Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பொம்மை (பட விமர்சனம்)

படம்: பொம்மை

நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர். சாந்தினி

தயாரிப்பு: ஏஞ்சல் ஸ்டுடியோஸ்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ரிச்செட் எம் நாதன்

இயக்கம்: ராதா மோகன்

பி ஆர் ஓ : சதீஷ் ( TEAM Aim)

கவிதைத்தனமாக காதலை சொல்வதில் கில்லாடி இயக்குனர் ராதா மோகன். அதையேதான் பொம்மை படத்திலும் செய்திருக்கிறார்.
இம்முறை ஹீரோ ஹீரோயின்களுடன் ஜவுளி கடை பொம்மை ஒன்றும் சேர்ந்துக் கொண்டிருக்கிறது.

சிறுவயதில் தன் மீது பாசம் காட்டி அன்புடன் பழகிய தோழியை திருவிழாவில் யாரோ கடத்தி சென்றுவிடுவதால் மனதளவில் பாதிக்கப் படும் ராஜ குமாரன் (எஸ். ஜே. சூர்யா) வளர்ந்த பின் டாக்டரிடம் சிகிச்சை பெற்று மனஉளைச் சலுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டு ஜவுளி கடைகளுக்கு செய்யும் ஆளுயர பொம்மைகள் தயாரிக்கும் கம்பெனியில் பெண் பொம்மைக்கு வர்ணம் தீட்டி அழகு சேர்க்கும் பணி செய்கிறார். ஒரு சமயம்

கன்னத்தின் கீழ் பகுதியில் மச்சம்போல் கரை படிந்திருக்கும் பெண் பொம்மையை பார்த்து வியக்கிறார் சூர்யா. சிறுவயதில் கடத்தப்பட்ட தன் மனதுக்கு பிடித்தமான நந்தினி (பிரியா பவானி) தான் திரும்ப வந்து விட்டார் என்று மகிழ்ந்து அந்த பொம்மையை விற்பனைக்கு அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறார். சொந்த வேலைகாரணமாக ஊருக்கு சென்று திரும்புகிறார் சூர்யா . அதற்குள் குறிப்பிட்ட பொம்மையை சூப்ரவைசர் விற்றுவிடுகிறார். கோபத்தில் சுப்ரவைசரை அடித்து சாகடிக்கிறார் சூர்யா. விஷயம் போலீஸ் நிலையம் செல்கிறது
இதற்கிடையில் சூர்யா  அந்த பொம்மையை அடையாளம் கண்டு அது  இருக்கும் கடையை கண்டு பிடித்து  அங்கேயே வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில்  அந்த பொம்மையுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற சூர்யா கடைசியில் எடுத்த முடிவு என்ன என்பதை விளக்குகிறது கிளைமாக்ஸ்.

நம்ப முடியாத காதல் கதை என்றாலும் சில நம்ப முடியாத வினோதம் போல் இதையும் பார்க்க வேண்டி உள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் ராதா மோகன் மீதுள்ள நம்பிக்கைதான்.

வித்தியாசமான பாத்திரம் என்றால் எஸ். ஜி .சூர்யா வெளுத்து கட்டுவார் அப்படித்தான் இதிலும் நடிப்பில் வெளுத்து கட்டுகிறார்.

கன்னத்தின் கீழ் தாடையில் பொம்மைக்கு மச்சம் இருக்கும் அடை யாளத்தை ஜவுளி கடை  பொம்மையில் பார்த்த வுடன் அது எஸ். ஜே காதலி பிரியா பவானி போல் தெரிவதும் அதனுடன் தனிமையில் மனம் விட்டு பேசுதும் , காதல் பரிமாற்றம் செய்வது, திருமணம் செய்து கொள்வது வரை முடிவு செய்வதெல்லாம் ஏதோ கனவில் நடப்பது போல் ஃபீல் ஆகிறது.

பொம்மைக்கு டிரஸ் மாற்றும் சாக்கில் தன்னை மேனேஜர் வெறுப்பேற்று வதை பொறுத்துக் கொள்ளும் சூர்யா ஒரு கட்டத்தில் அவரை அடித்து தெருவில் ஓட விடுவது பரபரப்பு.

உயரமான இடம், நிலா , நட்சத்திரங்கள் சூழ்ந்த இடத்தில் முத்தம் கொடுத்து திருமணம் செய்துகொள்ள சூர்யா வும், பிரியாவும் முடிவு செய்யும்போதே கிளை மாக்ஸ் எப்படி அமையப் போகுது என்பதை யூகிக்க முடிகிறது. அதே சமயம் கற்பனை செய்த அளவுக்கு இல்லாமல் லோகேஷன் தேர்வு செய் வதில் இயக்குனர் கோட்டை விட்டிருக்கிறார்.

பிரியா பவானி ஜவுளி கடை பொம்மைபோல் அச்சு அசல் ஆடாமல் அசையாமல் நின்று இது பொம்மையா, நிஜமா என்று என்ன வைக்கிறார். கிளைமாக்சில் வரும் அந்த உதட்டு முத்தம் காட்சியில் ஜீவனே இல்லை. இக்ககாட்சியில் எஸ்.ஜே.சூர்யாவும் பிரியாவும் மனம் ஒன்றாமல் நடித்தது அப்பட்டமாக தெரிகிறது.

சாந்தினி உலவும் பொம்மையாக வந்து செல்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை மெல்லிய ஸ்வரங்களை மீட்டுகிறது.

ரிச்செட் எம் நாதன் கலர்ஃபுல் ஒளிப்பதிவு கவனத்தை கவர்கிறது

ராதா மோகன் சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லியிருக்கிறார் ஆனால் வழக்கமான அவரது அழகியல் மிஸ்ஸிங்

பொம்மை – காதல் இருக்கிறது, ஜீவன் இல்லை.

Related posts

கொரோனாவில் சிக்கிய உலக அழகி ஐஸ்வர்யாராய் மற்றும் குடும்பம்..

Jai Chandran

Mugen as “VELAN”

Jai Chandran

Prime Video Unveils Trailer of Amazon Original Series Bambai Meri Jaan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend