Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அயோத்தி (பட விமர்சனம்)

படம்: அயோத்தி

நடிப்பு: சசிகுமார், யஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஷ்ரானி, புகழ், அஞ்சு அஷ்ரானி, அத்வைத்

தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன்

இசை: என். ஆர்.ரகுநந்தன்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

இயக்கம்: ஆர்.மந்திர மூர்த்தி

பி ஆர் ஒ: நிகில் முருகன்

அயோத்தியில் வாழும் ஒரு எளிய குடும்பத்தின் தலைவி ஜானகி (அஞ்சு). மகள், மகனுடன் அன்பே உருவாக வாழ்கிறாள். ஆனால் அவளது கணவன் கடும் கோபக் காரர். . மனைவி, மகள், மகனிடம் கண்டிப்பு காட்டுவதுடன் கோபம் வந்தவுடன் அடித்து விடுகிறார். ஒரு சமயம் குடும்பத்துடன் ராமேஸ் வரம் சென்று தரிசனம் செய்ய எண்ணி புறப்படுகிறார். மதுரை வந்தறங்கியதும் அங்கிருந்து வாடகை கார் பிடித்து அதில் அழைத்துச் செல்கிறார். போகும் வழியெல்லாம் கார் டிரைவரிடம் சண்டை பிடிக்கும் அந்த நபரால் கார் நிலை தவறி விபத்துக்குள்  ளாகிறது. இதில் ஜானகி படுகாயம் அடைகிறார். அவரை மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்கின் றனர். வழியிலேயே ஜானகி இறக்கிறார். அவரது உடலை சொந்த ஊரான அயோத்திக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்கின் றனர். இருக்கும் பணமெல்லாம் காலியான நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஜானகி குடும்பத்துக்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். ஆனால் அது பெரும்பாடாக மாறு கிறது. இறுதியில் ஜானகியின் உடல் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்படுகிறதா இல்லையா என்பதற்கு நெகிழ்ச்சியுடன் படம் பதில் சொல்கிறது.

அயோத்தி என்றவுடன் ஏதோ மத பிரசார இந்துத்துவா படமாக இருக்கும் என்று எண்ணி தியேட்டரில் சென்றால் அது கல் மனதையும் கரைய வைக்கும் மத நல்லிணக்கம் சொல்லும் படமாக அமைந்திருப்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

சசிகுமார், யஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஷ்ரானி, புகழ், அஞ்சு அஷ்ரானி, அத்வைத் நன்றாக நடித்திருக்கின் றனர் என்று ஒருவரியில் கூறிவிட முடியாது. இவர்கள் கதாபாத் திரங்களுக்கு வழங்கி ருக்கும் நேர்மையான நடிப்புக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சசிகுமார் நட்புக்கு கைகொடுக்கும் மனிதர் என்று ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டது இப்படத்தில் அவரது குணமும் அப்படியே அமைந்திருப்பது கைகொடுக் கிறது.

கார் விபத்தில் இறந்த அஞ்சு அஷ்ராணியின் உடலை கண்டு மகள் ப்ரித்தி அஷ்ராணி கதறுவதும் ஒரு கட்டத்தில் தன் தந்தை தரும் டார்ச்சரை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரை பிடித்து தள்ளி “நீயெல்லாம் ஒரு மனுஷனா” என்று கேட்கம்போது அரங்கே அமைதியாகிவிடுகிறது.

சசிகுமார் அலட்டலே இல்லாமல் இயல்பான நடிப்பால் வாழ்ந்தி ருக்கிறார். படத்தில் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள் இருக் கின்றன. ஆனால் கிளை மாக்சில் மனம் மாறும் அந்த கண்டிப்பான தந்தை சசிகுமாரை கையெடுத்து கும்பிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க அவர் , “அப்துல் மாலிக்” என்று சொன்னதும் உடல் புல்லரித்துவிடுகிறது. இக்காட்சி
மதத்தின் பெயரால் பிரிவினை தூண்டு பவர்களுக்கு சாட்டையடி கொடுத்து அவர்களை ஒரு ஓரத்தில் மூட்டை கட்டி வைத்து விடும்.

அதேபோல் தாயின் உடலை பத்திரமாக விமானத்தில் கொண்டு செல்ல உதவிய சசிகுமாரை பார்த்து,’ அடுத்த முறை சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வருவேனோ இல்லையோ ஆனால் அப்துல் மாலிக்கை தரிக்க வருவேன் என்று” பிரீத்தி அஷ்ரராணி கூறுவதும் நெகிழ்ச்சியின் தொடர்ச்சி..

சிறுவன் அத்வைத் சென்டிமென்ட் டுக்கு உதவியிருக்கிறான்.
தந்தையாக நடித்திருக்கும் யஷ்பால் சர்மா தந்தை உருவில் ஒரு வில்லன்.

இப்படியொரு கதையை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஆர்.ரவீந் திரனுக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.  மதபிரிவினையை தூண்டும் இக்கால கட்டத்தில் இப்படியொரு படம் இயக்க யோசித்த இயக்குனர் ஆர்.மந்திர மூர்த்திக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவியும்.
இதுவொரு பயண கதையாக இருந்தாலும் குடும்ப சென்டி மென்ட்டை இவ்வளவு உணர்வு பொங்க திரைக்கதை அமைத்த விதம் ஆச்சர்யம் அளிக்கிறது.

என் ஆர்.ரகுநந்தன் இசையும், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் காதுகளையும் கண்களையும் குளிர வைக்கிறது.

அயோத்தி – மதம் தாண்டி மக்கள் மனம் கவரும்.

 

Related posts

ஹாட் ஸ்பாட் கதையை 2முறை கேட்ட நடிகை அம்மு அபிராமி

Jai Chandran

டங்கி” திரைப்பட அழகிய 2 போஸ்டர்கள்

Jai Chandran

கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend