Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஷூட் த குருவி (பட விமர்சனம்)

படம்: ஷூட் த குருவி

நடிப்பு: அர்ஜை,
சிவ ஷா ரா,
ஆஷிக் ஹுசைன்,
ராஜ்குமார் ஜி ,
சுரேஷ் சக்ரவர்த்தி,
மணி வைத்தி ,
சாய் பிரசன்னா,
ஜிப்ஸி நவீன்

தயாரிப்பு:கே. ஜே.ரமேஷ், சஞ்சீவ்குமார்

இசை : மூன்ராக்ஸ்

ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்

இயக்கம்: மதிவாணன்

ரிலீஸ்: shortflix O T T தளம்

பி ஆர் ஓ: யுவராஜ்

தாதா குருவியிடம் எடுபிடி வேலைக்கு சேரும் ராஜன் (அர்ஜை) ஒரு கட்டத்தில் தாதாவை கொன்று விட்டு தானே ரவுடி ஆவதுடன் கில்லர் குருவி ராஜனாகி றான். நடுரோட்டில் போலீசை சுட்டு தள்ளிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் குருவி யை அப்பாவி குணம் கொண்ட இளைஞன் அடித்து விட்டு தப்பிக்கி றான். அவனுக்கு நண்பன் ஒருவன் அடைக்கலம் தர அந்த இடத்துக்கு வரும் குருவி ராஜன், அப்பாவி யை கொல்ல சுடுகிறான் அதன் பிறகு நடப்பது என்ன என்பதை கிளைமாக்ஸ் ஆக்ஷன் டெம்போ வுடன் சொல்கிறது.

பிளாக் காமெடி பாணியில் ஒரு ரவுடியிசத்தை சொல்கிறது படம். பல படங்களில் வில்லன் வேடங் களில் நடித்தி ருக்கும் அர்ஜை இப்படத்தில் பிரதான வேடமான குருவி ராஜனாக நடித்திருக்கிறார்.

அர்ஜை கண்டாலே எல்லோரும் நடுங்கும்போது அப்பாவி இளைஞ னாக நடித்தி ருக்கும் ஆஷிக் உசைன் குருவி ராஜனை நேரில் பார்க்கும்போதும் பயப்படாமல் கோவை பாஷை யில் பேசி காமெடி பேச்சை கட்ட விழ்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

ஆஷிக்கிற்கு அடைக்கலம் தரும் ஷா ராவும் தன் பங்கிற்கு காமெடி செய்கிறார்

சொல்ல வந்த விஷயத்தை ஆக்ஷன் , கமர்ஷி யல் அம்சங் களுடன் சொல்லி யிருக்கிறார் இயக் குனர் மதிவாணன். குருவிக்கு இயக் குனர் தரும் விளக்கம் தாதாவு லகில் இப்படித் தான் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கே. ஜே.ரமேஷ், சஞ்சீவ்குமார் தயாரித்திருக்கின் னர்.

மூன்ராக்ஸ் இசை கதையோடு பயணிக்கிறது.

தாதா கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரண்டன் சுஷாந்த்.

ஷூட் த குருவி – காமெடி, ரவுடியிச இரட்டை சவாரி.

Related posts

ஆகஸ்ட்டிலும் கொரோனா ஊரடங்கு தொடரும்.. தமிழக முதல்வர் அறிக்கை முழுவிவரம்.. 

Jai Chandran

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் ஆகவில்லை..

Jai Chandran

FilterGold to be released on Oct 22nd in Theatres

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend