Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் (பட விமர்சனம்)

படம்: கழுவேத்தி மூர்க்கன்

நடிப்பு: அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சாயா தேவி, முனிஸ்காந்த், சரத் லோகித் சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன்

தயாரிப்பு: அம்பேத் குமார்

இசை:டி.இமான்

ஒளிப்பதிவு: ஶ்ரீதர்

இயக்கம்: சை. கவுதமராஜ்

பி ஆர் ஓ: சதீஷ் ( AIM), சுரேஷ் சந்திரா

 

தெக்குபட்டி, செட்டி குளத்தில் மேல தெரு கீழதெரு பகுதியில் இரு வேறு சமூகத்தினர் வாழ்கின்றனர். சாதி பெயரை காட்டி பெரியவர்கள் இரு சமூகத்துக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்தி வைத்தி ருக்கும் நிலையில் மேல வீதி  மூர்க்கனை (அருள்நிதி) சிறுவயதில் மாடு முட்டி தூக்கி வீச அவனை கீழ வீதி  பூமிநாதன் (சந்தோஷ் பிரதாப்) காப்பாற்று கிறான். இதில் இருவரும் நண்பர் களாகின்றனர். பூமி மீது யாராவது கைவைத்தால் அவர்கள் கையை உடைக்கும் கோபத்துடன் தாக்கு கிறான் மூர்க்கன்.  அரசியல் வாதிகள் குறுக்கிட ஒருகட்டத்தில் பூமி கொல்லப்படுகிறான். அவனை மூர்க்கன் கொன்றதாக தகவல் பரவுகிறது. போலீஸ் மூர்க்கணை தேடி வலை வீசுகிறது. முள்ளுகாட்டில் பதுங்கும் மூர்க்கன் தன் நண்பனை கொன்றவர்களை பற்றி உண்மை அறிந்து பழிக்கு பழி வாங்குகிறான்.

நிறைய சாதி கதைகள், நண்பனுக் காக பழிவாங்கும் கதைகள் வந்திருக்கின்றன அந்த பாணி யிலான கதை என்றாலும் இந்த மூர்க்கன் சாதியை கருவறுததிருக் கிறான்.

மூர்க்கனாக அருள்நிதி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். அவரது நண்பராக வரும் சந்தோஷ் பிரதாப் சமூக சேவகராக ஈடுபாடு காட்டி நடித்துள்ளார்.

நண்பன் பிரதாப் மீது கைவைத்து விட்டான் என்று தெரிந்ததும் முகத்தில் குத்துவிட்டு
அருள்நிதி தனது அதிரடி கணக்கை தொடங்குகிறார். அதன்பிறகு அதிர்வேட்டாய் ஆக்ஷன் காட்சிகளில் அடைமழை பொழிகிறார்.

நண்பனை வெட்டி விட்டோமா என்ற கனத்த இதயத்துடன் தலை மறைவாக முள்ளுக் காட்டில் சுற்றும் அருள்நிதி பின்னர் உண்மை தெரிந்ததும் அதற்கு பழிவாங்க அரசியல் கட்சி மாவட்ட தலைவரின் காரை நடுரோட்டில் மடக்கி ஒற்றை ஆளாக அவரது அடியாட்களை துவம்சம் செய்து காரையே துக்கிப் போட்டு கவிழ்ப்பது ஆவேசத்தின் உச்சம்.

சந்தோஷின் அம்மாவை சந்தித்து “நான்தான் பூமியை கொன்னுட்டே ன்னு  எல்லாரும் சொல்றாங்க நீயும் ஒருமுறை என்னய கொலகாரன்னு சொல்லு”  என்று சொல்லி அருள்நிதி கண்கலங் குவது  மனதை நெகிழ வைக் கிறது.

ஆங்காங்கே கொஞ்சம் ரிலாக் ஸாக துஷாரவுடன் காதலும் செய்து மனதில் தென்றலடிக்க வைக்கிறார்.

அருள்நிதியை
கண்ணோடு கண் பார்க்கச் சொல்லி துஷாரா  காதல் சரசமாடி கவர்கிறார். குடிசை வீட்டு பெண் ணாக வரும் சாயாதேவி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

அரசியல்வாதி,இன்ஸ்பெக்டர், டி ஜி பி பாத்திரங்கள் கச்சிதமான நடிப்பால் படத்தின் வேகத்தைக் கூட்டுகின்றனர்.
அருள்நிதி தந்தையாக யார் கண்ணன் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தலைகாட்டி சைலன்ட் வில்லனாக கவர்கிறார்.

சாதி பெயரால் மக்களை பிரிக்கும் தப்பு செய்பவர்களுக்கு அந்த காலத்தில் கழு மரத்தில் ஏற்றி மரண தண்டனை கொடுத்த பயங்கரத்தை சாதியால் பாகுபாடு காட்டி அரசியல் பிழைப்பு நடத்துபவருக்கு கழுவேற்றி தண்டிக்கும் இயக்குனர் சை.கவுதமராஜ் துணிச்சலான கிளைமாக்சை அமைத்து அதிரவிட்டிருக்கிறார்.
அதே சமயம் மீண்டும் கிளை மாக்சில் ஒரு கறையையும் சாதி வன்மம் மீது பூசியிருப்பதுதான் மனதை உறுத்துகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு டி.இமான் இசையில் பாடல்கள் மயிலிறகாகவும் பின்னணி இசையில் இடி முழக்கமாகவும் தெறிக்க விட்டிருக்கிறார்.

அம்பேத்கார் தயாரிப்பு நல் வயலுக்கான நீர் இரைப்பு.

ஶ்ரீதர் ஒளிப்பதிவு காட்சிக்குள் ளேயே கண்களை பதியச் செய்கிறது.

கழுவேத்தி மூர்க்கன் – சாதி வன்முறைக்கு தர வேண்டிய தண்டனை.

Related posts

ROCKSTAR DSP joining hands with ZeeTamil 4

Jai Chandran

ஆலன் (பட விமர்சனம்)

Jai Chandran

விஷால் நடிக்கும் 31வது படத்தை இயக்கும் புது இயக்குனர் சரவணன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend