Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மைக்கேல் (பட விமர்சனம்)

படம்: மைக்கேல்

நடிப்பு: சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, திவ்யா ஷா, வரலட்சுமி, கவுதம் மேனன்,

தயாரிப்பு: பரத் சவுத்ரி, புஷ்கர் ராவ் மோகன்

இசை: சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: கிரண் கவுசிக்,

இயக்கம்: ரஞ்சித் ஜெயக்கொடி

பி. ஆர் ஒ: சதீஷ் (AIM), சிவா

முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதைதான் மைக்கேல்.

சிறுவயதில் ஒரு நோக்கத்துடன் நகரத்துக்கு புறப்பட்டு வரும் மைக்கேல் ( சந்தீப் கிஷன்) நகரையே தன் கட்டுக்குள் வைத்தி ருக்கும் தாதா கவுதம் மேனன் மனதில் இடம் பிடிக்கிறார். அவரை ரவுடிகள் சூழ்ந்து தாக்கும்போது அவர் உயிரை காப்பாற்று கிறார் சந்தீப் கிஷன். இதையடுத்து தனது நம்பிக்கையான இடத்தில் சந்தீப் புக்கு இடம் கொடுக்கிறார். தனக்கு துரோகம் செய்த ஒரு நபரை கொல்ல சந்தீப்பை அனுப்பி வைக் கிறார் கவுதம் மேனன். இந்நிலை யில் திவ்ய ஷாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. அவரது காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திவ்யாவின் தந்தை தான் தான் கொல்ல வந்த நபர் என சந்திப்புக்கு தெரி கிறது. இதை யறிந்து தந்தையை கொல்ல வேண்டாம் என்று திவ்யா கெஞ்சு கிறார். அவருக்காக தந்தையை கொல்லாமல் விடுகிறார். இந்த விஷயம் கவுதம் மேனனுக்கு தெரியவர சந்தீப்பை கொல்ல ஆள் அனுப்புகிறார். இதன் முடிவு என்ன வாகிறது என்பதை துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

கே ஜி எப் பாதிப்பில் உருவான படம்தான் மைக்கேல். ஆனால் அது மலை அதில் துளிதான் மைக்கேல்.

சந்தீப் கிஷனுக்கு முதல் முழு ஆக்ஷன் படம் என்பதால் துணிச்ச லாக பல காட்சிகளில் நடித்தி ருக்கிறார். ஆனால் கதாபாத்திரத் துக்கு ஏற்ற தோற்றம் இல்லாதது மைனஸ். இதற்கு சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்ததற்கு பதில் தோற்றத்தில் இன்னும் வெயிட் போட்டு ஆஜானபாகுவாக காட்டியிருந்தால் எடுபட்டிருக்கும்.
திவ்யா ஷாவுடன் காதல் காட்சி களில் நெருக்கம் காத்திருக்கும் சந்தீப் அவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து சூடேற்றுகிறா ர்.
துப்பாக்கியால் சுட்டு மார்பை குண்டு துளைத்து இரத்தம் கொப்பளிக்க சந்திப்பை தூக்கி ஆற்றில் வீசிய பிறகும் அவர் உயிர் பிழைத்து வருவதும் சினிமாத் தனம்தான்.

திடீர் என்ட்ரீ தரும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார். அவரது ஜோடியாக வரும் வரலட்சுமியும் தன் பங்குக்கு அதிரடி காட்டுகிறார்.

கவுதம் மேனன் பக்கா வில்லனாக வருகிறார். ஸ்டைலான வில்லன் என்பதால் வேகம் காட்ட முடியவில் லை. மகன் சாகும்போதும் மனைவி கொல்லப்படும்போதும் எப்படி ரியாக்ஷன் காட்டுவதென்பது தெரியாமல் தவிக்கிறார். கவுதம் மேனன் ஸ்டைலான காதல் படங்கள் எடுக்கும் இயக்குனராக சென்ட்டம் வாங்கிவிடுகிறார் அவரையே ரொமான்ஸ் செய்யச் சொன்னால் ஜீரோ மார்க்தான் வாங்குகிறார்.

கவுதம் மேனன் நடிகர் ஆனதால் அவரது இயக்கத்தில் வர வேண்டிய பல ரொமான்ஸ் கதைகள் வராமல்போவது ரசிகர்களுக்கு இழப்பு.

படத்துக்கு ஜீவநாடி சாம் சி எஸ் அதிரடியான பின்னணி இசை. தியேட்டரைவிட்டு வெளியியே வந்தபிறகும் அவரது அதிரடி காதில் கேட்டுக் கொண்டே இருக் கிறது.

பரத் சவுத்ரி, புஷ்கர் ராவ் மோகன் தயாரித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கிரண் கவுசிக் கேங் ஸ்டர் கதைக்கு ஏற்ப ஈரமில்லா பின்னணி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

ரஞ்சித் ஜெயக்கொடி பான் இந்தியா பட முயற்சி ஓரளவு நிறை வேறியிருக்கிறது. லாஜிக் மீறல்கள் காலைப் பிடித்து இழுக் கிறது, தாய் சென்டிமென்ட் கைகொடுத்திருக்கிறது.

மைக்கேல் – மோசக் காரனுக்கு மோசக்காரன்.

Related posts

பிரதமர் மோடிக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்

Jai Chandran

நெக்ஸா அகாடமி விருதுகள்’ விழாவில் சாம் சி எஸ் க்கு பாராட்டு..

Jai Chandran

Salman & my showdown in Tiger 3 : Emraan Hashmi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend