Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

என்ஜாய் (பட விமர்சனம்)

படம்:என்ஜாய்

நடிப்பு: மதன்குமார் டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார்
நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா ஹாசின், சாருமிசா

தயாரிப்பு: எல் ,என், எச் , கிரியேஷன், கே. லட்சுமி நாராயணன்

இசை: கே எம் ராயன்

ஒளிப்பதிவு: கே என். அக்பர்

இயக்கம்: பெருமாள் காசி

பி ஆர் ஒ: குணா

ஐ ஏ எஸ் தேர்வில் இந்த முறை யாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் மதன்குமார், ஐ டி அலுவகத்தில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், மற்றொரு நண்பர் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர். மதன்குமார் சாய் தன்யாவை காதலிக்கிறார். விக்னேஷ் வீண் ஜம்பத்துக்காக பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி சக நண்பர்களை வெறுபேற்றுகிறார். மற்றொருபுறம் கல்லூரிக்கு படிக்க வரும் ஜீவி அபர்ணா, நிரஞ்சனா, சாருமிசா. விடுதியில் சக மாணவிகள் பந்தாவாக சுற்றி வருவதை கண்டு இவர்கள் மூவரும் ஏங்குகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்கி றார் சீனியர் மாணவி ஹாசின். ஹாசின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தவறான வழியில் சம்பாதித்து ஆடம்பரமாக செலவு செய்கிறார். அதை பார்க்கும் மற்ற மூன்று பேரும் தாங்களும் ஆடம்பரமாக வாழ தவறான வழியில் செல்ல துணிகின்றனர். அதற்காக கொடைக்கானல் செல்கின்றனர். மதன்குமார் மற்ற இரண்டு நண்பர்களும் குட்டிகளுடன் ஜாலியாக பொழுதை கழிக்க கொடைக்கானல் வருகின்றனர். வந்த இடத்தில் இந்த இரண்டு கோஷ்டியும் எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். அதிலிருந்து அவர்களால் மீள முடிந்ததா என்பதற்கு இரட்டை அர்த்தமும், அட்வைஸ் மழையும் பொழிய கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நாட்டுபுறத்திலிருந்து சிட்டிக்கு படிக்க வரும் ஜி வி அபர்ணா, சாருமிசா மற்றும் நிரஞ்சனா மூவரும் ஹாஸ்டலில் சீனியர் மாணவிகளிடம் ரேகிங்கில் சிக்கி அழுவதும் அவர்களுக்கு ஆறுதல் கூறும் மற்றொரு சீனியர் மாணவி ஹாசின் மனதில் இடம் பிடிக்கி றார். அவர் ஆடம்பரமாக செலவு செய்ய வீக் எண்ட் பார்ட்டிக்கு சென்று பணக்காரர்களுடன் ஜாலியாக இருந்து சம்பாதிப்பதாக கூறுவது ஷாக். அவரைபார்த்து மற்ற 3 பேரும் தாங்களும் அந்த பார்ட்டிக்கு வர தயாராக இருப்ப தாக சொல்வதும் அதற்கு முதலில் மறுக்கும் ஹாசின் பின்னர் அவர்களுக்கும் பார்ட்டிக்கு செல்ல ஏற்பாடு செய்து தரும்போது கேரக்டரை கெடுத்து கொள்கிறார்.

ஜீவி அபர்ணா, நிரஞ்சனா, சாருமிசா மூவரும் வீக் எண்ட் பார்ட்டியில் ஜாலியாக இருக்க செல்ல துணிவது சில பெண் களை தவறான வழிக்கு செல்ல ஐடியா தந்து தூண்டும் காட்சியா கவே இருக்கிறது.

இளவட்டங்களாக வரும் பத்மகுமார், டான்ஸர் விக்னேஷ், ஹரிஷ்குமார் மூவரும் இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரோ ஓவர். அதுவும் கொடைக்கானலில் ஜி வி அபர்ணா, நிரஞ்சனா, சாருமிசா ஆகியோருடன் மேல படுக்கிறீங் களா கீழ படுக்கிறீங்களா என்று டைரக்டாவே டயலாக் பேசி ஷகிலா பட ரேஞ்சுக்கு சென்றுவிடு கின்றனர்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்வதுபோல் கிளைமாக்ஸில் மூன்று ஹீரோயின்களுக்கும் பெண் டாக்டர் அட்வைஸ் தருவது போல் காட்டி ஒப்பேற்றியிருக் கின்றனர். இரட்டை அர்த்த வசனங்கள் இளசுகளை ஈர்க்க குறி வைத்து எழுதி இருப்பதாக அறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

எல். என். எச் கிரியேசன், கே லட்சுமி நாராயணன் தயாரித்தி ருக்கின்றனர்.

கே எம் ராயன் இசை பரவாயில்லை

கே.என். அக்பர் கேமிரா கொடைக் கானலை சுற்றிகாட்டியிருக்கிறது.

பெருமாள் காசி என்று பெய

ரை வைத்துக் கொண்டு அதற்கு நேர்மாறாக ஒரு செக்ஸ் காமெடி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

என்ஜாய் – செக்ஸ் மசாலா.

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

இடியட் (பட விமர்சனம்)

Jai Chandran

இட்லி கடை இட்லி சாப்பிட்ட இன்பம் இப்போது இல்லை – தனுஷ் உருக்கம்

Jai Chandran

காந்தி கண்ணாடி பட வெற்றி கொண்டாட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend