படம்: மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஸ் ஷெட்டி
நடிப்பு: அனுஷ்கா, நவீன்,
தயாரிப்பு: வம்சி, புரமோத்
இசை: ரதன்
ஒளிப்பதிவு: நிரவ் ஷா
இயக்கம்: மகேஷ் பாபு .கே
பி ஆர் ஒ: யுவராஜ்
லண்டனில் ஸ்டார் ஓட்டலில் பிரபல ஷெப்பாக பணிபுரிகிறார் மிஸ் ஷெட்டி ( அனுஷ்கா). தாயுடன் வசிக்கும் ஷெட்டி தாயின் விருப்பப்படி இந்தியா திரும்பு கிறார். திருமணம் செய்து கொள்ளும்படி மகளிடம். தாயார் எவ்வளவோ கூறியும் மறுத்துவிடு கிறார். திடீரென்று தாயார் இறந்துவிட தனியாக இருப்பதாக எண்ணும் ஷெட்டி திருமணம் செய்யாமல் தனக்கென ஒரு குழந்தை பெற எண்ணுகிறார். இதுபற்றி செயற்கை கருத்தரிப்பு மையத்தில் டாக்டரிடம் ஆலோசிக்க அவர் தனக்கு பிடித்த ஒரு இளைஞனை அழைத்து வருகி றேன் அவன் மூலமாக விந்தணு பெற்று கருவுற விரும்புவதாக சொல்லி இளைஞனை தேடுகிறார். மேடைகளில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்யும் சித்து (நவீன்)வை தேர்வு செய்யும் அவர் முதலில் அவனுக்கு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்ய வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பழகுகிறார். சித்துவோ ஷெட்டி மீது காதல்.கொள்கிறார். தன் காதலை அவரிடம் வெளிப்படுத்த எண்ணும் போது அதை ஏற்க மறுத்து நிஜத்தை கூறுகிறாள் ஷெட்டி . அதை கேட்டு அதிர்ச்சி அடையும் சித்து அவளை விட்டு விலகுகிறார். அதுபற்றி ஷெட்டி கவலைப்படாமல் வேறு இளை ஞனை தேர்வு செய்கிறார். அதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடையும் சித்து ஷெட்டிக்கு விந்தணு தருவதாக சம்மதிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை சுவாரஸ்யமாகவும் காதல் உணர்வுடனும் கிளைமாக்ஸ் சொல்கிறது.
இது அடெல்ட் கன்டென்ட் கதை என்றாலும் எவ்வளவு நாகரீகமாக சொல்ல முடியுமோ அவ்வளவு நாகரீகமாக ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.
மிஸ் ஷெட்டியாக நடித்திருக்கும் அனுஷ்கா ரொம்பவே பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தன் தாய் இறந்தபிறகு தனிமையை உணரும் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற எண்ணுவதாக தோழியிடம் சொல்வதும் பின்னர் அதுகுறித்து செயற்கை கருத்தரிப்பு மையத். துக்கு சென்று டாக்டரிடம் ஆலோசிப்பது வெறும் காட்சி களாக மட்டுமல்லாமல் செயற்கை முறையில் குழந்தை பெற எண்ணுபவர்களுக்கு பொதுவான ஒரு ஆலோசனையாகவும் இருக்கிறது.
தனக்கு விந்தணு தருவதற்காக சரியான நபரை தேர்வு செய்ய அனுஷ்கா ஆண்களை அழைத்து இன்டர்வியூ நடத்துவதும்.ஒரு கட்டத்தில் ஸ்டேண்ட்.அப் காமெடியன் நவீனை பார்த்ததும் அவர்தான் சரியான நபர் என முடிவு செய்து அவரது அனுமதி பெறுவதற்காக நவீனையே அனுஷ்கா சுற்றி சுற்றி வருவதும். அவரது பேச்சு, பழகும் விதத்தை பார்த்து அனுஷ்கா மீது நவீன் காதல். கொள்வது எதார்த்தம்.
ஒரு கட்டத்தில் நவீன் காதலை சொல்ல முன்வர அதை அனுஷ்கா ஏற்காமல் விந்தணு உண்மைபற்றி சொல்லி அதிர்ச்சி தருவது டுவிஸ்ட். அனுஷ்காவுக்கு சம்மதம் சொல்லும் நவீன் அவரது அலுவலகத்துக்கு சென்று படுக்கைக்கு தயார் என்பதுபோல் பேசி வழிவது அரங்கை சிரிப்பு குலுங்களில் ஆழ்த்துகிறது.
வம்சி, புரமோத் தயாரித்திருக்கி றார்கள்.
ரதன் இசை காட்சிகளுக்கு மெருகு
நிரவ் ஷா லண்டன் அழகை கண்களில் நிரப்புகிறது
மகேஷ் பாபு .கே கதையை எவ்வளவு நேர்த்தியாக சொல்ல.முடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கி றார்.
மிஸ் ஷெட்டி , மிஸ்டர் பொலி ஷெட்டி – தனிமைக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் போராட்டம்.

