Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ட்ரெண்டிங் ஆகும் பகாசூரன் பட பாடல்

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.

இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய் திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவ ராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்று கிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படம் வருகிற 17 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ” ஆனந்தம் கூத்தாடும் ” என்ற பாடல் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றதோடு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

▶️https://youtu.be/sR_ivgJKdZk

Related posts

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் யோகிபாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்

Jai Chandran

ஜீ5 தளத்தில் ஜெயம் ரவியின் அகிலன் வெளியீடு

Jai Chandran

பத்துதல (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend