Trending Cinemas Now
Uncategorized

ரெட் சேண்டல்.வுட் (பட விமர்சனம்)

படம்: ரெட் சேண்டல்.வுட்

நடிப்பு:  வெற்றி, மயூரிகா,          கே.ஜி எப் ராம், பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன்,.மாரிமுத்து, விஷ்வந்த், கபாலி வினோத சாகர், மெட்ராஸ். வினோத், லட்சுமி

தயாரிப்பு: ஜே பார்த்தசாரதி

இசை: சாம் சி எஸ்.

ஒளிப்பதிவு,,: சுரேஷ் பாலா

இயக்கம் : குரு ராமானுஜம்

பி ஆர் ஒ:  மணவை புவண்

நண்பன் கருணாவை ( விஸ்வந்த்) தேடி ஆந்திரா செல்கிறான் பிரபா கரன் (வெற்றி). செம்மரம் வெட்டு வதற்காக சென்ற கருணாவை வெவ்வேறு இடங்களில் தேடும் போது செம்மர கடத்தல் வழக்கில்.பிரபாவை போலீஸ் பிடிக்கிறது. பிரபாவையும் உடன் கைதானவர்களையும் போலீஸ் என்கவுன்டர் செய்ய முடிவு செய்து காட்டுக்குள் அனுப்பி வைக்கிறது. இந்த எங்கவுன்டருக்கு பின்னால்  செம்மர கடத்தல் தலைவன் அரிமாறன் (ராம்)  இருப்பது தெரிகிறது. போலீசிடமிருந்து, கடத்தல் கூட்டத்திடமிருந்தும்  தப்பி  நண்பn கருணாவை வெற்றி எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கிளைமாக்ஸ்.

தேர்வு செய்த படங்களில் மட்டும்.நடிக்கும் வெற்றி இப்படத்திலும் அவரது தேர்வு வீண்போகவில்லை. தன்னை ஹீரோவாக நிலைநிறுத்தும் பில்டப் காட்சிகள் எதிலும் ஆர்வம் காட்டாமல்  கதைபோன போக்கில் தன் கதாபாத்திரத்தை  பயணிக்க விட்டிருப்பது பிளஸ்.

சண்டை காட்சிகளிலும் வெற்றி சோடைபோகவில்லை.

குடும்ப  வறுமைக்காக செம்மரம் வெட்ட  வந்து போலீசில் சிக்கி அடிவாங்கும் எம் எஸ் பாஸ்கர் உருக்கம் காட்டுகிறார்.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சட்டnவிரோத வேலையான செம்மர கடத்தல்காரர்களுக்காக  அப்பாவி தமிழர்கள்  மரம் வெட்டிச் ஆந்திரா சென்று.போலீஸ் என்கவுண்டரில் உயிரிழக்கும் பரிதாபங்கள்  ஏற்கனவே நிஜத்தில் நடந்திருக்கிறது அதை த்ளிவாக சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கும் கதையாக படைத்திருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்.

ஜே பார்த்தசாரதி அர்த்தமுள்ள படத்தில்.முதலீடு செய்திருக் கிறார்.

சாம் சி.எஸ்.  இசையும் காட்சிகளுக்கு வேகம். கூட்டியிருக்கிறது. காட்டுப் பகுதிக்குள் கேமிராவை திறமையாக கையாண்டு காட்சி களை தெளிவாகவும் சரியான  ஆக்ஷ்ன் மூட் கிரியேட் செய்யும் கலர் டோனிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் பாலா.

 

ரெட் சேண்டல் வுட் – செம்மரம் வெட்டச் சென்று பலியாகும்   தமிழர்கள் கதை.

 

Related posts

JaiBhim had won Best Film, Best Actor at Noida Festival

Jai Chandran

இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் புதிய இசை ஆல்பம்!

Jai Chandran

பன்னாட்டு திரை – பண்பாடு ஆய்வகம் முதல் பட்டயமளிப்பு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend