Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 (பட விமர்சனம்)

படம்: பொன்னியின் செல்வன்- 2

நடிப்பு: விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், கிஷோர், விக்ரம்பிரபு, நாசர், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா, ஜெயசித்ரா,

தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ரவிவர்மன்

இயக்கம்: மணிரத்னம்

பி ஆர் ஓ: ஜான்சன்

 

இலங்கையிலிருந்து தஞ்சை திரும்பும் அருண்மொழிவர்மன் ( ஜெயம் ரவி) கடலில் மூழ்க அவரை ஊமை ராணி (ஐஸ்வர்யாராய்) காப்பாற்றுகிறார். 2ம் பாகத்தின் கதை இளவயது ஆதித்ய கரிகாலன் ( விக்ரம்), நந்தினி (ஐஸ்வர்யாராய்) காதலில் தொடங்குகிறது. அரண்மனைக்கு நந்தினியை ஆதித்ய கரிகாலன் அழைத்துவர அரச குடும்பம் அனாதையான நந்தினியை நாட்டி லிருந்து விரட்டியடிக்கிறது. காதல் தோல்வி அடைந்த பின்னர் ஆதித்ய கரிகாலன் போர் செய்ய சென்றுவிடுகிறான். அதித்ய கரிகாலன், அருண்மொழிவர்மன், சுந்தரசோழன் ( பிரகாஷ்ராஜ்) மூவரையும் கொன்று சோழ சாம்ராஜ்யத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க பாண்டியர்களுடன் சேர்ந்து நந்தினி சூழ்ச்சி செய்கி றாள். இதற்கிடையில் சோழர் களை காக்க வந்தியத்தேவன் (கார்த்தி) பெருமுயற்சி தோல்வி அடைகிறது. ஆதித்ய கரிகாலன் நந்தினி சதியால் கொலை செய்யப்படுகிறான். அதன்பிறகு நடப்பது என்ன? சோழர்கள் மீது படை எடுக்கும் எதிரி நாட்டு அரசன் போரில் என்ன நடக்கிறது. பட்டத்து அரசனாக முடிசூடுவது யார், நந்தினி கதி என்ன, ஊமைராணி யார், நந்தினியின் தாய், தந்தை யார் என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

சோழர்கள் வரலாறு இப்படியொரு திரைப் படமாகும் என்று எண்ணிப் பார்க்காமல் தன் வாழ்நாளின் பொக்கிஷமாக பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படைத்த அமரர் கல்கியை முதலில் நினைவு கூற வேண்டும்.
சரியான காலகட்டத்தில் சரியான கலைஞர்களை உள்ளட்க்கிக் கொண்டு தற்போது மணிரத்னம், லைகா சுபாஷ்கரன் ஏ.ஆர்.ரஹ் மான் என்ற கூட்டணியுடன் முதல் மற்றும் இரண்டாம் பாகமாக பொன்னியின் செல்வன் உருவாகி யிருக்கிறது.

ஆதித்ய கரிகாலன் வேட மேற்றி ருக்கும் விக்ரம் கரிகாலனாகவே உருமாறியிருக்கிறார். நடை, தோற்றம், கோபம் எல்லாம் குளு குளு அரங்கையே அனாலாக் குகிறது.

பெருபழவேட்டையர் சரத்குமார் கோட்டைக்கு வரும் ஆதித்ய கரிகாலன் விக்ரம் குதிரை மீது அமர்ந்தபடி சிற்றரசர்கள் சதி ஆலோசனை பற்றி கேட்கும் கேள்விகள்,  கோட்டை கதவுகள் மூடப்பட்டு விக்ரம் தனிமைப் படுத்தப்பட்டதும் நந்தினி ஐஸ்வர்யாராயை சந்திக்க சென்று கொலை சதி வலைக்குள் விக்ரம் சிக்குவதும் பரபரப்பு.

வந்தியத்தேவனாக முதல்பாகத் தில் கலகலப்பாக வலம் வந்த கார்த்தி இரண்டாம் பாகத்தில் உணர்ச்சி கொட்டும் நடிப்பில் லயிக்க வைக்கிறார்.
விக்ரம் கொல்லப்பட்டதும் அவரை கைகளில் சுமந்துக் கொண்டு வந்து சக்ரவர்த்தி பிரகாஷ்ராஜ் முன்,” நான்தான் ஆதித்ய கரிகாலனை கொன்றேன்” என்று வாக்கு மூலம் அளிக்கும்போது திடுக்கிட வைக்கிறார்.

அருண்மொழி வர்மன் ஜெயம்ரவி இளவரசனுக்கே ஏற்ற மெருகுடன் முழுக்க முழுக்க மனதில் நிறை கிறார்.

பெருபழவேட்டையராக சரத்குமார் சிறிய பழுவேட்டையராக பார்த்திபன் , பாண்டியராக கிஷோர், அந்தணராக ஜெயராம் என எல்லோருமே கனக்கச்சிதம்.

நந்தினி, ஊமைராணி என இரு மாறுபட்ட வேடத்தில் படத்தின் மையப்புள்ளியாக வேடமேற்றி ருக்கும் ஐஸ்வர்யராயை தவிர வேறு யாரையும் அந்த வேடத்துக்கு யோசிக்க முடியவில்லை. இந்த வயதிலும் மயக்கும் விழிகளில் கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம் மீது ஐஸ்வர்யராய் வீசும் காமப்பார்வை இளவட்டங்களையும் மயக்குகிறது.

குந்தவை த்ரிஷா சோழ ராஜ்ஜியத்தை காக்கும் செயல் களில் இளவரசிக்கான பொறுப் புடன் நடித்திருக்கிறார்.

2ம்பாகத்தில் கார்த்தியுடன் ரொமான்ஸ் கொஞ்சம் குறைந்து விட்டது போலிருக்கிறது.
நந்தினி தனது சகோதரியா என்று தெரிந்து கொள்ள பிரகாஷ்ராஜிடம் த்ரிஷா துருவி துருவி கேட்கும் கேள்வியில் பெரிய ரகசியம் புலப்படுமோ என்ற ஆர்வம் எகிறுகிறது.

2ம் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கும், ஷோபிதாவுக்கும் அதிக வேலை யில்லை. கிளைமாக்சை ஒரு போருடன் முடிக்க வேண்டும் என்று முடித்ததுபோல் பொருந்தாத போராக அமைந்துவிட்டது.

லைகா சுபாஷ்கரன் அதிக பொருட் செலவில் இரண்டாம் பாகத்தை தயாரித்திருக்கிறார். மார்டன் மணிரத்னம் மண்ணின் வரலாறு பேசும் படத்தை மாசுபடாமல் இயக்கியிருக்கிறார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கானப்புயலாக மாறியிருக்கிறார். மெலடி பாடல் அக நக பாட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவதுதான் ஏமாற்றம்.

முதல் பாகத்தில் தந்த ஏமாற்றத் தை இரண்டாம் பாகத்தில் சரித்திர சான்று சொல்லும் அரங்குகள் மூலம் ஈடுசெய்திருக்கிறார் தோட்டாதரணி.

வசனங்கள் எதார்த்தமாகவே அமைந்துவிட்டது ஓரிரு முத்திரை வசனங்களை தந்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சோழர் காலகட்டத்துக்குள் ரசிகர்களை கொண்டு சென்றி ருக்கிறார்.

பொன்னியின் செல்வன் 2-
காலம் கடந்தும் பேசப்படும் படைப்பு.

 

 

Related posts

நடிகர் ருத்ரா அறிமுக விழாவில் வெற்றிமாறன் பற்றி கார்த்தி விமர்சனம்

Jai Chandran

பஹத் பாசில் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது

Jai Chandran

Saiyaara album has Mohit Suri ‘s 5 years collection

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend