எனி டைம் மனி ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியி ருக்கும் படம் ‘தாதா’. யோகிபாபு, நிதின்சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது. தயாரிப்பா ளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் டிரைலரை வெளியிட தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான பாபுகணேஷ் பேசியதாவது:
தாதா படத்தில் நடித்த யோகிபாபு, நான் நான்கு சீன்கள்தான் நடித்திருக்கி றேன், ஹீரோவாக நடிக்க வில்லை காமெடியன்தான் என்று பேசி வருகிறார். இது வருத்தமான ஒன்று. நீங்கள் காமெடியன்தான் இல்லை யென்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் நடித்துள்ள படம் ஓட வேண்டும் தயாரிப் பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஒரு படத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வேலை செய்திருப்பார்கள். அந்த 200 பேரின் குடும்பங்களையும் நினைத்துப்பார்த்து நீங்கள் பேசவேண்டும். இந்தப்படத் தை பெரிய போராட்டத் திற்கு தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் வெளி யிடுகிறார். ‘தாதா’வில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரும் விரும்பும் படமாக இது இருக்கும்.
நடிகர் லொள்ளு சபா மனோகர் பேசியது:
ஒரு நடிகன் 4 சீன் நடித்தாலும் 40 சீன்கள் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கவேண்டும். ஒரு படத்தை பற்றி நீங்கள் எதையும் நிர்ணயிக்கக்கூடாது. அந்த வார்த்தையை நீங்கள் சொன்னால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவருமே பாதிப்படைவார்கள். யோகிபாபு பேசியது தவறு. தியேட்டர்கள் மூடப்பட்டுவரும் சூழ்நிலையில் தயாரிப்பாளர்களின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் வாங்கிய காசு ஜீரணமாகும்.
தயாரிப்பாளர் மதுரை செல்வம் பேசியது:
சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லாமே பெரிய படம்தான். எந்த படத்தில் நடித்தாலும் நடிகர்கள் ஓசியிலா நடிக்கி றார்கள். எல்லா படங்க ளுமே கேமரா வைத்துதான் எடுக்கப்படுகிறது. எல்லா படங்களும் திரையில்தான் திரையிடப்படுகிறதே தவிர தரையில் இல்லை. கின்னஸ் கிஷோர் தயாரித் துள்ள இந்த ‘தாதா’ வெற்றி படமாக அமைய வாழ்த்துகி றேன்.

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசியது:
தாதா என்றால் மஹாராஷ் டிராவில் சிறப்பானவர், மூத்தவர், நன்மை செய்பவர் என்று அர்த்தம். வங்காளத் தில் மரியாதைக்குரியர் என்று அர்த்தம். ஆனால் தமிழில்தான் அதற்கு வேறொரு அர்த்தம் இருக் கிறது. திரைப்பட தயாரிப்பா ளர்களும் சால்மன் மீனும் ஒன்று. சால்மன் மீன் ஆற்றில்தான் பிறந்து கடலுக்குப் போகும் பிறகு முட்டையிடுவதற்காக மீண்டும் ஆற்றுக்கே வந்துவிடும். அதுபோல் தான் சினிமா தயாரிப்பா ளர்கள் எங்கே சென்றாலும் மறுபடியும் சினிமாவுக்கு வந்துவிடுவார்கள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக போராளி இல்லை. அதற்கு காரணம் உறுப்பினர்கள் தான். பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டால் எப்படி போராளி தலைவராக வருவான்?
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பேசியது:
இந்தப்படத்தில் நடித்த நண்பர்கள் யோகிபாபு, நிதின்சத்யா மற்ற நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர்கள் வராதது வருத்தம் தரும் நிகழ்வு; கண்டனத்திற்குரிய செயல்பாடு. நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இது இரண்டு ஹீரோ கதை தான். யோகிபாபு படம் முழுக்க வருகிறார். இந்தப்படத்தில் நடித்து விட்டு டப்பிங் பேச மறுத் தார். நான்தான்
சமரசம் செய்து பேசவைத் தேன். தயாரிப்பாளருடன் என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் நீங்கள் நடித்த படம் பற்றி நீங்களே தவறாக பேசக்கூடாது. படம் வெளி யாக உதவி புரிந்திருக்க வேண்டும் தயாரிப்பாளரின் கஷ்டத்தில் தோள் கொடுத் திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நடிக்க வில்லை என்று சொல்லி தவிர்க்கக்கூடாது. சினிமா வில் கஷ்டப்பட்டு வளர்ந் துள்ள நடிகர் யோகிபாபு இதுபோல் செய்யக்கூடாது.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கின்னஸ் கிஷோர் பேசியதாவது:
வரும் 9ஆம் தேதி ‘தாதா’ திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யோகிபாபு 4 சீனில் வருகி றாரா? 40 சீனில் வருகிறாரா என்று நீங்கள்தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தில் உதவியாக நின்ற என்னுடைய படவிழா வுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வராதது வருத்தமளிக் கிறது. யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்தி ருக்கிறேன். அந்த நன்றி கூட இல்லாமல் நடந்து கொள்கிறார். ஊடகங்களுக்கு இப்ப சொல்றேன் இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்தி ருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய் விடுவாரா? வியாபார நேரத்தில் படம் வாங்க முன் வந்தவர்களை அவர்க ளுக்கு போன் செய்து அந்தப் படத்தை வாங்கா தீர்கள் என்று கெடுதல் நினைத்தார். எனக்கு இன்னொரு படம் படம் நடித்துக்கொடுப்பதாக சொல்லி பணமும் வாங்கி யிருக்கிறார். ஆனால் இப்போது அந்த பணத்தை யும் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. தாதா வியாபாரத்தையும் கெடுத் தார். அதனால் எனக்கு படம் நடித்துக்கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தில் புகார் கொடுத்துள் ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.”
விழாவின் முடிவில் மேடையில் இருந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக குரல் எழுப்பி யோகிபாபுவுக்கு கண்டம் தெரிவித்தனர்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு ஆர்.எச்.அசோக்
இசை கார்த்திக் கிருஷ்ணா. எடிட்டர் நாகராஜ். நடனம் பவர் சிவா. கலை இயக்குனர் கே கே விஜய கோபால்.
மக்கள் தொடர்பு மணவை புவன்.
தயாரிப்பு எனி டைம் மணி பிலிம்ஸ்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் கின்னஸ் கிஷோர்.
