Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கான் இணையத்தில் மீண்டும் ட்ரெண்டிங்

பாலிவுட் பாட்ஷா’ ஷாருக் கான் இந்தி திரையுலகில் அறிமுக மாகி 31 ஆண்டுகள் நிறைவடைந் திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், ‘ஜவான்’ பட அப்டேட் குறித்தும் சுவராசி யமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஷாருக்கான் பரபரப் பான… பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந் தாலும் மாதந் தோறும் #AskSRK என்ற பிரத்யேக மான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர் களிடம் உரையாடுவது வழக்கம். இதன்போது அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள், கேள்வி களுக்கு அளிக்கும் பதில்கள் எப்போதும் அனைவரது கவனத்தை யும் கவரும். இந்நிலை யில் அவர் திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டு கள் நிறைவடைவதை முன்னிட்டு ரசிகர்களுட னான இணையதள உரையாடல் சுவாரசிய மாகவும், உணர்வுபூர்வ மாகவும் நடைபெற்றது. வழக்கம்போல் இந்த முறையும் அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் அளித்த பதில்கள் அவரு டைய மேதமை தன்மை யை வெளிப்படுத்தி வியப்படைய வைத்தது. மேலும் ‘ஜவான்’ படத்தின் சில ரகசியங்க ளை குறிப் பிட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக் கிறார். திரையுலக பயணம் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

31வருட திரையுலக பயணம் குறித்து ஷாருக் கான் பேசுகையில், ” நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விசயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகி றேன். சில தருணங்களில் அதனை இயக்குநர் களுடன் பகிர்ந்து கொண் டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள் ளேயே வைத்துக் கொண்டி ருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக் கலாம்.” என பதிலளித்தார்.

உரையாடலில் ஒரு ரசிகர், ”கருவுற்றிருக்கும் இரட்டை குழந்தைகளுக்கு நானும், என் மனைவியும் இணைந்து அவர்களுக்கு ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ என பெயரிட திட்டமிட்டிருக் கிறோம்” என தெரிவித் தார்.‌ இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ”வாழ்த் துக்கள். ஆனால் அவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.

மேலும் ஒரு ரசிகர், ”ஜவான் படத்தில் என்னு டைய நண்பருக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்,” கிடைக்காது என்பதை உங்கள் அன்பு நண்பரிடம் நீங்கள் விளக்க வேண்டும்” என்றார்.

ஜவானின் மகிழ்ச்சியான விசயம் என்ன? என குறித்து ரசிகர் கேட்டதற்கு, ” இல்லை மகனே..! நான் என் இளமை காலத்தில் உற்சாகத்துடன் திரையரங் கத்திற்கு சென்று படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக் கிறேன். அது போன்ற ஒரு சந்தோஷத்தை ஜவான் உங்களுக்கு அளிக்கும்” என்றார்.

‘ஜவான்’ பட டீசர் குறித்து கேட்டபோது, ” எல்லாம் தயாராக இருக்கிறது. கவலை வேண்டாம். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத் துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. ” என்றார்.

புதிதாக பட்டம் பெற்ற பட்டதாரிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக், ” நல்வாழ்த் துக்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை சில சமயங் களில் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

Related posts

ஆம் ஆத்மி கட்சிக்கு கமல் கட்சி வாழ்த்து

Jai Chandran

அஞ்சலி நடிப்பில், “ஜான்ஸி இணைய தொடர்

Jai Chandran

விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend