Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சித்தரிக்கப்பட்டவை (பட விமர்சனம்)

படம் : சித்தரிக்கப்பட்டவை

நடிப்பு: ராம்குமார், பிரீத்தி, கணேஷ்குமார், குமரேஷ் பாபு, துர்கா, ரவி, மணி, மதன், ராஜஶ்ரீ

தயாரிப்பு: ராம்குமார்

இசை: தியாகு

ஒளிப்பதிவு: குருமூர்த்தி, சுதன்

இயக்கம்: ராம்குமார்

பி ஆர் ஒ: கிளாமர் சத்யா

சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசையில் குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார் ராம்குமார். இவரது முறைப் பெண் ப்ரீத்தி நோட்டு , புத்தகம் டெலிவரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் வேலைக்கு  சேரும் இளைஞன்  நோட்டு புத்தகம் டெலிவரி செய்யும்போது சிலர் தரும் போதை மருந்தையும்  டெலிவரி செய்கிறார். சந்தேகம் அடைந்த பிரீத்தி இதுகுறித்து ராம்குமாரிடம்  சொல்ல அவர் இளைஞனை பின்தொடர்ந்து சென்று விஷயத்தை கண்டுபிடிக் கிறார். இது வில்லங்கமாகிறது. போதை மருந்து விற்கும் கூட்டம் ராம்குமாரை என்ன செய்கிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதை படம் விளக்குகிறது.

படம் எடுத்தால்  அதில் ஒரு மெசேஜ் சொல்ல  வேண்டும் என்ற ஆர்வம் இயக்குனர், ஹீரோ ராம்குமாருக்கு இருப்பதை உணர முடிகிறது. ஆனால் அதை கோர்வையாக, தெளிவாக எப்படி சொல்ல வேண்டும் என்ற  பார்வைதான்  இல்லை.

ஹீரோவாக நடிப்பதற்கு  ராம்குமார் ஆசைபட்டிருக்கிறார் அதற்காக அவரே படத்தையும், கதையையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். ஆர்வம்  இருந்தால் .மட்டும்போதாது அதற்கு வலுவான உதவி இயக்குனர்கள், தொழில் நுட்ப கூட்டணி வேண்டும் என்பதை மறந்து  விட்டாரோ என்று தோன்றுகிறது.

முறைப் பெண் பிரீத்தி எதார்த்த மாக நடித்திருக்கிறார். முகத்தில் இருக்கும் குறைபாட்டை எண்ணி முடங்கி விடாமல் தனி தொழில் செய்து தன்னை  சொந்த காலில் நிற்கும் தகுதி படைத்தவாரக் மாற்றிக்கொள்வது பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும்.

கழுத்தில் கத்தி குத்துப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் பிரீத்தி அந்த விஷயத்தை   தன்னை காண வரும் ராம்குமாரிடம்  சொல்லாமல் மறைப்பது  அதே  அறையில்  மறைந்திருக்கும் கொலைகாரர்கள் பற்றியும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏனென்று புரியவில்லை. இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காததுபோல்.கையில் கத்தியை வைத்துக் கொண்டு பிரீத்தியிடம் ராம்குமார் சகஜமாக  பேசுவதெல்லாம் செயற்கை தனமாக உள்ளது.

யாரோ செய்த கொலைப்பழி ராம்குமார் மீது விழுவதும் சட்டம் அவரை தண்டிப்பதும்அதுகூட தெரியாத.பைத்தியமாக அவர் மாறும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் ஓரளவுக்கு. ஓ கே.

ராம்குமார் படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்திருக் கிறார். உழைத்திருக்கிறார் ஆனால் எல்லாம் வீணாகியிருக் கிறது.  போதை மருந்து என்னென்ன தீமைகளை செய்யும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தி யிருக்கிறார். அதை  தெளிவான திரைக்கதையுடன்  கோர்வையாக கூறியிருந்தால் எடுபட்டிருக்கும்.

நியூமராலஜி பார்த்து ராம்குமார் என்ற பெயரை  றாம்குமார் என்று  ரா வை றா என்று தவறாக மாற்றிப்போடுவது மட்டுமே பட. வெற்றிக்கு கை கொடுத்துவிடாது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

சித்தரிக்கப்பட்டவை- செயற்கை.

 

 

Related posts

விஜய் சேதுபதியின் ‘ஏஸ் ( ACE ) ‘பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Jai Chandran

பிரபாஸுக்கு பதிலளித்த இயக்குநர் ராஜமௌலி

Jai Chandran

Shankar, Ramcharan, DilRaju Mega Project will come very soon !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend