின்றன வெறும் காதல், சாதி பாகுபாடு என்று  கருவை கொண்டிருக். கின்றன. அவைகளிலிருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கிறது புது வேதம்.

குப்பை மேட்டில் கதைக்களம் அமைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு சமூக கருத்தை சொல்ல வேண்டும் என்ற இயக்குனரின் ஆதங்கம் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. குப்பை பொறுக்கும் சிறுவர்களை ரவுடிகளாக சித்தரிக்காமல் அவர்களுக்குள் அன்பு, காதலை பிரதிபலித்திருப்பதே அதற்கு சான்று.

காக்கா முட்டை படத்தில் சிறுவர் களாக நடித்த விக்னேஷ்,   ரமேஷ் இதில் ஹீரோக்களாகவும் நல்ல நண்பர்களாகவும் நடித்துள்ளனர். எந்தவிதத்திலும் எதார்த்தத்தை விட்டுக் கொடுக்காமல் இயல்பாக தங்கள் பாத்திரங்களில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

தான் காதலிக்கும் பெண் வேறு வொருவனிடம் ஏமாந்து வந்து நிற்பதை கண்டு வருந்தும் விக்னேஷ் அவளை வெறுக்காமல் கூடவே இருந்து மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று பிரசவம் வரை துணை நிற்பது உண்மையான காதலின் வெளிப்பாடு.  கிளைமாக்சில் தன் தாய் யார் என்பது தெரிந்தும் அவரிடம்  கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்ணுக்கு நியாயம் கேட்பதும் பின்னர்  விக்னேஷ் எடுக்கும் முடிவும் பட டைட்டிலுக்கு நியாயம் செய்கிறது.

இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். குப்பை மேட்டில் பொறுக்கி மோசடி வியாபாரம் செய்து பின்னர் பழைய நிலைக்கே திரும்புவது காமெடி கலந்த வில்லத்தனம் . பெண்களுடன் கவர்ச்சி கும்மாளம்போட்டு கறுப்பு  மன்மதகுஞ்சாகவே மனுஷன் ஜமாய்த்திருக்கிறார்.

2 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் இதில் டாக்டர் கதாபாத்திரத்திலே யே நடித்திருக்கிறார். இவரைப் பற்றி செய்திகளில் பலர் கேள்விப் பட்டிருக்கலாம் அவரையும் படத் தில் ஒரு பாத்திரமாக இணைத் திருப்பது அவரது சேவைக்கு கிடைத்த மரியாதை.

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த ரபி தேவேந்திரன் புது வேதம் படத்துக்கு இசை அமைத்திருக் கிறார். பாடல்கள் இனிமை சேர்க்கிறது. இமான் அண்ணாச்சி பெண்களுடன் குத்தாட்டம்.போட்டு பாடும் பாடலை இன்னமும் தெளிவாக  பதிவு செய்திருந்தால் ஹிட்டாகி இருக்கும்

கே வி ராஜன் ஒளிப்பதிவு குப்பை மேட்டு காட்சிகளையும் குமட்டல் வராமல் படமாக்கியிருப்பது பிளஸ்.

முத்தமிழறிஞர் கலைஞர் வசனத்தில் உருவான கண்ணம்மா படத்தை இயக்கிய ராசா விக்ரம் புதுவேதம் படத்தை  சமூக சிந்தனையோடு இயக்கி உள்ளார்.

புதுவேதம் – வெளிநாட்டு பட விழாக்களுக்கு சென்றால் பல விருதுகளை அள்ளி வரும்.

 

 

Related posts

அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனவால் மரணம்

Jai Chandran

ஷாருக்கான் இணையத்தில் மீண்டும் ட்ரெண்டிங்

Jai Chandran

பள்ளி மாணவ, மாணவி முன் “சாணி” படம் தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend