Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப் பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளி யிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டி ருக்கிறார்.

‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக் கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரிய சாமி நடித்திருக்கிறார். இவர் களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக் கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டிருக்கிறது. இதுவரை செய்தி ராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

Related posts

ஜனாதிபதியிடம் தேசிய விருது பெற்றார் சூர்யா

Jai Chandran

இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ-திரில்லர் ராதே ஷியாம் விரைவில்

Jai Chandran

First Look of Sathyaraj starrer ‘My Perfect Husband’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend