Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் (பட விமர்சனம்)

படம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்

நடிப்பு: விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், தபய மதுரா, கனிகா, மகிழ் திருமேனி, கருபழனியப்பன், மோகன்ராஜா, விவேக் ரித்விகா, ஶ்ரீ ரஞ்சன், ராகு ஆதித்யா, இமான் அண்ணாச்சி.

தயாரிப்பு: எஸ். இசக்கிதுரை

இசை:நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: வெற்றி வேல் மகேந்திரன்

இயக்கம்: வெங்கட கிருஷ்ண ரோஹந்த்

பிஆர் ஒ: நிகில் முருகன்

இலங்கை இறுதிப் போரில் ராக்கெட் தாக்குதலில் அப்பா. அம்மாவை இழந்த சிறுவன் புனிதனை பாதிரியார் ஒருவர் மீட்டு அவனை லண்டனுக்கு அனுப்புகிறார் வழியிலேயே இலங்கை இராணுவம் சிறுவனை யும் மற்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பின்னர் தமிழகத்தில் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் முகாமில் சேர வந்திருப்ப தாக கிருபாநதி (விஜய் சேதுபதி) என்ற பெயருடன் கடிதம் தருகி றான். அதை சோதனையிடும் போது அடையாளங்கள் ஒத்துப் போகவில்லை. இந்நிலையில் இசைக் கலைஞனான கிருபாநதி லண்டன் ராயல் மியூசிக் அகாடமி நடத்தும்.இசை போட்டி யில் பங்கேற்க விண்ணப்பிக்கிறான். அதில் அவனால் பங்கேற்க முடிந்ததா, இதற்கிடையில் தன்னை சுட்டுக்கொல்ல துரத்தும் போலீஸ் அதிகாரியிட மிருந்து கிருபாவால் உயிர் பிழைக்க முடிந் ததா என்ற கேள்விகளுக்கு நெகிழ வைக்கும் விளக்கத்துடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

வருடங்கள் ஓடினாலும் மனதை விட்டு ஓடாத ஈழ தமிழர்களின் படுகொலைகள் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் ஆறாத வடுவாக பதிந்திருக்கிறது அந்த வடுவை மீண்டுமொருமுறை கீறிப்பார்த்திருக்கிறது. இப்படம்.

இப்படியொரு படத்தில் இத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் விஜய சேதுபதியை தவிர யாருக்கும் நடிக்க துணைச்சல் இருந்திருக் காது. எத்தனை ஹீரோக்கள் நடிக்க மறுத்தார்கள் என்பதை இயக்குனர் வாய் திறந்து சொன்னால்தான் தெரியவரும்.

ஈழபோரில் அனாதையாக்கப்படும் விஜய் சேதுபதி போகிற இடத்தி லெல்லாம் போலீசில் சிக்கிக் கொள்வதும் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்படுவதும் ஒரு அகதிபடும் துயரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

கதைக்களம் இறுதிப் போரின் நிகழ்வுகளை லேசாக தொட்டுச் சென்றிருக்கிறது. அதன் அழிவுக்குள் கதை சென்றிருந்தால் இந்நேரம் அப்படம் திரையை பார்த்திருக்காது என்றே தோன்று கிறது .

கிளைமாக்சில், தான் இரண்டு நாட்டிலும் தவறான தகவல் கொடுத்துத்தான் இசை போட்டியில் கலந்து கொள்ள வந்தேன் என்று விஜயசேதுபதி உண்மைகளை உடைத்துப் பேசும்போது உணர்ச்சி பிழம்பாகி யிருக்கிரார். அவரது பேச்சிலும், முகபாவத்திலும் ஆயிரம் ஏக்கங்கள் பிரதிபலிக்கின்றன. அகதிகளுக்கு நாட்டில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை அரசுகளின் காது களுக்கு விழுமாறு உரக்க கூறியிருப்பது பலரது சிந்தனைக்குள் பட்டிமன்றங்களை கிளப்பி விடுகிறது.

விஜய் சேதுபதிக்கு சரியான நேரத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக வருகிறார் கரு.பழனியப்பன்.

துப்பாக்கியை கையிலும் கோபத்தை முகத்திலும் ஏந்திக் கொண்டு விஜய் சேதுபதியை என்கவுன்ட்டர் செய்ய துரத்தும் மகிழ் திருமேனி, தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்திருக் கிறார்.

கனிகா, மோகன்ராஜா, விவேக் ரித்விகா, ஶ்ரீ ரஞ்சன், ராகு ஆதித்யா, இமான் அண்ணாச்சி.
இயல்பாக வந்து செல்கின்றனர். மேகா ஆகாஷ் எப்போதும் ஒரு முறைப்போடு இருப்பது தான் ஏனென்று விளங்க வில்லை.

எஸ். இசக்கிதுரை தயாரித்தி ருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இசை காட்சியோடு ஒன்றியிருக்கிறது.

வெற்றி வேல் மகேந்திரன் ஒளிப்பதில் அந்த பிரமாண்ட புத்தர் சிலை தலை சிதைந்து அமர்ந்திருக்கும் காட்சியை ஈழதமிழர்கள் வாழ்வு எப்படி சிதைந்து போனது என்பதை திகிலுடன் மனதில் பதிய வைக் கிறது.

மறைந்த எஸ் .பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அவரது கருத்தியலை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த்தின் இயக்கம் ஜனநா தனின் ஆன்மாவுக்கு சாந்தி தரும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றைக்கு நிஜமாகுமோ என்ற ஏங்க வைக்கிறது.

Related posts

10000 sq feet poster by Zee5 for Ajith Kumar’s latest Valimai

Jai Chandran

வா வாத்தியார் (பட விமர்சனம்)

Jai Chandran

எம்.எஸ்.தோனி நடித்த கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ வெளியிட்ட ரஜினி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend