Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி ரோட் ( பட விமர்சனம்)

படம்: தி ரோட்

நடிப்பு: திரிஷா, ஷபீர், சந்தோஷ பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி

தயாரிப்பு: AAA சினிமாஸ்

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு: கே ஜி.வெங்கடேஷ்

இயக்கம்: அருண் வசீகரன்

பி ஆர் ஒ: டைமண்ட் பாபு

த்ரிஷா, கணவர், மகனுடன் வசிக் கிறார்.  மகன் பிறந்தநாளை வெளியூரில் கொண்டாட.காரில் செல்ல திட்டமிடுகின்றனர். கர்ப்ப மாக இருக்கும் திரிஷா கணவர், மகன் இருவரை மட்டும் அனுப்பி வைக்கிறார். நெடுஞ் சாலை விபத்தில் கணவர், மகன் இறக் கின்றனர். அதிர்ச்சி அடையும் திரிஷா விபத்து நடந்த இடத்தை சென்று பார்க்கிறார். அப்போது அங்கு ஏதோ விபரீதம். நடந்திருப் பதை உணர்கிறார். அதன்பிறகு அதுபற்றி துப்பறிய முயல பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வருகிறது.  ஒரு கட்டத்தில்  நகை, பணம் கொள்ளையடிக்கும் கும்பல் இந்த விபத்துக்களை நடத்துவது தெரிகிறது. அந்த கூட்டத்துடன் தனி ஆளாக திரிஷா போராடு கிறார். இதன்.முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

இது ஏதோ பேய் கதையோ என்று எண்ணும்படியாக இப்படத்தின்.போஸ்டர், டிரெய்லர் இருந்தாலும்  லாங் டிரைவ் அல்லது லாங் டூர் செல்பவர் களுக்கு எச்சரிக்கை தரும் கதையாக உருவாகி இருப்பது உண்மையிலேயே பாராட்டத் தக்கது.

தொடர்ச்சியாக ஒரு பகுதியில். விபத்து நடக்கிறதென்றால்  அதை அமானுஷ்யம் மீது பழிபோட்டு தப்பிப்பவர்கள் உண்டு ஆனால் அதன் பின்னணியில் என்ன சம்பவம்.நடக்கிறது என்பதை தோண்டித் துருவி விசாரிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு இருக்க வேண்டும்  என்பதை இப்படத்தின் பல  காட்சிகள் அழுத்தாக உணர்த்துகிறது.

த்ரிஷா தனி ஆளாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து அங்கு நடந்த விபரீதத்தை கொஞ்சம் கொஞ்ச மாக துப்பறிவது கதையை சூடுபிடிக்க வைக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத  பகுதிக்கு சென்று திருட்டு கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு அவர்களை எதிர்த்துப்போராடுவது தில்லுக்கு துட்டுதான்.

இன்னொரு புறம் கல்லூரி ஆசிரியர் மாணவியின் அபாண்ட குற்றச்சாட்டில்  வேலை இழந்து குடும்பத்தை இழந்து அனாதை யாகி கதறும் சென்டிமென்ட்தான்  பின்னர் வில்லத்தனமாகப் போகிறது என்பதை நீண்ட நேரம் யூகிக்க முடியாவிட்டாலும் திருமங்கலம் மைல் கல்லை காட்டும்போது விபத்து சம்பவத் துக்கும் இந்த காட்சிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

த்ரிஷா ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.  வில்லன் சபீர் பழிவாங்கல் வித்தியாசம். எம் எஸ் பாஸ்கர் இந்த வயதிலும் காட்டில் அலைந்து திரிந்து நடித்திருக்கிறார்.

விவேக்.பிரசன்னாவுக்கும் ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் தந்திருக்கி றார்கள். சந்தோஷ்.பிரதாபிற்கு  திரிஷாவை கட்டிப்பிடிக்க ஒரு சான்ஸ்.

AAA சினிமாஸ் தயாரித்திருக் கிறது. சாம் சி.எஸ். இசை, கே ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு படத்துக்கு தூண்.

இயக்குனர் அருண் வசீகரன் சொல்ல வேண்டிய விஷயத்தை த்ரில்லாக சொல்லி ஒரு பயமுறுத் தலை..  இல்லை இல்லை  ஒரு எச்சரிக்கை பலகையை ஒவ்வொரு கார் ட்ரிப்  செல்பவர்களுக்கு முன்பும்  தொங்க விட்டிருக்கிறார்.

தி ரோட் – காரில் செல்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.

 

 

 

 

 

 

Related posts

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் ‘கருப்பு’

Jai Chandran

விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

Jai Chandran

Vijay Milton’s “Gods and Soldiers” Officially Wrapped..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend